Showing posts with label பட்டாம்பூச்சி விருது. Show all posts
Showing posts with label பட்டாம்பூச்சி விருது. Show all posts

Sunday, May 31, 2009

புது வகை பட்டாம்பூச்சி !




பட்டாம்பூச்சியில் பல வகை இருக்கே, தெரியுமா, உங்களுக்கு? அச்சோ, அறிவியல் பாடமொண்ணும் இல்லீங்க! சொல்றேன் கேளுங்க...

நம்ம தோட்டத்துல பறந்து திரியற வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பத்தி உங்களுக்கே தெரியுமே! அது ஒரு வகை. அப்புறம்.... நீங்க காதலில் விழுந்தவரா? ம்... அப்படின்னா உங்க மறுபாதியை பார்க்கிறப்பல்லாம்... இல்லை, இல்லை, நினைக்கிறப்ப கூட, வயத்துக்குள்ள படபடக்குமாமே, (எல்லாம் கேள்வி ஞானந்தாங்க :) அது ஒரு வகை. அப்புறம்... அழகான பெண்கள் அவங்க உள்ளம் கவர்ந்தவரை பார்க்கும் போது இமைகள்ல படபடக்குமே, அது ஒரு வகை... ம்... அப்புறம்... இன்னொண்ணு கூட இருக்குங்க - பசி காதை அடைக்கும் போது நம்ம கண்ல பறக்குமே, அதுவும் கூடத் தாங்க!

ஆனா இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு வலைப் பூவா பறக்கிற இந்த பட்டாம்பூச்சி முற்றிலும் புது வகை!

பட்டாம்பூச்சின்னு சொன்னதும் பட்டுப் புடவை நினைவு வராம இருக்காது (எனக்கு!). அதே போல பட்டுப் புடவை கட்டும் போதெல்லாம் பட்டாம்பூச்சியும் நினைவு வந்து வயத்துல சங்கடம் பண்ணும் :( பட்டு புடவை வாங்கியே ரொம்ப வருஷம் ஆச்சுது இப்போ. ஆனா இப்ப 'அஹிம்சை' பட்டுன்னு வருதாமே, பூச்சிகளை துன்புறுத்தாம செய்யற பட்டாம். அதை கேள்விப்பட்ட போது கொஞ்சம் ஆறுதல்!

நம்ம (வலை)பூவுக்கெல்லாம் பட்டாம்பூச்சி வரவே வராது, அப்படிங்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோட இருந்தப்ப, அந்த நம்பிக்கையை அசைச்சுட்டாங்க ரெண்டு பேர்! ஒருத்தர் யூத் விகடன் புகழ் ராமலக்ஷ்மி. முத்துச்சரமா பதிவுகளை தந்து பெரும் வாசகர் வட்டத்தை சம்பாதிச்சு வச்சிருக்கிற இவங்களுக்கு அறிமுகம் தேவையில்லை :) அவங்க பட்டாம்பூச்சி விருதை பலருக்கும் பகிர்ந்து கொடுத்ததில், நானும் அடக்கம்.

இன்னொருத்தர், 'வண்ணப் பட கைலாஷி' அப்படின்னு நம்ம அ.உ.ஆ.சூ. அவர்களால அன்பா அழைக்கப்பட்டவர்தான். பல கோவில்களிலிருந்தும் படங்களை மிக சிரத்தையா சேகரிச்சு, தொகுத்து, தன் வலைப்பூக்கள்ல ஆன்மீக அன்பர்களின் மனம் குளிர வழங்கிட்டு வரார். அவர்தான் எனக்கும் இந்த பட்டாம்பூச்சி விருதை குடுத்திருக்கார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

இந்த விருது அநேகமா எல்லாரும் வாங்கிட்டாங்க, நான் நினைச்சிருக்க மூணு பேரும் இன்னும் வாங்கலைன்னு நினைக்கிறேன். பட்டாம்பூச்சி விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் யாரெனில்...

அன்புத்தம்பி கோபி என்ற கோபிநாத். இவர் இப்பல்லாம் ரொம்ப எழுதலைன்னாலும், எழுதறப்ப கலக்கலா எழுதுவார். தொடர்ந்து இங்கே வந்து பொறுமையா (நான் எழுதறதைக் கூட) படிச்சு தவறாம பின்னூட்டம் இடறவங்கள்ல இவரும் ஒருத்தர்! அதுக்காகவே இவருக்கு விருது கொடுக்கலாம்! 'மழை' தொடர்ல, அக்கா குழந்தையின் மழலை பற்றி கவிதை போல எழுதியிருப்பார். ஆனா தொடர்தான் தொடராம நிக்குது. சீக்கிரம் எழுதுங்க கோபி!

அடுத்ததா... ஜெஸ்வந்தி. புத்தம் புது பதிவர். இவங்களோட "என்ன தவம் செய்தேன்" என்கிற கதையில் அழகான (மனசுள்ள) கதாநாயகனை அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பான நடையில் அமைந்த இந்தக் கதை உண்மைக் கதைன்னு சொல்றாங்க! இவங்க பெயரும் எனக்கு பிடிச்சது :) தொடர்ந்து நிறைய படைப்புகளை தாங்க ஜெஸ்வந்தி!

last but not least... எங்க ஊர்க்காரர், சமீபத்தில் தமிழ்மண நட்சத்திரமா ஜொலித்த நாகு. இவரும் அருமையாய் எழுதுவார் என்பதோடு, பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் :) நான் நிறைய எழுத ஆரம்பிச்சதுக்கு இவரும் ஒரு காரணம். (ஐயோ பாவம், அவரை அடிக்கப் போகாதீங்க ப்ளீஸ் :) ஆரம்ப காலங்களில் ரொம்ப ஊக்குவித்தவர், இப்பல்லாம் ஒண்ணுமே விக்கிறதில்ல :( இருந்தாலும் என்றைக்கும் அவருக்கு மனமார்ந்த நன்றிகளுடன்...

மூவருக்கும் வாழ்த்துகள்!



நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

***

நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பதிவர்களின் பூக்கள்ல பட்டாம்பூச்சியை பறக்க விடுமாறு கேட்டுக்கறேன்!

முதல் படத்துக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/File:Cairns_birdwing_-_melbourne_zoo.jpg