Sunday, December 26, 2010

கண்ணா நீ எங்கே?



கண்ணன் - என் காதலன்

எங்கே சென்றாயோ - கண்ணா
கொஞ்சம் வருவாயோ?
தேடி அலையும் தென்ற லுக்கு
தரிசனம் தருவாயோ?

வான வில்லின் நீலம் உனக்கே
வண்ணக் கண்ணா வா!
திரட்டி வைத்த வெண்ணை தின்ன
திருட்டுக் கண்ணா வா!

கோபி யரைக் கொஞ்சிப் பேச
கோகுலக் கண்ணா வா!
ஆயர் பாடி ஆவி னங்கள்
அழைக்கு துன்னை வா!

மயக்கும் குழலை இசைக்கும் கண்ணா
மயிலிற கோடே வா!
மண்ணைத் தின்ற மாயக் கண்ணா
என்னைக் காக்க வா, எந்தன் ஏக்கம் தீர்க்க வா!

--கவிநயா

அனைவருக்கும் மனம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்பே பெருகட்டும்! நலமே சூழட்டும்!!

23 comments:

  1. விளித்தால்
    வாராது இருப்பானோ

    அருமை

    வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  2. //தேடி அலையும் தென்ற லுக்கு
    தரிசனம் தருவாயோ?//

    போக்குக் காட்டி அலைய விடுவதுதானே கண்ணனின் லீலை:)? அழகான கவிதை. தவிக்க விட்டாலும் வருவான் கண்ணன்.

    நன்று கவிநயா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வருவான் வரம் பல தருவான் ;))

    உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete
  4. வாங்க திகழ். நன்றி.

    ReplyDelete
  5. //போக்குக் காட்டி அலைய விடுவதுதானே கண்ணனின் லீலை:)?//

    உண்மைதான் ராமலக்ஷ்மி :) நன்றி.

    ReplyDelete
  6. //வருவான் வரம் பல தருவான் ;))

    உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;)//

    நன்றி தம்பி :)

    ReplyDelete
  7. எங்கானும் டூர் போயிருக்காரா?? சீக்கிரமா வந்துடுவார்! :))))))))))

    ReplyDelete
  8. //எங்கானும் டூர் போயிருக்காரா?? சீக்கிரமா வந்துடுவார்! :))))))))))//

    ஹாஹா :) நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். வரட்டும்..., பேசிக்கிறேன்! :)

    நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  9. அருமையான ராதா-கிருஷ்ணன் ஓவியம். [பாடல் அருமை என்று சொல்ல தேவை இல்லை.]

    ReplyDelete
  10. உங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியுமே! உங்களை இந்தப் பக்கம் பார்த்ததில் மகிழ்ச்சி ராதா :)

    நேரம் கிடைக்கும் போது இந்த பதிவையும் பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. அந்தப் பதிவை ஏற்கனவே படித்தாகி விட்டது. :-)
    ஆனால் பின்னூட்டம் இடவில்லை. ராமனும் சீதையும் என் தாய் தந்தையர்.
    ராமாயணத்தில் ரொம்பவும் நெகிழ வைக்கும் இடங்களில் ஒன்று இது. கண்ணீரை எல்லாம் கணினியில் பின்னூட்ட முடியாது. :-)

    ReplyDelete
  12. romba azhaga ezhudhi irukeenga. :))
    kannan koopidivatho andha puzhaangulal-in innisai.
    Adhai ketka dhaane naamellam thudikkirom?
    Naam koopidivathu avan kaadhil vizhunthum vizhaatha madhiri puzhangulal vaasikkiran.
    Kangalaal "va" engiran, aanal kanukku theriyaamal maraindhu nikkiraan.
    aanalum, indha polladha kannan-ai paaduvadhu azhagu.
    neenga ivvalavu azhaga paadi ennai pola elloraiyum rasikka vaithadhu romba azhagu. :)

    ReplyDelete
  13. unga peyar-e "kavinaya"-vaa illai idhu "pen name"-aa?

    ReplyDelete
  14. //எங்கே சென்றாயோ - கண்ணா
    கொஞ்சம் வருவாயோ?//

    மற்றவர்களுக்கும் கண்ணனின் அருகாமை வேண்டும் என்கிற பெருந்தன்மையில் அந்த 'கொஞ்சம்' வந்ததோ?.. :)

    இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  16. //கண்ணீரை எல்லாம் கணினியில் பின்னூட்ட முடியாது. :-)//

    சரியாத்தான் சொல்லியிருக்கீங்க :) வாசித்தது அறிந்து மகிழ்ச்சி ராதா.

    ReplyDelete
  17. //@Radha:
    tnx for referring me here. :)//

    கள்வனின் காதலியை இங்கே வரவழைத்த ராதாவிற்கு என் நன்றியும் :)

    //Kangalaal "va" engiran, aanal kanukku theriyaamal maraindhu nikkiraan.//

    அழகாச் சொன்னீங்க KK. இதைப் படிக்கும் போது "கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் குறையொன்றுமில்லை" அப்படின்னு சொல்ற பாடல் நினைவுக்கு வருது :)

    //aanalum, indha polladha kannan-ai paaduvadhu azhagu.//

    கண்ணனைப் பாடறது அழகுதான் :) சின்ன வயசில் இந்த அளவு கிருஷ்ண ப்ரேமியாக இருக்கிற உங்களைப் பார்க்கையில் உங்களுக்காகவே இன்னும் எழுதணும்னு தோணுது :) உங்களைப் பார்க்க பார்க்க, உங்கள் பின்னூட்டங்களையெல்லாம் படிக்கப் படிக்க, எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமே மிஞ்சும். உங்களுக்கு அவன் அருள் பூரணமாகக் கிடைக்கட்டும்னு, இந்த புத்தாண்டு தினத்தில் மனமார வாழ்த்தறேன்!

    ReplyDelete
  18. //unga peyar-e "kavinaya"-vaa illai idhu "pen name"-aa?//

    கவிநயா, என்னுடைய புனை பெயர்தான் :)

    ReplyDelete
  19. //மற்றவர்களுக்கும் கண்ணனின் அருகாமை வேண்டும் என்கிற பெருந்தன்மையில் அந்த 'கொஞ்சம்' வந்ததோ?.. :)//

    :)))

    //இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..//

    ஆசிகளுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  20. //உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!//


    மிக்க நன்றி ராமலக்ஷ்மி. உங்களுக்கும் அதையே ரிப்பீட்டிக்கிறேன் :)

    ReplyDelete
  21. @Kavinaya:
    ungalai eppadi koopiduvadhu??
    //உங்களுக்கு அவன் அருள் பூரணமாகக் கிடைக்கட்டும்னு, இந்த புத்தாண்டு தினத்தில் மனமார வாழ்த்தறேன்!//
    Thanks!
    ungalukkaga en PSP-idam vendikkiren- avar arul ungalukkum unga family-kkum epodhum irukkanum-nu, avar ungalai "kaiyaga nelli pol kaakattum"-nu ketkiren! :)

    ReplyDelete
  22. //avar ungalai "kaiyaga nelli pol kaakattum"-nu ketkiren! :)//

    ச்வீட் :) நன்றி கே.கே.

    //ungalai eppadi koopiduvadhu??//

    அம்மா, ஆண்ட்டி, அக்கா, கவிநயா, எப்படி வேணுமானாலும் கூப்பிடலாம் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)