20.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்,
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.
போற்றி - யாவராலும் போற்றப்படுபவனே!
அருளுக நின் ஆதியாம் பாதமாலர் - எல்லாவற்றிற்கும் மூலமான நின் திருவடிகளை எமக்கு அருள்வாயாக!
அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் - எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் தளிர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக!
எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் - எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய பாதங்களை போற்றுகிறோம்!
எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் - எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மென்மையான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்!
எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் - எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளை போற்றுகிறோம்!
மால் நான்முகனும் காணாத புண்டரிகம் - திருமாலும் நான்முகனும் காண இயலாத தாமரை போன்ற பாதங்களை போற்றுகிறோம்!
யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள் - எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் பொன்னடிகளை போற்றுகிறோம்!
யாம் மார்கழி நீர் ஆடு - நாங்கள் உன்னைப் பாடிப் புகழ்ந்து மார்கழி நீராடுகிறோம்!
யாவராலும் போற்றப்படும் சிவபெருமானே! எல்லாவற்றிற்கும் மூலமான உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எப்பொருளுக்கும் முடிவிடம் ஆகும் உன் திருவடிகளை எமக்கு அருள்வாயாக! எல்லாவற்றிற்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் முதற்காரணமான உன் அழகிய திருவடிகளைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் உன் மலர் போன்ற மென்மையான பாதங்களைப் போற்றுகிறோம்! எல்லா உயிர்களும் லயம் அடையும் உன் இரு திருவடிகளைப் போற்றுகிறோம்! திருமாலும் நான்முகனும் கண்டறியாத உன் தாமரை போன்ற பாதங்களைப் போற்றுகிறோம்! எங்களை உய்விக்க வேண்டி எங்களை ஆட் கொண்டு அருளும் உன் பொன்னடிகளைப் போற்றுகிறோம்! இவ்வாறு உன்னைப் பலவாறு போற்றி நாங்கள் மார்கழி நீராடுகிறோம்! உன் திருவடிகளைக் கொண்டு எங்களைக் காத்தருளல் வேண்டும்!
பொருளுக்கு நன்றி : Thiruppaavai and Thiruvempaavai by S. Srinivasan
படத்துக்கு நன்றி : http://somnathmandirblm.com/dwnload/wallpapers/shiva/
[இத்துடன் திருவெம்பாவை நிறைவு பெறுகிறது. கணபதிக்கும், ஈசனுக்கும், என் அன்னைக்கும், படித்த, படிக்கவிருக்கும், பின்னூட்டமிட்ட, இடவிருக்கும், அன்பர்களுக்கும், நன்றி!]
--திருச்சிற்றம்பலம்--
http://uk.youtube.com/watch?v=swlkuwrYXTE
ReplyDeleteThe last stanza is attempted in Raag madhyamavathi. here.
Thiruchitrambalam.
Thennadudaya Sivane Potri.
Ennaattavarkkum iraivaa potri.
Pongal Vazhthukkal.
subbu rathinam.
///தமிழ் பிடிக்கும்! படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)///
ReplyDeleteசொன்னதை செய்யும் கவிநயா, தொடரட்டும் தங்கள் சீரிய பணி ஈண்டு. பெருகட்டும் அவனருள் மேதியினில் நீண்டு.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
பொங்கல் நல்வாழ்த்துகள்
இனிமையாக நிறைவு செய்தமைக்கு வந்தனங்கள் கவிநயக்கா. இன்னும் பலகாலம் சிறக்கட்டும் தங்கள் தொண்டுகள்.
ReplyDeleteசுப்புரத்தினம் ஐயாவின் பாடல் அசைபடங்கள் அருமை. அழகாக மத்யமாவதியில் மங்களம் செய்த பாங்கு நிறைவு!
ReplyDeleteவாங்க சுப்பு தாத்தா. நீங்களும் கூடவே வந்திருந்து உடனுக்குடன் பாடித் தந்தமைக்கு நன்றிகள் பல.
ReplyDelete//சுப்புரத்தினம் ஐயாவின் பாடல் அசைபடங்கள் அருமை. அழகாக மத்யமாவதியில் மங்களம் செய்த பாங்கு நிறைவு!//
அழகாகச் சொன்ன ஜீவாவையும் வழிமொழிகிறேன்.
//சொன்னதை செய்யும் கவிநயா, தொடரட்டும் தங்கள் சீரிய பணி ஈண்டு. பெருகட்டும் அவனருள் மேதியினில் நீண்டு.
ReplyDeleteதிருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்//
இறைவனுக்கு நன்றி. தொடர்ந்து வந்தமைக்கும் வாழ்த்துக்கும் உங்களுக்கு நன்றி, கபீரன்பன் ஐயா.
//இனிமையாக நிறைவு செய்தமைக்கு வந்தனங்கள் கவிநயக்கா. இன்னும் பலகாலம் சிறக்கட்டும் தங்கள் தொண்டுகள்.//
ReplyDeleteவாங்க ஜீவா. தொடர்ந்த வாசிப்பிற்கு உங்களுக்கும் நன்றிகள்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடிச்ச திருவெம்பாவைப் பதிகம்-க்கா! தமிழ் அர்ச்சனையும் இருக்கு பாருங்க! அத்தனை போற்றியும் திருவடிகளின் மேலே தான்!
ReplyDelete//போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்//
இப்போ தெரியுதுங்களா ஏன் பிரளயம் முடிந்து, கண்ணன் ஆலிலை மேல் பாதம் சூப்புகிறான் என்று!
தொடர்ந்த திருவெம்பாவைப் பதிவுகளுக்கு நன்றி-க்கா!
ReplyDeleteஇன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//எனக்கு மிகவும் பிடிச்ச திருவெம்பாவைப் பதிகம்-க்கா! தமிழ் அர்ச்சனையும் இருக்கு பாருங்க! அத்தனை போற்றியும் திருவடிகளின் மேலே தான்!//
ReplyDeleteஆமாம், வெகு அழகான பதிகம்.
//தொடர்ந்த திருவெம்பாவைப் பதிவுகளுக்கு நன்றி-க்கா!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!//
வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணா.
ஏற்ற பணியை ஒரு தவமாய் மேற்கொண்டு நிறைவாகச் செய்து விட்டீர்கள். என்றும் எம்பெருமான் உங்களைக் காத்திட வாழ்த்துகிறேன்.
ReplyDeleteராமலஷ்மி அவர்கள் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்..
ReplyDeleteநிச்சயமாக இது ஒரு தவம் தான்!
இந்தண்டை அந்தண்டை நோக்கம் சிதறி விடாமல் தொடர்ந்து மேற்கொண்ட தவம்!
மனசுக்கு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அந்த நிறைவு எங்களுக்கும் ஏற்பட்டது.
அவன் அருளால் அவன் தாள் போற்றி!
தொடரும் பணிகள் அவன் அருளால் சிறக்கட்டும்!
உங்களுக்கு மிக்க நன்றி.
//என்றும் எம்பெருமான் உங்களைக் காத்திட வாழ்த்துகிறேன்.//
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி.
வாருங்கள் ஜீவி ஐயா. உண்மையில் திருவெம்பாவை எழுத ஆரம்பித்த நாள் முதலாய் பலவித இடர்பாடுகள். அதன் காரணமாக, தினம் முடியுமோ இல்லையோ என்ற தவிப்பில், சில பதிவுகளை நேரம் கிடைத்த போதே schedule பண்ணி வைத்துக் கொண்டேன் என்பதே உண்மை :(
ReplyDelete//தொடரும் பணிகள் அவன் அருளால் சிறக்கட்டும்!//
அன்புக்கு மிக்க நன்றி ஐயா.
திருப்பாவையை அடிக்கடி படித்தாலும் திருவெம்பாவையை வருடாவருடம் மார்கழியில் தான் படிக்க முடிகிறது. இந்த வருடம் உங்கள் தயவால் நடந்தேறியது. மிக்க நன்றி அக்கா.
ReplyDelete//திருப்பாவையை அடிக்கடி படித்தாலும் திருவெம்பாவையை வருடாவருடம் மார்கழியில் தான் படிக்க முடிகிறது. இந்த வருடம் உங்கள் தயவால் நடந்தேறியது. மிக்க நன்றி அக்கா.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி குமரா. இறையருளால் நடந்தேறியது. தொடர்ந்த வருகைக்கு உங்களுக்கும் மிகுந்த நன்றிகள்.
திருவடி தீக்ஷை(Self realization)
ReplyDeleteஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454