வணக்கம். நல்லாருக்கீங்களா? வர வர அடிக்கடி பார்க்க (எழுத) முடியறதில்லை... இப்பவும் ஒங்களக் கொஞ்சம் வெரசாவாச்சும் பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்...
உடம்பு இருக்கே... அதுல இருக்கிற உறுப்புகளெல்லாம் "நான் இருக்கேன்", "நான் இருக்கேன்" அப்படின்னு அப்பப்ப... இல்லையில்லை... அடிக்கடி ஞாபகப்படுத்திக்கிட்டிருக்கு. காலம் போறதுக்குள்ள எல்லா வலியும் அனுபவிச்சாதான் அதுக்கு திருப்தியா இருக்கும் போல!
அந்த மாதிரி இப்ப சமீபத்துல என்னை வந்து சந்திச்ச வலி - இடுப்பு வலி. (back pain இல்லை; hip pain). எப்படி வந்துச்சுன்னு எனக்கே புரியலை. புதுசு... அங்கெல்லாம் கூட வலிக்கும்னு இப்பதான் தெரியும்! எப்பப் பார்த்தாலும் 'அங்க வலிக்குது', 'இங்க வலிக்குது'ன்னு யார்கிட்டயும் சொல்லவே கூடக் கூச்சமா இருக்கு. ஏன்னா, இப்பதான் 'back pain' வந்து போயி, வந்து போயி, வந்து போயி, ஒரு வழியா வழி அனுப்பி வச்சேன். உடனடியா இவங்க வந்து நிக்கிறாங்க! எப்படி இருக்கும்! எனக்கே எரிச்சலா இருந்தது. வீட்ல சொன்னா லக்ஷார்ச்சனைதான் நடக்கும். என்னடா பண்றதுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். நமக்கு உதவறதுக்குன்னுதான் ஒத்தர் எப்பவும் தயாரா இருக்காரே... அவரைத்தான் கேட்டேன். அதாங்க கூகுளாண்டவர்!
இந்த குறிப்பிட்ட விடீயோ எப்படியோ என் கண்ல பட்டது (என் அம்மாவோட அருள்தான்). அவ்வளவு எளிமையான சுலபமான ஒரு விஷயத்தால உடனடியா மந்திரம் போட்டது மாதிரி இடுப்பு வலி போயே போச்சு! அதையும் free-யா you-tube-ல ஏற்றினவங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.
உங்களுக்கும் இடுப்பு வலி இருந்தா உதவுமேன்னு சொல்றதுக்காக வந்தேன்...
https://www.youtube.com/watch?v=DAHWDr2XF2w
எல்லாரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா
உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Showing posts with label உடல். Show all posts
Showing posts with label உடல். Show all posts
Monday, August 25, 2014
Monday, September 23, 2013
மூக்கடைப்புக்கு உடனடி நிவாரணம்!
இந்த வருஷம் அடிக்கடி ஜலதோஷம்.
அதுவும் எப்போதும் இல்லாத அளவு மூக்கடைப்பினால் ரொம்பவே சிரமப்பட்டேன். படுத்தாலும்,
உட்கார்ந்தாலும், நின்னாலும், எந்த position-ல இருந்தாலும் சுத்தமா மூச்சு விட முடியலை!
நீராவி புடிச்சு, விரளி மஞ்சளை சுட்டு அதன் புகையை முகர்ந்து, இப்படில்லாம் ஏதேதோ செய்து
பார்த்தேன். ஒண்ணும் வேலை செய்யலை. இராத்திரி பூரா தூங்காம நடை பழகிக்கிட்டே இருந்தேன்னா
பார்த்துக்கோங்க. ஆனா திடீர்னு தற்செயலா ஒரு position-ல ‘டக்’குன்னு மூக்கடைப்பு விட்டுப்
போயிடுச்சு. அதைப் பற்றி சொல்றதுக்குதான் இந்தப் பதிவு.
மல்லாந்து படுத்துக்கோங்க. கழுத்துக்குக்
கீழே உயரமான தலையணையை வெச்சு, கழுத்தை வளைச்சு பின்னாடி பார்க்கிறா மாதிரி படுத்துக்கணும்.
அதாவது, சாதாரணமா அண்ணாந்து, இன்னும் கொஞ்சம் கழுத்தை வளைச்சு தலைகீழா பின்னாடி பார்த்தா
எப்படி இருக்கும்? அதே மாதிரி படுத்துக்கிட்டு செய்யணும். அவ்வளவுதான். இப்படி ஒரு சில
விநாடிகள் இருந்தாலே சுவாசக் குழாய் உடனே சுத்தமாகிடுது! (உட்கார்ந்துகிட்டும் செய்யலாம்னு நினைக்கிறேன்.
இன்னும் முயற்சிக்கலை).
கிட்டத்தட்ட மத்ஸ்யாசனம் மாதிரி... (கழுத்து position மட்டும்).
ஒரு வேளை யோகாசனங்களை ஒழுங்கா செய்துகிட்டு வந்திருந்தா இந்த தொந்தரவே வந்திருக்காது போல.
இதைக் கண்டு பிடிச்சப்போ எனக்கு
அப்படி ஒரு relief-ஆ இருந்தது! இப்போ நாலஞ்சு நாளா இதேதான் செய்யறேன். இது உங்களுக்கு
ஏற்கனவே தெரியுமோ என்னவோ? ஆனா எனக்குத் தெரிஞ்சிருக்கலை…
கழுத்தை ரொம்ப strain பண்ணிக்க
வேண்டாம். ஆசனமாகவே செய்யணும்னா கவனம் தேவை. குறிப்பா அந்த position-ல இருந்து
வெளில வரும்போது, முதல்ல தலையை மேலே தூக்கிட்டு,
பிறகுதான் முழு உடம்பையும் கீழே கொண்டு வரணும். இல்லைன்னா கழுத்து எலும்பு பாதிக்கப்படும்.
உங்களுக்கும் உதவக்கூடும் என்ற
எண்ணத்தில் பகிர்ந்தது…
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.buzzle.com/img/articleImages/544043-47225-5.jpg
Subscribe to:
Posts (Atom)