விநாயகருக்கு வாழ்த்து சொல்லிட்டு, அப்படியே ஒரு தரம் ஜோரா கை தட்டுங்க பார்ப்போம்! அட என்ன விசேஷம்னு கேக்கறீங்களா? அதொண்ணுமில்லங்க, இது 50-வது பதிவு. அம்புட்டுதான். முதல் பதிவும் விநாயகர் பாடலோட ஆரம்பிச்சேன். சரியா சதுர்த்தியப்போ 50 ஆனதுல ஒரு மகிழ்ச்சி :)
பதிவுகளை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் / அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
முந்தி விநாயகரே
எங்கள்
முத்தமிழ் காவலரே
வந்தனம் செய்தோமய்யா
உன்னை எங்கள்
சொந்த மாய்க் கொண்டோமய்யா!
விக்ன விநாயகரே
எங்கள்
வினைகளைத் தீர்ப்பவரே
சித்தி விநாயகரே
உன்னை எங்கள்
சிந்தையில் வைத்தோமய்யா!
மூஞ்சூறு வாகனரே
எங்கள்
முக்கண்ணனின் மைந்தரே
துஞ்சாமல் காப்பவரே
உன்னை எங்கள்
நெஞ்சுக்குள் வைத்தோமய்யா!
மஞ்சள் விநாயகரே
எங்கள்
மனம்போல அருள்பவரே
தொந்திக் கணபதியே
உன்னை எங்கள்
புந்தியில் வைத்தோமய்யா!
--கவிநயா
வாழ்த்துகள் :)
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
ReplyDelete50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் கவிநயா ! ஆன்மாவான கணபதியின் அற்புதத்திருநாளில் அரைசதம் அடித்தமைக்கு! வரும்நாளில் ஆயிரம்பல்லாயிரமாகி பலபதிவுகள் வழங்கி சிறக்க வாழ்த்துகள்! அடிக்கடி இங்க
ReplyDeleteவரமுடிவதில்லை வேறு பணிகள் காரணமாய் ...இயன்றவரைக்கும் இனி தலைகாட்றேன் இந்தியா வரப்போ
மைபா சாப்பிட எங்க வீட்டுக்கு நீங்க தலைகாட்டணும் என்ன?:)
வாழ்த்துக்கள் கவிநயா. :-)
ReplyDeleteபட்டி தொட்டி எங்கும்,
ReplyDeleteபிள்ளையார்ப்பட்டி அங்கும்,
இங்கு,அங்கு மட்டும் எனாதபடி எங்கும்
தங்கும் அருளும் பொங்கும்!
விநாயகன் அவனைப்பாடி அக்காவும்
செய்திட்ட நயமான கவியும்
, அதில்
பொய்த்திடாமல் நிறை நம்பிக்கையும்,
தும்பிக்கையான் தாளதைச் சேர்ந்திடுதே!
அரை சதம் அடித்து ஆண்டமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுந்தி முந்தி விநாயகன் அருள் புரிவான். வாழ்த்துகள் 50-வது பதிவுக்கு!
ReplyDeleteநேற்று விளையாடத் தொடங்கிய மாதிரி இருக்கிறது;
ReplyDeleteஅதற்குள் ஸ்கோர் எகிறிவிட்டதே?..
அன்பான வாழ்த்துக்கள்..
அத்தனையும் சிரத்தையுடனான படைப்பிலக்கியம் என்பதால்
வழக்கம் போல் என்றில்லாமல்
சிறப்பு வாழ்த்துக்கள்..
வேண்டும் வரமெலாம் கிடைக்க
விநாயகர் அருள் புரிவார்.
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் அக்கா. 50வது இடுகைக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கவிநயா அக்கா :)
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தூயா :)
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி தமிழன் :)
ReplyDeleteஅட, வாங்க மைபாக்கா :) மைபாவை மிஸ் பண்ணுவேனா என்ன? இன்னொரு பெரீய்ய ஆசையும் இருக்கு - என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் பாடலுக்கு நீங்க பாட, நான் ஆடணும் :)
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க மை ஃப்ரண்ட் :)
ReplyDeleteவருக ஜீவா. கவிதை தானா கொட்டுதே :) மிக்க நன்றி!
ReplyDeleteவருக வருக கீதாம்மா :) மிக்க நன்றி!
ReplyDeleteஅன்பான சிறப்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா :) தங்களைப் போன்றவர்களின் அன்பு கிடைத்ததற்கும் இறையருளே காரணம். மனம் கனிந்த நன்றிகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி குமரா :)
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி குமரா :)
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரம்யா :)
ReplyDeleteகவிநயா,
ReplyDelete50க்கு வாழ்த்துக்கள். நூறு, ஆயிரம் என பெருகட்டும் பதிவுகள்.
அக்கா..மீ தி லேட்!
ReplyDeleteஜூரப் பின்னூட்டம்!
அதுனால சூடான பின்னூட்டம்! :)
வாழ்த்துக்கள்-க்கா! ஐம்பதிலும் ஆசை வரும்-னு பாடலீயா? :)
கொழுக்கட்டையைக் கண்ணுல காட்டாமப் பாட்டு மட்டும் போட்டா எப்பிடி?
முந்தி வினாயகரே பாட்டு மிகவும் நன்றாயிருக்கிறது
ReplyDeleteஎன்று தெரிந்ததும்
மேடம் துளசி அவர்கள் வீட்டிலிருந்த மயிலிறகு பிள்ளையார்
ஓடோடி வந்துவிட்டார்.
http://ceebrospark.blogspot.com
லே உங்கள் பாட்டையும் கேளுங்கள்.
தொந்தி கணபதியின் அருளையும்
பெறுங்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: துளசி அம்மா வீட்டிலே கொழக்கட்டை சரியா வல்லையாம்.
நீங்கள் வரும்போது 51 கொழக்கட்டை எடுத்து வந்து நிவேதனம்
செய்யவும். ( அரை சதம் அடித்ததற்கு புள்ளையாருக்கு 50.
தாத்தா எனக்கு ஒன்னு.)
பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்த பதிவும் பிள்ளையார் பாடல். இன்று அரை சதம் அடிக்கையிலும் அவரடி பணிந்து பதிந்திருக்கிறீர்கள் அவரைப் புந்தியில் நிறுத்திட ஒரு பாடல். விரைவினில் சதம் அடித்திட
ReplyDeleteவிநாயகர் அருள் புரிந்திடுவார்.
வாழ்த்துக்கள் கவிநயா!
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். கவிதை அழகு. :)
ReplyDeleteவாங்க சதங்கா. வாழ்த்துகளுக்கு நன்றி :)
ReplyDeleteவருக கண்ணா. ஜுரமா இருந்தாலும் அதோட வந்து அக்கறையா வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி :) இப்ப எப்படி இருக்கு? அலுவலகத்தார் கவனிப்புல சரியாகி இருக்கணுமே?
ReplyDeleteநன்றி சுப்பு தாத்தா. மயிலிறகோட துளசியம்மா வீட்டு பிள்ளையாரை தரிசித்து உங்க குரலில் பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன். கொழுக்கட்டை மட்டும் உங்களுக்கும் விநாயகருக்கும் சேர்த்து நாங்களே சாப்பிட்டாச்சு :)
ReplyDeleteஅன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி!
ReplyDeleteவாங்க ரமேஷ். ரொம்ப நன்றி!
ReplyDelete50ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா!!!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி மௌலி!
ReplyDelete