எங்க ஊர் கோவில்ல வள்ளி திருமணம் நடந்தப்போ, நான் எழுதி, எங்க ஊர் பிரபல பாடகிகளான மீனாவும், சித்ராவும் இசையமைச்சுப் பாடிய முருகன் பாடலின் ஒலிப்பதிவு இதோ! இந்தப் பாடல் ராகமாலிகையில அமைக்கப்பட்டிருக்கு. பயன்படுத்தியுள்ள ராகங்கள்: பௌளி, சஹானா, அமீர்கல்யாணி, அடானா, ரேவதி, நாட்டைக்குறிஞ்சி, ரீதிகௌளை, ஹம்ஸநாதம், மற்றும் தேஷ். பாடலின் வரிவடிவம் இங்கே! கேட்டு விட்டு கருத்துச் சொன்னால் மகிழ்வோம்!
பாடல் ராகங்களும், குரல்களும் கேட்க இனிமையாக இருக்கின்றன.
ReplyDeleteகுன்றில்லை என்றாலும்
ரிச்மண்டிலும் வந்து
குடிகொண்ட வேலனுக்கு
சூட்டிய அருமையான இசைப்பா!
முருகனருள் முன்னிற்கும்.
ஆகா, பாட்டு அருமையா வந்திருக்கு, கலக்கிட்டீங்க போங்க. பாடல் பதிவில் பங்கு கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாடல் மிக நன்றாக வந்திருக்கிறது....எழுதியவருக்கும், இசையமைத்து பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாங்க, எஸ்.கே. அண்ணா! நீங்க சொன்னா முருகன் சொன்ன மாதிரிதானே :) மிக்க நன்றி!
ReplyDeleteவாங்க ஜீவா! நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும்! மிக்க நன்றி உங்களுக்கும்!
ReplyDeleteவாங்க மௌலி! எல்லாருக்கும் வாழ்த்துக்களை அனுப்பிடறேன்! மிக்க நன்றி, மௌலி!
ReplyDeleteஅருமையான பாடல். நேற்றே கேட்டேன். மிக நன்றாக அமைந்திருக்கிறது.
ReplyDeleteகந்தனைப் போற்றுவதில்... அதிலும் தீந்தமிழில் செந்தமிழ்க் கடவுளைப் போற்றுவதில்...தமிழருக்கு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும்.
பாட்டை சிறப்பாக எழுதிய உங்களுக்கும் பாடிய பாடகிகளாகிய மீனாவிற்கும் சித்ராவிற்கும் பாராட்டுகள்.
வாங்க ஜிரா! முதல் முதலா வந்திருக்கீங்க :) கந்தன் இருக்க இடத்துல நீங்க இல்லாமலா? உங்க வருகை எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி! மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteஒரு விஷயம்:
ReplyDeleteஇந்தப் பதிவில இருக்கும் முருகன் படத்தை "முருகனரு"ளில இருந்து எடுத்தேன். முருகனடியார்கள் கோச்சுக்க மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கைதான். தவறாக இருந்தா மன்னிச்சிடுங்கப்பா.
நல்லா இருக்குங்க பாட்டு.
ReplyDeleteநன்றி குமரா!
ReplyDeleteஉங்க ஊர் பிரபல பாடகி மீனாவை எனக்குத் தெரியுமா கவிநயா அக்கா?
ReplyDeleteஊஹூம். இவங்களை உங்களுக்குத் தெரியாது, குமரா :)
ReplyDeleteபாடலை ரசித்து வாழ்த்திய அனைவருக்கும் நானும், என் தோழி சித்ராவும் நன்றி சொல்ல விரும்புகிறோம். கவிநயாவின் அருமையான கவிதைகள் இசையமைக்க எங்களை தூண்டுகிறது......எல்லோருடைய ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றி.
ReplyDelete-மீனா
//நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)//
ReplyDeleteசொல்லிடறேன். சொல்லிடறேன்.
கவிதை வரிகளும், பாடகிகளின் உச்சரிப்பு மிக அருமை.
வாங்க மீனா! உங்களுடைய உற்சாகமும், ஊக்கமும், தூண்டுதலும்தான் இந்தப் பாடல் உருவாக மூலகாரணம். அதனால உங்களுக்கும், உங்களோடு சேர்ந்து உழைத்த உங்கள் தோழி சித்ராவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். நீங்க இதே போல மேலும் பலருடைய பாடல்களுக்கு இசையமைச்சு புகழடைய என்னுடைய வாழ்த்துக்கள்!
ReplyDelete////நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)//
ReplyDeleteசொல்லிடறேன். சொல்லிடறேன்.////
ஹாஹா :) வாங்க சதங்கா! வலைச்சரம் உங்கள விட்டுருச்சா? :)
//கவிதை வரிகளும், பாடகிகளின் உச்சரிப்பு மிக அருமை.//
மிக்க நன்றி, பாடகிகளின் சார்பிலும்!
பாட்டு அருமையா வந்திருக்கு; அதற்கு இழைந்தும், இசைந்தும், குழைந்தும் அதைச் இசைத்தோரின்
ReplyDeleteபங்களிப்புக் கூடி மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது..பாடியோர் எந்த வார்த்தையையும் விழுங்காமல் பாடியிருப்பது கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்..
வாங்க ஜீவி!
ReplyDelete//இழைந்தும், இசைந்தும், குழைந்தும் அதை இசைத்தோரின்
பங்களிப்புக் கூடி மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது..//
அருமையா சொன்னீங்க. நானும் மீனாவிடம் சொல்லியிருக்கேன் - எந்த அலங்காரமும் இல்லாம அப்பதான் குளிச்சு முடிச்சு வர்ற பெண்ணை சர்வாலங்கார பூஷிதையா மாத்தறாப் போலதான் - வெறும் வார்த்தைகளா இருக்கற கவிதையை/பாடலை இசையமைச்சுப் பாடறதும் அப்படின்னு. அதுவும் செந்தமிழ்ப் பாடலுக்கு உச்சரிப்பும் மிக அவசியம் இல்லையா! மறுபடியும் பாடகிகளுக்கு நானும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்!