உள்ளுக்குள்ளே கொதித்துக்
குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது...
தகதகக்கும் தங்கக் குழம்பு
தளதளத்து ஆங்கரித்து
கூண்டுப் புலியாய்…
வெளியேற வழியின்றி –
நீரில் முழுகி மூச்சுத் திணறி
சுவாசத்திற்குத் தவிக்கும்
உயிரைப் போல்
தவித்துத் தத்தளித்து –
மதங் கொண்ட களிறாய்
கட்டுக் கடங்காமல்
கொந்தளித்துக் கனன்று –
பொறாமையில் புகையும்
மனிதர் போல்
அனல் காற்றை
பெருமூச்சாய் விட்ட வண்ணம் –
காட்டு வெள்ளமாய்ப்
பொங்கிப் பெருகி
தொட்டதையும் பட்டதையும்
பொசுக்கிச் சாம்பலாக்கும் நாளை
ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு –
ஆயினும்
வெளிப் பார்வைக்கு என்னவோ
மிக அமைதியாகத்தான் தெரிகிறது
எரிமலை…
--கவிநயா
நல்லா விறுவிறுப்பாக இருக்கு...ரசித்தேன் ;)
ReplyDeleteகவிநயா,
ReplyDeleteஅமைதியான தோற்றத்தை சீறும் எறிமலையாய் கவிதையாக்கியது அருமை
நல்லா இருக்குங்க கவி..
ReplyDelete//ஆயினும்
வெளிப் பார்வைக்கு என்னவோ
மிக அமைதியாகத்தான் தெரிகிறது
எரிமலை… //
மனமும் எரிமலையும் நல்ல பொருத்தம்..
கோபிநாத், சதங்கா, கோகுலன், மூவருக்கும் நன்றிகள்!
ReplyDelete//மனமும் எரிமலையும் நல்ல பொருத்தம்..//
சரியா சொன்னீங்க, கோகுலன். அப்படித்தான் எழுதினேன்..