
சின்னஞ் சிறிய ரோஜாப்பூ
சிரிக்கும் அழகில் மத்தாப்பூ
கன்னங் குழியும் சின்னப்பூ
கட்டித் தருவேன் முத்தப்பூ!
கண்கள் கருக மணிபோலே;
மூக்கோ சின்னச் சிமிழ்போலே;
கன்ன மிரண்டும் பூப்போலே;
வாய்நீர் வழியும் தேன்போலே!
மொட்டுக் கைகள் தொட்டு விட்டால்
உள்ளம் தன்னால் மலர்ந்திடுமே;
பட்டுப் பிஞ்சுக் கால் உதைத்தால்
பரவசம் மிகவும் ஆகிடுமே!
குட்டிப் பாப்பா சிரிப்பினிலே
உலகம் எல்லாம் ஒளிபெறுமே!
குழந்தை உள்ளம் கொண்டவர்க்கு
அகிலம் எல்லாம் அன்புருவே!
--கவிநயா
சுப்பு தாத்தா "நீல வண்ணக் கண்ணா வாடா" மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!
//குழந்தை உள்ளம் கொண்டவர்க்கு
ReplyDeleteஅகிலம் எல்லாம் அன்புருவே!//
இந்தக் கடைசி வரி உணர்ந்து எழுதிய ஒன்றாகத் தெரிகிறது.. தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
கவிதைகளுக்காகவே தளம் கொண்டிருக்கும் திரு.சிவக்குமாரன் தெரியுமோ?
www.sivakumarankavithaikal.blogspot.com
கவிதைகள் பிடித்தோருக்கெல்லாம் சிவக்குமாரனையும் பிடிக்கும்!
அழகுப் பாப்பாவைக் கையில் ஏந்திய மகிழ்ச்சியைத் தந்தன வரிகள்:)!
ReplyDelete"chinnanchiriya rojappoo
ReplyDeletesirikkum azhagil maththaappoo"
dhrishti pattu vidum munbu
suththippodu milagaa uppu!
kuttikku kanakkillaa 'ummmmaa'
உள்ளம் எல்லாம் கொள்ளை போனது
ReplyDeleteஇந்த வண்ணப்பூவில்
பாப்பா பாட்டு அருமை அக்கா! :-)
ReplyDelete//இந்தக் கடைசி வரி உணர்ந்து எழுதிய ஒன்றாகத் தெரிகிறது.. தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.//
ReplyDeleteநன்றி ஜீவி ஐயா.
//கவிதைகளுக்காகவே தளம் கொண்டிருக்கும் திரு.சிவக்குமாரன் தெரியுமோ?//
ஓரிரு முறைகள் அந்தப் பக்கம் போயிருக்கேன். மறுபடி போய் பார்க்கிறேன் :)
//அழகுப் பாப்பாவைக் கையில் ஏந்திய மகிழ்ச்சியைத் தந்தன வரிகள்:)!//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி :)
//dhrishti pattu vidum munbu
ReplyDeletesuththippodu milagaa uppu!
kuttikku kanakkillaa 'ummmmaa'//
வாங்க லலிதாம்மா. யார் பாப்பாவோ, தெரியலை, கூகுளார் தந்தார் :) அந்தப் பாப்பா ரொம்ப நன்றாக இருக்கட்டும்! திடீரென குழந்தை பற்றி எழுதத் தோன்றியது... அதனாலதான் அப்படி. ரசித்தமைக்கு நன்றி அம்மா.
//உள்ளம் எல்லாம் கொள்ளை போனது
ReplyDeleteஇந்த வண்ணப்பூவில்//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், திகழ்!
//பாப்பா பாட்டு அருமை அக்கா! :-)//
ReplyDeleteமிக்க நன்றி குமரா :)
Cute lines...! My sincere wishes.
ReplyDeleteBeautiful poetry!
ReplyDeleterombave azhagaana varigal... :)
// Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
ReplyDeleteCute lines...! My sincere wishes.//
முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரவிகுமார்!
// Matangi Mawley said...
ReplyDeleteBeautiful poetry!
rombave azhagaana varigal... :)//
மிக்க நன்றி Matangi :)
வணக்கம் சகோ, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!
ReplyDeletePaappa pattu roomba suuperaa irukku!! how come thedirnu pappa pattu? oru vellai Thakkudu yabakam vanthuduthoo??..:)))
ReplyDeleteஒவ்வொரு வரியிலும் சொர்க்கம் உணர்ந்தேன்.
ReplyDelete//வணக்கம் சகோ, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!//
ReplyDeleteஅன்புக்கு மிக்க நன்றி, மாணவன்! சீக்கிரம் வந்து பார்க்கிறேன்.
//Paappa pattu roomba suuperaa irukku!! how come thedirnu pappa pattu? oru vellai Thakkudu yabakam vanthuduthoo??..:)))//
ReplyDeletehaha :) u got it :)))
நானானி said...
ReplyDelete//ஒவ்வொரு வரியிலும் சொர்க்கம் உணர்ந்தேன்.//
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி அம்மா.
சுப்பு தாத்தா "நீல வண்ணக் கண்ணா வாடா" மெட்டில் பாடித் தந்ததை இடுகையில் சேர்த்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள் :) மிக்க நன்றி தாத்தா!
ReplyDeleteஇப்ப நிச்சயம் அனுபவிக்க முடியுது! ஏன்னு தெரிஞ்சிருக்கும்!
ReplyDelete//இப்ப நிச்சயம் அனுபவிக்க முடியுது! ஏன்னு தெரிஞ்சிருக்கும்!//
ReplyDeleteதெரியுமே! சொந்த பிள்ளைங்களை விட பேரன் பேத்தி ரொம்பவே சிறப்புதான் :)
ரசித்தமைக்கு நன்றி திவாஜி.