முன்னேறு நீ முன்னேறு!
முடியும் உன்னால் முன்னேறு!
முன்னேறு நீ முன்னேறு!
இலக்கை நோக்கி முன்னேறு!
முதல்அடி வைத்தால் முடிவினைத் தொடலாம்
ஓரிடம் கிடந்தால் எதைத் தான் பெறலாம்?
அயர்ச்சியை விடுத்து முயற்சிகள் செய்தால்
அகிலம் போற்றும்! அகமும் போற்றும்!
ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு படியாம்
ஒவ்வோர் படியும் உந்தன் வழியாம்!
தடுக்கி விழுந்தாலும் முடங்கி விடாதே!
எடுத்த காரியத்தில் தளர்ந்து விடாதே!
முடுக்கி விடப்பட்ட விசையினைப் போலே
சொடுக்கி விடப்பட்ட அம்பினைப் போலே
கருத்தைப் பதிப்பாய் இலக்கினிலே!
கடுகிச் செல்வாய் பாதையிலே!
முன்னேறு நீ முன்னேறு!
முடியும் உன்னால் முன்னேறு!
--கவிநயா
அற்புதம்
ReplyDelete/முதல்அடி வைத்தால் முடிவினைத் தொடலாம்
ஓரிடம் கிடந்தால் எதைத் தான் பெறலாம்?
அயர்ச்சியை விடுத்து முயற்சிகள் செய்தால்
அகிலம் போற்றும்! அகமும் போற்றும்!
ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு படியாம்
ஒவ்வோர் படியும் உந்தன் வழியாம்!
தடுக்கி விழுந்தாலும் முடங்கி விடாதே!
எடுத்த காரியத்தில் தளர்ந்து விடாதே!
முடுக்கி விடப்பட்ட விசையினைப் போலே
சொடுக்கி விடப்பட்ட அம்பினைப் போலே
கருத்தைப் பதிப்பாய் இலக்கினிலே!
கடுகிச் செல்வாய் பாதையிலே!/
வரிகள் ஒவ்வொன்றும்
நாட்டியம் ஆடுகிறது
முதல்அடி வைத்தால் முடிவினைத் தொடலாம்
ReplyDeleteஓரிடம் கிடந்தால் எதைத் தான் பெறலாம்? ]]
அருமை - சோம்பேரிகளுக்கு நல்ல ஒரு சொல்.
மொத்தத்தில்
நயமான கவிதை.
//முதல்அடி வைத்தால் முடிவினைத் தொடலாம்
ReplyDeleteஓரிடம் கிடந்தால் எதைத் தான் பெறலாம்? //
இந்த இருவரிக்குள் அடக்கி விட்டீர்கள் வள்ளுவர் போல அரும் பெரும் கருத்தை.
கவிதை வெகு நன்று கவிநயா!
ஆஹா.....முயற்ச்சி திருவினையாக்கும்.....கவிதைகள் ரம்மியம்....
ReplyDelete//ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு படியாம்
ReplyDeleteஒவ்வோர் படியும் உந்தன் வழியாம்!//
இப்படி எல்லா நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கொண்டாள் வெற்றி நிச்சயம்.
நன்றி கவிநயா
முதல்அடி வைத்தால் முடிவினைத் தொடலாம்//
ReplyDeleteஅப்ப கடேசி அடியை எடுத்து வெச்சா ஆரம்பத்துக்கு போயிடலாமா?
;-))
சும்மா கலாய்ச்சேன்.
நம்பிக்கை ஊட்டற கவிதை!
முன்னே போட்ட இதே பின்னூடம் போச்சா இல்லையானு தெரியலை. போயிருந்தா எதாவது ஒண்ணை மட்டும் போடுங்க. நன்றீ.
\ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு படியாம்
ReplyDeleteஒவ்வோர் படியும் உந்தன் வழியாம்!
தடுக்கி விழுந்தாலும் முடங்கி விடாதே!
எடுத்த காரியத்தில் தளர்ந்து விடாதே!\\
தேவையான வரிகள்...கவிதை கலக்கல் ;)
//வரிகள் ஒவ்வொன்றும்
ReplyDeleteநாட்டியம் ஆடுகிறது//
வித்தியாசமா சொல்லியிருக்கீங்க :) மிக்க நன்றி திகழ்மிளிர்.
//அருமை - சோம்பேரிகளுக்கு நல்ல ஒரு சொல்.
ReplyDeleteமொத்தத்தில்
நயமான கவிதை.//
மிக்க நன்றி ஜமால் :)
//இந்த இருவரிக்குள் அடக்கி விட்டீர்கள் வள்ளுவர் போல அரும் பெரும் கருத்தை.
ReplyDeleteகவிதை வெகு நன்று கவிநயா!//
அச்சோ, பெரிய வார்த்தையெல்லாம் சொல்லீட்டீங்க :) மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
///ஆஹா.....முயற்ச்சி திருவினையாக்கும்.....கவிதைகள் ரம்மியம்....//
ReplyDeleteரம்(மி)யம் எனக்கு பிடித்த சொல் :) முதல் வருகைக்கும், பிற கவிதைகளையும் வாசித்தமைக்கும், மிக்க நன்றி வசந்த்.
//இப்படி எல்லா நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கொண்டாள் வெற்றி நிச்சயம்.//
ReplyDeleteஉண்மைதான். ஆனாலும் அப்படி எடுத்துக் கொள்வதும் சுலபமில்லை :( பழகிக்கணும். வருகைக்கு மிக்க நன்றி கைலாஷி.
//அப்ப கடேசி அடியை எடுத்து வெச்சா ஆரம்பத்துக்கு போயிடலாமா?//
ReplyDeleteகலாய்ச்சாலும் அதிலும் உண்மை இருக்கு திவா :) கடைசி அடிக்கப்புறம் ஆரம்பிச்ச இடத்துக்கே போயிடலாம்தானே, ஆன்மீக பார்வையில்... :)
முன்னே போட்ட பின்னூட்டம் இன்னும் வரலை :)
வருகைக்கு மிக்க நன்றி.
//தேவையான வரிகள்...கவிதை கலக்கல் ;)//
ReplyDeleteவரணும் கோபி. மிக்க நன்றி :)
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
/ கவிநயா said...
ReplyDelete//வரிகள் ஒவ்வொன்றும்
நாட்டியம் ஆடுகிறது//
வித்தியாசமா சொல்லியிருக்கீங்க :) மிக்க நன்றி திகழ்மிளிர்./
நான்
மிகுந்த கோபத்தில்
:))))))))))))
அச்சோ, தவறா நினைக்காதீங்க திகழ்மிளிர். வித்தியாசமான கருத்துன்னு சொல்லியிருக்கணுமோ? நல்ல வேளை, ஸ்மைலி போட்டுட்டீங்க... அதனால தப்பிச்சேன் :) மிக்க நன்றி :)
ReplyDeleteஇதற்கும் ஒரு மெட்டு போடவா, பாட்டு பாடவா பதிவு செய்யவா - உங்கள் விசிறி
ReplyDelete// itsSoldier said...
ReplyDeleteஇதற்கும் ஒரு மெட்டு போடவா, பாட்டு பாடவா பதிவு செய்யவா - உங்கள் விசிறி//
செய்ங்களேன் :) முதல் வருகைக்கும் விசிறின்னு சொன்னதற்கும் மிக்க நன்றி :)