அன்பால் நிறைந்த நெஞ்சம்
ஆண்டவனிடத்தில் தஞ்சம்
இயல்பில் குழந்தை உள்ளம்
ஈயப் பெருகும் இன்பம்
உலகம் அனைத்தும் உறவு
ஊக்கம் உயிரின் மூச்சு
எதையும் தாங்கும் இதயம்
ஏதம் இல்லா உதயம்
ஐயம் இல்லா பக்தி
ஒரு முகமான தியானம்
ஓயா எறும்பாய் உழைப்பு
ஔவை சொன்ன அறம்
அமைதி நிறைந்த வாழ்வு!
--கவிநயா
