"சிவாஜி வாயில ஜிலேபி"
இந்த தலைப்புல தொடர் பதிவு எழுதணும்னு சொன்னோன்ன எனக்கு ஒண்ணுமே புரியல (என்னை மாட்டி விட்ட ராமலக்ஷ்மி வாழ்க!). சிவாஜி தெரியும். ஜிலேபி தெரியும். அவர் வாயில இவங்கள எப்படிங்க போடறது!
உண்மைய சொன்னா ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதுங்கோ! தெரிஞ்ச மாதிரி இருக்கும் ஆனா தெரியாம போயிடும் :) ஆனா நம்ம வல்லிம்மாவுக்கு தெரியாம இருக்குமா? அதனாலதான் அவங்க பதிவுல இருந்து ஜிலேபிய (அதாவது படத்த) சுட்டேன்! நன்றி, வல்லிம்மா!
இந்த உலகத்துல யார் யாருக்கு என்ன கிடைக்கணும்னு ஆண்டவன் ஏற்கனவே தீர்மானிச்சு வச்சிருக்கான்னு சொல்லுவாங்க! அரிசில கூட நமக்குரிய அரிசின்னா நம்ம பேரு எழுதி இருக்குமாம்! நம்ம பெரியவர் ரிஷானு அடிக்கடி சொல்ற பொன்மொழி - நமக்குன்னு உணவும் நீரும் எங்கெல்லாம் எழுதியிருக்கோ அங்கெல்லாம் நாம போய்த்தான் ஆகணும் - அப்படிங்கிறது. ஜிலேபி மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன! எத்தனை பேரு சிவாஜிங்கிற பேரை வச்சுக்கிட்டாலும், இறைவன் அவங்கவங்களுக்கு உள்ள ஜிலேபியையும் தீர்மானிச்சுத்தானே வச்சிருப்பார்! இந்த ஆழமான(!) சிந்தனையால் ஏற்பட்டதுதான் கீழ இருக்கிற பாட்டு!
உலகத்தில் உள்ள சிவாஜியெல்லாம்
இங்கே வாருங்கள்!
உங்களுக்கெனவே காத்திருக்கின்ற
ஜிலேபியை பாருங்கள்!
இந்த சிவாஜிக்கு இந்த ஜிலேபியென
இறைவன் எழுதி வைத்தான்!
அந்த ஜிலேபியே அவரவர் அடைவார்
உண்மை உணருங்கள்!
இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய கருத்து யாதெனில், "உனக்குக் கிடைக்கணும்னு இருக்கது கிடைக்காம போகாது. ஆனா உனக்கு கிடைக்காதுன்னு இருந்தா, நீ எத்தனை காலம் தலைகீழா நின்னாலும் கிடைக்காது!".
அதனால மக்களே! உங்க பேர் போட்டது உங்களுக்கு கிடைச்சா அதை வச்சுக்கிட்டு சந்தோசமா இருங்க! மத்தவங்க பேர் போட்டது கிடைக்குமான்னு அலைஞ்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! அம்புட்டுதாங்க!!
(இதை எங்கயோ கேட்ட மாதிரி இருந்தா, நான் பொறுப்பில்லைங்க! :)
என் வேண்டுகோளுக்கிணங்கி அடுத்த சுத்து ஜிலேபி சுத்த தயாராக இருக்கும் என்னுடைய ஆபத்பாந்தவர்களான ஜிரா, சஞ்சய், மற்றும் கேயாரெஸ்ஸை வருக வருக என வரவேற்கிறேன்!!
--கவிநயா
//உலகத்தில் உள்ள சிவாஜியெல்லாம்
ReplyDeleteஇங்கே வாருங்கள்!
உங்களுக்கெனவே காத்திருக்கின்ற
ஜிலேபியை பாருங்கள்!
இந்த சிவாஜிக்கு இந்த ஜிலேபியென
இறைவன் எழுதி வைத்தான்!
அந்த ஜிலேபியே அவரவர் அடைவார்
உண்மை உணருங்கள்!//
ஆழமான அர்த்தமுள்ள கவி பாடி அசத்திட்டீங்க கவிநயா, நன்றி நன்றி!
//"உனக்குக் கிடைக்கணும்னு இருக்கது கிடைக்காம போகாது. ஆனா உனக்கு கிடைக்காதுன்னு இருந்தா, நீ எத்தனை காலம் தலைகீழா நின்னாலும் கிடைக்காது!"//.
ReplyDelete//ஜிலேபியில் இருக்கு சூட்சமம்!!//
இந்த 'ஜிலேபி'[சூட்சமம்] நம்ம சூப்பர் ஸ்டார்['சிவாஜி'(ராவ்)] 'வாயிலே' வந்து தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சென்றடந்தது என்பது எல்லோருக்கும்
தெரியும்.
தலைப்புக்கு இன்னொரு விதமான ஜஸ்டிஃபிகேஷன். சபாஷ் கவிநயா!
//(இதை எங்கயோ கேட்ட மாதிரி இருந்தா, நான் பொறுப்பில்லைங்க! :)//
ReplyDeleteஎத்தனை முறை கேட்கிறோமோ அத்தனைக்கு அத்தனை ஆழப் பதியும் சூட்சமமாச்சே. நல்ல விஷயங்களை (யார் சொன்னதானால் என்ன?) மறுபடி மறுபடி மக்களிடம் கொண்டு செல்வதில் தப்பேயில்லை கவிநயா!
// உங்களுக்கெனவே காத்திருக்கின்ற
ReplyDeleteஜிலேபியை பாருங்கள்!
இந்த சிவாஜிக்கு இந்த ஜிலேபியென
இறைவன் எழுதி வைத்தான்!
அந்த ஜிலேபியே அவரவர் அடைவார்
உண்மை உணருங்கள் //
பரியினும் ஆகாவாம் பாலஅல்ல, உய்த்துச்
சொரியினும் போகா தம
என்பார் வள்ளுவர். நமக்கு உரியது அல்லாத பொருளைக் காத்தாலும்
நிலைக்காது. தமக்கு உரியதை வேண்டாம் என்று விலக்கினாலும்
போகாது.
ஜிலேபி நமக்குக் கிடைப்பது கடவுள் அமைத்து வைத்த மேடையிலே.
கடவுள் அமைத்துவைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதிவைத்தானே தேவன் அன்று
http://www.musicindiaonline.com/p/x/JUfg.VV4t9.As1NMvHdW/
என் அம்மா என்றோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
"அடேய் சூரி ! விளக்கெண்ணையை தடவிக்கொண்டு
ரோடிலே புரண்டாலும் ஒட்டறது தாண்டா ஒட்டும் "
ஜிலேபி ஒரு பூஜியம் போல இருக்கிறது என்றாலும்
அதற்குள்ளே ஓரு தத்துவம் அடங்கியிருக்கிறது.
கவி சொன்ன வார்த்தைகளிலே =இப்
புவியே அடங்கியிருக்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு. Breaking News
உங்கள் ' கண்ணா ' பாட்டை எனது பேத்தி ந்யூ ஜெர்சி தனது பள்ளியில் பாடி பாராட்டுதலைப் பெற்றிருக்கிறாள்.
All Credit goes to you only.
God Bless you and your family
//அரிசில கூட நமக்குரிய அரிசின்னா நம்ம பேரு எழுதி இருக்குமாம்! நம்ம பெரியவர் ரிஷானு அடிக்கடி சொல்ற பொன்மொழி //
ReplyDeleteஇந்த பெரியவன் மட்டும் என் கைல மாட்டனும்.. அப்பால கீது அவனுக்கு.
இப்போ காதல் ஜாதி மக்கள் ஒரே அரிசியில 2 பேர் எழுதி வச்சிகிறாங்க. அப்போ கடவுள் இவ்ளோ கஞ்சனா? :P
//- நமக்குன்னு உணவும் நீரும் எங்கெல்லாம் எழுதியிருக்கோ அங்கெல்லாம் நாம போய்த்தான் ஆகணும் - அப்படிங்கிறது.//
அதுக்கு அட்ரஸ் யார் தருவாங்களாம்? :(
//உலகத்தில் உள்ள சிவாஜியெல்லாம்
ReplyDeleteஇங்கே வாருங்கள்!
உங்களுக்கெனவே காத்திருக்கின்ற
ஜிலேபியை பாருங்கள்!
இந்த சிவாஜிக்கு இந்த ஜிலேபியென
இறைவன் எழுதி வைத்தான்!
அந்த ஜிலேபியே அவரவர் அடைவார்
உண்மை உணருங்கள்!//
அம்மா இங்கே வா வா...
ஆசை முத்தம் தா தா...
என்ற ஷகிராவின் சமீபத்திய பாடலின் தழுவல் நன்றாக இருக்கிறது.. :P
//என் வேண்டுகோளுக்கிணங்கி அடுத்த சுத்து ஜிலேபி சுத்த தயாராக இருக்கும் என்னுடைய ஆபத்பாந்தவர்களான ஜிரா, சஞ்சய், மற்றும் கேயாரெஸ்ஸை வருக வருக என வரவேற்கிறேன்!!//
ReplyDeleteஓ.. என்னுடன் சேர்ந்து பலியிட படும் ஆடுகள் இவர்கள் தானா? :(
அனுதாபங்கள்... என்ன தல கேஆரெஸ்.. வசமா சிக்கிட்டிங்க போல? :)
.... நாம் பலி இடக் காரணம் ஒரு கடங்காரன்... சங்கத்தில் வைத்து ஆப்பு வைப்பது போதாமல் வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் ஆப்பு வைக்கிறான்... :(
சரிங்க கவிநயா! இனிமே நீங்க சொன்ன மாதிரியே என்பேர்போட்டிருக்கும் பொருளை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியா இருக்கிறேன். அதெல்லாம் இருக்கட்டும். இப்போ ஒரு ஜிலேபி கிடைக்குமா?
ReplyDeleteஆமாங்க ஒன்னு நினைச்சேன் அதான் சொல்லலாம்ன்னு.. தத்துவங்க இது தத்துவம்.. :))
ReplyDelete//நம்ம பெரியவர் ரிஷானு அடிக்கடி சொல்ற பொன்மொழி //
ReplyDeleteஅதுக்காக அதை இங்கே என் பெயர் கூடப் போட்டு இன்னும் பெரிய ஆள் ஆக்கிட்டீங்கப்பா..
பார்க்குறவங்க என்னை ஒரு சாமியார்ன்னு நெனச்சுக்கப் போறாங்க.. :)
//அதனால மக்களே! உங்க பேர் போட்டது உங்களுக்கு கிடைச்சா அதை வச்சுக்கிட்டு சந்தோசமா இருங்க!//
அதான் என் பேர் போட்டுட்டீங்கள்ல..அதனால நான் சந்தோஷமா இருக்கணும் னா என் பேர் போட்ட ஜிலேபியை உடனே எனக்கு பார்சல் பண்ணி அனுப்பிடுங்க.. :P
//இந்த பெரியவன் மட்டும் என் கைல மாட்டனும்.. அப்பால கீது அவனுக்கு.//
ReplyDeleteஏனுங்க சஞ்சய்..நீங்க கூட ஜிலேபிதான் தரப்போறீங்களா? :P
ஜிலேபினாலே சுத்தல் இருக்கனும் என்பதை அறிந்து தத்துவமாக்கியது அருமை கவிநயா !
ReplyDeleteஆகா. அருமையான தத்துவம் அக்கா.
ReplyDeleteஇன்னொன்னும் சொல்லணும். பயந்துக்கிட்டே படிச்சுக்கிட்டு வந்தேன். கடைசி வரிகளைப் படித்தவுடன் அப்பாடா என்று இருந்தது. :-)
ஆமா இந்த ஜிலேபி பதிவு எப்போ முடியும் தாங்கமுடியல சாமிஇஇஇஇ....
ReplyDelete//ஆழமான அர்த்தமுள்ள கவி பாடி அசத்திட்டீங்க கவிநயா, நன்றி நன்றி!//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி! :)
வாங்க சுப்புரத்தினம் ஐயா!
ReplyDeleteஉங்கள் அன்னையார் சொன்னது ரொம்ப உண்மை! பொருத்தமான குறள் வேற சொல்லி அசத்திட்டீங்க!
//உங்கள் ' கண்ணா ' பாட்டை எனது பேத்தி ந்யூ ஜெர்சி தனது பள்ளியில் பாடி பாராட்டுதலைப் பெற்றிருக்கிறாள். //
அப்படியா! மிக்க மகிழ்ச்சி. அவளுக்கு என் வாழ்த்துக்கள்!
//God Bless you and your family//
மிக்க நன்றி, ஐயா!
வாங்க சஞ்சய்!
ReplyDelete//அதுக்கு அட்ரஸ் யார் தருவாங்களாம்?//
நீங்க ஒண்ணும் தேடி அலைய வேணாம். எல்லாம் உங்கள தேடி வரும். ரிஷான்கிட்ட பேசுங்க. அவரு சொல்லித் தருவாரு!
//என்ற ஷகிராவின் சமீபத்திய பாடலின் தழுவல் நன்றாக இருக்கிறது.. :P//
அச்சச்சோ! நான் அந்த பாட்டெல்லாம் கேட்டதே இல்லீங்க :(
//என்ன தல கேஆரெஸ்.. வசமா சிக்கிட்டிங்க போல? :)//
கேஆரெஸ்ஸாவது, சிக்கறதாவது... அவர்கிட்ட நாம சிக்காம இருந்தா சரி :)
(அவரே போனாப் போகுதுன்னு ஒத்துக்கிட்டிருக்கார்... நீங்க வேற...)
//இப்போ ஒரு ஜிலேபி கிடைக்குமா?//
ReplyDeleteஎன்ன அகரம்.அமுதா, இப்படிக் கேட்டுட்டீங்க! நேரா "___ ஸ்வீட்ஸ்" க்கு போய் வேணுங்கிற ஜிலேபிய வாங்கிக்கோங்க! உங்களுக்கில்லாததா? :)
//என் பேர் போட்ட ஜிலேபியை உடனே எனக்கு பார்சல் பண்ணி அனுப்பிடுங்க.. :P//
ReplyDeleteஉங்க பேர் போட்டதை நான் இங்கேர்ந்து அனுப்பினா, அது அங்க வந்து சேர்றதுக்குள்ள பேரு ரிப்பேராயிடும் :)
//பார்க்குறவங்க என்னை ஒரு சாமியார்ன்னு நெனச்சுக்கப் போறாங்க.. :)//
ஆமாமா. நீங்க வ.வா.ச. ல பொண்ணுங்களுக்கு பாடம் எடுக்கறதப் பார்த்தப்புறம் எல்லாரும் அப்படித்தான் நெனக்கிறாங்க!
//ஜிலேபினாலே சுத்தல் இருக்கனும் என்பதை அறிந்து தத்துவமாக்கியது அருமை கவிநயா !//
ReplyDeleteநன்றி சதங்கா! :)
//ஆகா. அருமையான தத்துவம் அக்கா. //
ReplyDeleteநன்றி, குமரா!
//கடைசி வரிகளைப் படித்தவுடன் அப்பாடா என்று இருந்தது. :-)//
போனாப் போகுது; நிம்மதியை அனுபவிச்சுக்கோங்க, இப்போதைக்கு! :)
//நல்ல விஷயங்களை (யார் சொன்னதானால் என்ன?) மறுபடி மறுபடி மக்களிடம் கொண்டு செல்வதில் தப்பேயில்லை கவிநயா!//
ReplyDeleteஇதில் நானும் உங்க கட்சி, ராமலக்ஷ்மி!
//தத்துவங்க இது தத்துவம்.. :))//
ReplyDeleteவாங்க கயல்விழி! கயல்விழி, மான்விழி, இந்த மாதிரி பெயரெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! :) வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
//ஆமா இந்த ஜிலேபி பதிவு எப்போ முடியும் தாங்கமுடியல சாமிஇஇஇஇ....//
ReplyDeleteஎன்னங்க பண்றது? பதிவர்கள் இருக்கற வரை நீளும் போலத்தான் இருக்கு. பிடிக்கலைன்னா சாப்பிடாதீங்க :)
பேரிலேயே கவியும் நயமும் இருக்கையில் அவைகள் உங்கள் பதிவிலும் இருப்பதில் வியப்பென்ன?
ReplyDeleteகவிநயா!!
//உனக்கு கிடைக்கணும்னு இருக்கது.............//(யம்மா! முழுசும் எழுதுவதுக்குள் மூசு வாங்கிடுமே!! இந்த தத்துவம் எத்தனையோ பேர் சொல்லிக்கிறாங்கோ.
ஆனால் சொல்வது யார் என்பதைப் பொறுத்து புத்தியில் பதியும், உள்குத்து
குத்தாமல் மொக்கையையும் சுவாரஸ்யமாக போட்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!
சஞ்சய்!
ReplyDeleteஏன் நீங்க பலிகடா என்று நினைக்கிறீர்கள்? செமயா மொக்கை போட்டு எல்லோரையும் பலி போட்டுங்களேன்! எப்படி நம்ம ஐடியா?
/இந்த ஆழமான(!) சிந்தனையால் ஏற்பட்டதுதான் கீழ இருக்கிற பாட்டு!/
ReplyDelete:-))
/உலகத்தில் உள்ள சிவாஜியெல்லாம்
இங்கே வாருங்கள்!
உங்களுக்கெனவே காத்திருக்கின்ற
ஜிலேபியை பாருங்கள்!
இந்த சிவாஜிக்கு இந்த ஜிலேபியென
இறைவன் எழுதி வைத்தான்!
அந்த ஜிலேபியே அவரவர் அடைவார்
உண்மை உணருங்கள்!/
நல்ல இருக்கிறது
//நானானி said...
ReplyDeleteசஞ்சய்!
ஏன் நீங்க பலிகடா என்று நினைக்கிறீர்கள்? செமயா மொக்கை போட்டு எல்லோரையும் பலி போட்டுங்களேன்! எப்படி நம்ம ஐடியா?//
ஹாஹா.. நீங்க சொல்லலைனாலும் எனக்கு மொக்கை விட்டா வேற எதுவும் தெரியாது :P
பேரப்புள்ளைங்க கை நிறைய ஜிலேபியோட வந்து நிக்கறாக !
ReplyDeleteஏதுடா இவ்ளவு ஜிலேபின்னு கேட்டேன்.
ரிச்மன்ட் ஆன்டி வீட்டிலே கொடுத்தாங்கன்னு வேற சொல்றாக.
நீங்கதான் இவங்களுக்கு கொடுத்தீகளா ?
http://menakasury.blogspot.com
மீனாட்சி பாட்டி
அம்மாடி ரொம்ப நல்லவங்களே..
ReplyDeleteபதிவு போட்டாச்சி http://podian.blogspot.com/2008/06/blog-post_15.html
இதை பார்த்துட்டு இனி என்னை யாரும் TAG பண்ணவே கூடாது...:P
நல்வரவு நானானி அம்மா!
ReplyDelete//உள்குத்து குத்தாமல் மொக்கையையும் சுவாரஸ்யமாக போட்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!//
உள்குத்தா? அச்சோ, அப்படின்னா என்னன்னே தெரியாது எனக்கு :) நன்றீம்மா!
//செமயா மொக்கை போட்டு எல்லோரையும் பலி போட்டுங்களேன்!//
உங்க அறிவுரையை அப்படியே வார்த்தை பிசகாமல் கடைப்பிடிச்சுட்டாரு சஞ்சய்! :) போய் பாருங்க :)
வாங்க திகழ்மிளிர்!
ReplyDelete///இந்த ஆழமான(!) சிந்தனையால் ஏற்பட்டதுதான் கீழ இருக்கிற பாட்டு!/
:-))//
இந்த புன்னகை என்ன விலை? :) ரசித்தமைக்கு நன்றி :)
வாங்க பாட்டீ!
ReplyDelete//பேரப்புள்ளைங்க கை நிறைய ஜிலேபியோட வந்து நிக்கறாக !//
ஆமா. உங்களுக்கும் சேர்த்துதான் குடுத்தேன். நல்லாருந்துச்சா? :)
//அம்மாடி ரொம்ப நல்லவங்களே..
ReplyDeleteபதிவு போட்டாச்சி //
யாரைச் சொன்னீங்கன்னு தெரியல சஞ்சய். இதுல ஒண்ணும் உள்குத்து இல்லையே? :)
இனிமேதான் உங்கள எல்லாரும் நல்லா tag பண்ணப் போறாங்க! பதிவுக்கு நன்றி + வாழ்த்துக்கள்! :)
Blogger கவிநயா said...
ReplyDelete//அம்மாடி ரொம்ப நல்லவங்களே..
பதிவு போட்டாச்சி //
யாரைச் சொன்னீங்கன்னு தெரியல சஞ்சய். இதுல ஒண்ணும் உள்குத்து இல்லையே? :)//
அட.. நிமமாவே நீங்க ரொம்ப நல்லவங்க தான் போங்க :P
// இனிமேதான் உங்கள எல்லாரும் நல்லா tag பண்ணப் போறாங்க! பதிவுக்கு நன்றி + வாழ்த்துக்கள்! :)//
இந்த கொலை மிரட்டல் விடற வேலை எல்லாம் வேணாம்.. ஏற்கனவே ஒன்னு பெண்டிங்க்ல இருக்கு.. :(
வெறும் ஜிலேபி தானா?
ReplyDeleteகாரமா மிக்சர் எல்லாம் ஒன்னும் இல்லியாக்கா? :-)
//இந்த சிவாஜிக்கு இந்த ஜிலேபியென
ReplyDeleteஇறைவன் எழுதி வைத்தான்!//
அப்போ அந்த சிவாஜிக்கு?
யப்பா...நல்லா இருந்த ஒங்கள இப்படி மாத்தி வுட்ட ராமலக்ஷ்மி அக்காக்கு என்ன தண்டனை இச்சாவு? செப்பண்டிக்கா செப்பண்டி!
//அரிசில கூட நமக்குரிய அரிசின்னா நம்ம பேரு எழுதி இருக்குமாம்! நம்ம பெரியவர் ரிஷானு அடிக்கடி சொல்ற பொன்மொழி //
ReplyDeleteஇந்த பெரியவன் மட்டும் என் கைல மாட்டனும்.. அப்பால கீது அவனுக்கு//
சஞ்சய்...
உங்க கட்சி தான் நானும்!
ரிசானு, அண்ணன் சஞ்சையுயுமா நீ கொடுமைப்படுத்தி இருக்கே?
உனக்கு இருக்குடீ ஆப்பு, என் ராமாயண டகால்ட்டி பதிவுல! :-)
நல்ல பதிவு, ஜிலேபி சுட்டாலும் நன்றாகவே இனிமையாக இருக்கிறது. எல்லாவற்றிலும் அருமை தாலாட்டுப் பாடல், இன்று பலரும் இந்தப் பாடலை மறந்திருக்கும் வேளையில் நீங்கள் உங்கள் பதிவில் இட்டது, காலத்துக்கும் அழியாவண்ணம் இருக்கும். நன்றி. பலநாட்களாய் வர முடியவில்லை, நேரம் கிடைக்கும்போது தான் வர முடியுது. இன்னும் சில பதிவுகள் படிக்கணும் அப்புறமா வரேன். நன்றி.
ReplyDeleteவாங்க, கண்ணா!
ReplyDelete//காரமா மிக்சர் எல்லாம் ஒன்னும் இல்லியாக்கா? :-)//
ம்.. அடுத்த ரவுண்டுல இருக்கலாம்... :)
//அப்போ அந்த சிவாஜிக்கு?//
இது என்ன கேள்வி? அந்த சிவாஜிக்கு அந்த ஜிலேபிதான்! :)
//யப்பா...நல்லா இருந்த ஒங்கள இப்படி மாத்தி வுட்ட ராமலக்ஷ்மி அக்காக்கு என்ன தண்டனை இச்சாவு? செப்பண்டிக்கா செப்பண்டி!//
நல்லா கேளுங்க தம்பி! கேக்க ஆளில்லைன்னு இருக்காக எல்லாரும்!
(ஆமா, உணர்ச்சிவசப்பட்டா எல்லாருக்கும் தாய்மொழிதான் வரும், உங்களுக்கென்னன்னா பெரியம்மா மொழி, சின்னம்மா மொழில்லாம் வருதே! :)
வாங்க கீதாம்மா! ஜிலேபி சாப்பிட்டுட்டு தாலாட்டு கேட்டதுக்கு மிக்க நன்றி. நீங்க எதுக்கு இத்தனை நன்றி சொல்றீங்க. நானில்ல சொல்லணும். நேரம் கிடைக்கிறப்ப அவசியம் வாங்க.
ReplyDelete//நல்லா கேளுங்க தம்பி! கேக்க ஆளில்லைன்னு இருக்காக எல்லாரும்!//
ReplyDelete"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
இது சொலவட(பழமொழி). தம்பி உடையாள்....கவிநயா விட்டால் ஒரு படையையே எனக்கு எதிரா திரட்டிட்டு வந்திடுவீங்க போலிருக்கே...
ஜிலேபி ப்டம் போட்ட்டுடிங்க... டெம்ப்ட் பண்ணுது....!!ஆனாலும் மைபாக்கு ஈடு உண்டோ சொல்லுங்க கவிநயா..
ReplyDelete!!!!!!!!!
//ஜிலேபி ப்டம் போட்ட்டுடிங்க... டெம்ப்ட் பண்ணுது....!!ஆனாலும் மைபாக்கு ஈடு உண்டோ சொல்லுங்க கவிநயா..//
ReplyDeleteஓஹோ! படத்த மட்டும்தான் பாத்தீங்க போல :) இன்னும் மைபாவயும் கண்ல காட்டல. எப்படி சொல்றது?
(ரெண்டையும் விட அல்வாதான் ஜோரா குடுக்கறீங்க! பேர மாத்திடலாமா மைபாக்கா? :)
.... கோச்சுக்காதீங்க மைபாக்கா. நேரமில்லாத போதும், இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுக்கு நன்றிகள்! :)
ReplyDelete//இன்னும் மைபாவயும் கண்ல காட்டல. எப்படி சொல்றது?//
ReplyDeleteகவிநயா,
"உனக்குக் கிடைக்கணும்னு இருக்கது கிடைக்காம போகாது. ஆனா உனக்கு கிடைக்காதுன்னு இருந்தா, நீ எத்தனை காலம் தலைகீழா நின்னாலும் கிடைக்காது!".
அதனால கவிநயா! உங்க பேர் போட்டது உங்களுக்கு கிடைச்சா அதை வச்சுக்கிட்டு சந்தோசமா இருங்க! மத்தவங்க பேர் போட்டது கிடைக்குமான்னு அலைஞ்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! அம்புட்டுதாங்க!!
(இதை எங்கயோ கேட்ட மாதிரி இருந்தா, நான் பொறுப்பில்லைங்க! :)
கவிநயா said...
ReplyDelete.... கோச்சுக்காதீங்க மைபாக்கா. நேரமில்லாத போதும், இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததுக்கு நன்றிகள்//
>>>>கோபம் எனக்கு 'கிலோ என்ன விலை?' தெரியாதா கவிநயா அல்லது என் செல்ல வெல்லத்தம்பிகள் என்னைப்பத்தி எதுவுமே சொல்லாம மறைச்சிட்டாங்களா?:)
//இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய கருத்து யாதெனில், "உனக்குக் கிடைக்கணும்னு இருக்கது கிடைக்காம போகாது. ஆனா உனக்கு கிடைக்காதுன்னு இருந்தா, நீ எத்தனை காலம் தலைகீழா நின்னாலும் கிடைக்காது!". //
கிடைக்கும் கிடைக்கும் மைபா கண்டிப்பா கிடைக்கும் ...ஆடாது அசங்காது வந்து பெற்றுக்கொள்க நடனமயிலே!
ரிசானு!! இது த்ரீ மச்! சொல்லிட்டேன்! ஹ்ம்.. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் :(
ReplyDelete(ஒன்ஸ் மோர் கதை மாதிரி அதே பதிலை திரும்ப போட்டீங்க, மைபாவாலயே நல்லா ஒதை இருக்கு உங்களுக்கு! :)
கவிநயா said...
ReplyDeleteரிசானு!! இது த்ரீ மச்! சொல்லிட்டேன்! ஹ்ம்.. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் //
ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
காப்பாற்றப்பா!!!!
ஹ்ம்.. இத்தனை வெல்லத்தம்பியரா? அப்ப நான் என்னவாம்? :-|
ReplyDelete//ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
ReplyDeleteகாப்பாற்றப்பா!!!!//
காப்பாற்றிட்டாப் போச்சு..முதல்ல எனக்கு அனுப்புறதாச் சொன்ன 2 KG மை.பா.வையும் பார்சல் பண்ணி அனுப்பிடுங்க ஷைலஜா அக்கா :P
எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDelete//ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
காப்பாற்றப்பா!!!!//
காப்பாற்றிட்டாப் போச்சு..முதல்ல எனக்கு அனுப்புறதாச் சொன்ன 2 KG மை.பா.வையும் பார்சல் பண்ணி அனுப்பிடுங்க ஷைலஜா அக்கா>...
>>>:):)
உங்க ஊர்ல புழுதி அடங்கட்டும்!!! அப்புறம் அனுப்பிட்றேன்
இல்லேன்னா அதுபட்டு என் மைபா கடினமாகி.......எதற்கு வம்பு?:)
// எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDelete//ரிஷு என் வெல்லத்தம்பியே....என்னைக்
காப்பாற்றப்பா!!!!//
காப்பாற்றிட்டாப் போச்சு..முதல்ல எனக்கு அனுப்புறதாச் சொன்ன 2 KG மை.பா.வையும் பார்சல் பண்ணி அனுப்பிடுங்க ஷைலஜா அக்கா :P//
என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி பேசறிங்க.. நமக்குனு சொல்லுங்க.. ஷையக்கா நேக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கோ.. :P
SanJai said...
ReplyDelete//என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி பேசறிங்க.. நமக்குனு சொல்லுங்க.. ஷையக்கா நேக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கோ//
sanjai! இதை நல்லா யோசிச்சிதான் சொல்றீங்களா இதுபத்தி எல்லார்கிட்டயும்(அந்தசெல்லத்தம்பி ரவிகிட்டயும் வெல்லரிஷுகிட்டயும்)
பேசித்தான் இந்தமுடிவுக்கு வந்தீங்களா சஞ்சய்?::) ஒகே...அப்போ அனுப்பிட்றேன் விதி வலியது!:)
கவிநயா said...
ReplyDeleteஹ்ம்.. இத்தனை வெல்லத்தம்பியரா? அப்ப நான் என்னவாம்? :-|
>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே! என் அன்புத்தங்கையே!!!!
//>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே! என் அன்புத்தங்கையே!!!!//
ReplyDeleteஇது கொஞ்சம் பரவாயில்ல. ஆனா வெல்லத் தங்கைன்னு சொல்வீங்கன்னு நெனச்சேன் :)
//என்ன ரிஷான் அண்ணா இப்படி பிரிச்சி பேசறிங்க.. நமக்குனு சொல்லுங்க.. ஷையக்கா நேக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கோ.. :P//
ReplyDeleteசஞ்சய் அங்கிள்..என்னை 'அண்ணா'ன்னு சொல்ற உங்க வாயில ரெண்டு அக்காக்களும் செய்ற மை.பா.வையும்,ஜிலேபியையும் வச்சு அடைக்க.. :X
//என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே!//
ReplyDeleteஅப்போ மை.பா.வும் ஜிலேபியுமாச் சேர்ந்து ஒரு ஸ்வீட் கச்சேரியே செய்யப்போறீங்கன்னு சொல்லுங்க.. :)
எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDelete//என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே!//
அப்போ மை.பா.வும் ஜிலேபியுமாச் சேர்ந்து ஒரு ஸ்வீட் கச்சேரியே செய்யப்போறீங்கன்னு சொல்லுங்க
>>>>>
ஆமாம் அந்த பொன்னான நாள் என்றுவருமோ? எல்லாரும் வெளிநாட்டுல இருக்கீங்க இந்தியா வாங்கப்பா (ம்மா):0
கவிநயா said...
ReplyDelete//>>>>என் பாட்டிற்கு நடனம் ஆடப்போகும் நாட்டியதாரகையே! என் அன்புத்தங்கையே!!!!//
இது கொஞ்சம் பரவாயில்ல. ஆனா வெல்லத் தங்கைன்னு சொல்வீங்கன்னு நெனச்சேன் :)///
கவிநயா! காதோட ரகசியம் இது...அவங்கள செல்ல வெல்லதம்பிகள்னு சொல்லக்காரணம் இருக்கு ஏதாவது ஆபத்துன்னா தம்பிஉடையாள் படைக்கு அஞ்சாள்னு நான் தைரியமா இருக்கத்தான் வைக்கிற ஐஸ் அது!!...மற்றபடி அன்புஎனும் சொல்லின் பவர் அறியாத மங்கையா நீங்க?:)
நல்ல கவிதை .....
ReplyDeleteஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஜாங்கிரி என்பது ஒரு பெரிய வட்டத்தை சுற்றி சிறு வட்டங்கள் ஒட்டியபடி இருக்கும் (in a Sequential order), ஜிலேபி என்பது வரையறை இல்லாமல் (Random) இருக்கும்,
இரண்டுகும் பொதுவானது - உளுந்து ...
சந்தேகம் இருக்குமாயின் பதில் போடவும்
நன்றி
லோகன்
//அன்புஎனும் சொல்லின் பவர் அறியாத மங்கையா நீங்க?:)//
ReplyDeleteசரி.. சரி... தோல்வியை (சந்தோசமா) ஒத்துக்கறேன், யக்கோவ்! :)
நல்வரவு லோகன்!
ReplyDeleteஎனக்கே புரியற மாதிரி ஜிலேபியையும் ஜாங்கிரியையும் புழிஞ்சிட்டீங்க! ரொம்ப நன்றி! :)
தட்டுல இருக்குற ஒவ்வொரு ஜிலேபியும் ஜிலுஜிலுன்னு இருக்கு. அதுல ரெண்டு எடுத்து கடிச்சிக்கனும்னு தோணுது.
ReplyDeleteம்ம்ம்.. நம்மளையும் கூப்டுட்டீங்க. சரி பதிவு போட்டுருவோம்.
நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க ஜாங்கிரி! :P
ReplyDeleteஇது எங்க எல்லாம் சுத்துதுன்னு பார்க்கலாம்.
பரவாயில்ல, ஜிலேபி ரொம்ப ஆறிப் போறதுக்குள்ள வந்துட்டீங்க, ஜிரா. உங்க சுத்தலுக்கு வெயிட்டிங்! :)
ReplyDelete//நல்லாத்தான் சுத்தி இருக்கீங்க ஜாங்கிரி! :P//
ReplyDeleteஎட்டிப் பார்த்ததுக்கு நன்றிங்க, கொத்தனாரே!
நல்லாச் சுத்திவிட்டீங்க கவிநயா. ஜிலேபி படத்துக்குக் கூகிளார் கிட்ட நன்னி சொல்லிக்கலாம்.
ReplyDeleteஅது எப்படிய்ய ...இப்படி சொல்றதுக்கு முன்னால நீங்களும் ராமலக்ஷ்மியும் கவிதை பொழியறீங்க:)
சூப்பர் ஜிலேபிக் கவிதை. ஆஹா ஜிலேபி சாப்பிட ஆசை.
கண்ணால் பருகிKகொள்ளுகிறேன்:)
நல்வரவு, வல்லிம்மா! ஜிலேபியை ஆசை தீர பருகிட்டீங்களா! :) கூகுளாருக்கும் உங்களுக்கும் நன்றி.
ReplyDeleteஸ்வீட் ஜிலேபி தான் கேள்வி பட்டுஇருக்கிறேன்......
ReplyDelete.சூட்சமஜிலேபி யை கேள்விபட்டு சிரித்தேன் ....
உங்கள் ப திவுகளை
ஒவ்ஒன்றக அலசி கொண்டு இருக்கிறேன் .
.
.சித்ர ம் ..// ..
வாங்க சித்ரம். நீங்க திரு அல்ல திருமதின்னு தெரிஞ்சுக்கிட்டேன் :)
ReplyDelete//உங்கள் பதிவுகளை
ஒவ்ஒன்றக அலசி கொண்டு இருக்கிறேன் .//
ரொம்ப மகிழ்ச்சி. நிதானமா அலசுங்க :)
வருகைக்கு நன்றி.