Showing posts with label தமிழ் புத்தாண்டு. Show all posts
Showing posts with label தமிழ் புத்தாண்டு. Show all posts

Tuesday, April 14, 2015

புத்தாண்டு வாழ்த்துகள்!


இன்று தொடங்கும் மன்மத ஆண்டு, அனைவருக்கும் இனியதாக அமையட்டும்!


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்! 

--கச்சியப்ப சிவாச்சாரியார்


அன்புடன்
கவிநயா


Monday, April 14, 2014

ஜயம் உண்டாகட்டும்!


அனைவருக்கும் புதிய, இனிய, தமிழ் 'ஜய' வருடவாழ்த்துகள்!

கிழக்கு வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!



சித்திரம் போலவே வண்ண வண்ணப் பூக்கள் 
   சிங்காரமாகவே பூத்திருக்க…

கத்தரி வெயிலுக்குக் கட்டியம் கூறியே 
   சித்திரை மாசம் வந்ததடி…

வானில் வலம் வந்த மேகக் கூட்டம் எல்லாம் 
   மாயாஜாலம் போலே மறைஞ்சதடி…

அமாவாசை இரவில் பௌர்ணமி நிலவாய் 
   வாழ்வில் ஒளி வீச வந்ததடி…



கிழக்கு வெளுத்ததடி! கீழ்வானம் சிவந்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!



வாசலிலே பல வண்ணக் கோலமிட்டு 
    விதவிதமாகவே அழகு செய்வோம்!

பலவிதச் சுவையுள்ள வாழ்க்கையைப் போலவே 
    அறுசுவை உணவுகள் செய்திடுவோம்!

வெற்றியை இலக்காய் கொண்டிடுவோம்! நாம் 
    முயற்சிப் படிகளைக் கட்டிடுவோம்!

வாழ்வில் யாவருமே வளர்ந்து இன்பம் பெற 
     இறைவன் அடிகளைப் பணிந்திடுவோம்!



கிழக்கு வெளுத்ததடி! சூரியன் முளைத்ததடி!

புதுவருடம் பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!


--கவிநயா

Thursday, April 15, 2010

புத்தாண்டு வாழ்த்து!



சித்திரைத் திங்களுடன் சேதி வந்தது;
முத்திரை பதிக்கும் காலம் கூட வந்தது!

புத்தம் புது வருஷம் பிறந்து விட்டது;
நித்தம் இன்பம் தர வந்து விட்டது!

சுற்றிச் சேர்ந்த இருள் விலகி விட்டது;
வெற்றி ஒளி எங்கும் படர்ந்து விட்டது!

குற்றம் குறை மறந்து ஒன்று கூடுவோம்;
சுற்றம் சூழ வந்து சிந்து பாடுவோம்!

சற்றும்சோ ராமல் நாளும் உழைத்து வாழுவோம்;
கற்ற பாடங் களால் வாழ்வைப் பேணுவோம்!

சித்தம் எல்லாம் கனிந்த அன்பு பூணுவோம்;
யுத்தம் என்பதில்லா வையம் காணுவோம்!!


--கவிநயா

பி.கு. கொஞ்சம் தாமதமாயிருச்சு. பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)