Sunday, January 30, 2011

தன்னோடு தான் மட்டும்...


நீலவானம் நீளமாக
விரிந்தேதான் கிடந்தாலும்
நட்சத்திரக் கூட்டங்கள்
நவநவமாய் ஒளிர்ந்தாலும்
வானுலாவும் நில வென்னவோ
தன்னோடு தான் மட்டும்...

கருங்கடலோ பெருங்கடலாய்
பரந்தேதான் கிடந்தாலும்
கரையதுவும் கடலுக்கு
மிகஅருகில் இருந்தாலும்
கடல்பொங்கும் அலை யெல்லாம்
தன்னோடு தான் மட்டும்...

உறவெல்லாம் விதவிதமாய்
உலகெங்கும் இருந்தாலும்
கடமைகள் பலப்பலவாய்
காத்தேதான் கிடந்தாலும்
தனிமையிலே மனம் மட்டும்
தன்னோடு தான் மட்டும்...

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/slurve/457958786/

23 comments:

  1. 'தன்னோடு தான் மட்டும்'

    அத்தனை வரிகளும் அற்புதம்.

    மிகப் பிடித்தது.

    ReplyDelete
  2. >>>>உறவெல்லாம் விதவிதமாய்
    உலகெங்கும் இருந்தாலும்
    கடமைகள் பலப்பலவாய்
    காத்தேதான் கிடந்தாலும்
    தனிமையிலே மனம் மட்டும்
    தன்னோடு தான் மட்டும்...

    நிதர்சனம்.. அழகு கவிதை..

    ReplyDelete
  3. ஆமாம்.. அவரவருடன் அவரவர்தான்.

    ReplyDelete
  4. //தனிமையிலே மனம் மட்டும்
    தன்னோடு தான் மட்டும்...//
    Manadhai thottuteenga aunty! :)

    Thanimaiyil dhaan sindhanaigal pirakkum.
    Thanimaiyil dhaan thezhivu varum.
    Thanimaiyil dhaan naame nam thavarugalai aarayndhu paarpom.

    Aanalum, thanimaiyilum, manadhukkul olindhu kondu "comfort" tharuvadhu Perumal mattume!
    Thanimaiyilum thindaadum manadhu avanai dhaan naadum! :)

    ReplyDelete
  5. தனிமை எனக்கு பிடிச்ச விஷயம்.... :-))

    ReplyDelete
  6. //மிகப் பிடித்தது.//

    மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி :) நன்றி.

    ReplyDelete
  7. //நிதர்சனம்.. அழகு கவிதை..//

    ரசித்தமைக்கு மிக்க நன்றி, சி.பி.செந்தில்குமார்!

    ReplyDelete
  8. //nayam thathumbum kavithai!//

    ரொம்ப நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  9. //ஆமாம்.. அவரவருடன் அவரவர்தான்.//

    :) நன்றி உழவன்.

    ReplyDelete
  10. //Manadhai thottuteenga aunty! :)//

    நன்றி கள்வனின் காதலி :)

    //Thanimaiyil dhaan sindhanaigal pirakkum.
    Thanimaiyil dhaan thezhivu varum.
    Thanimaiyil dhaan naame nam thavarugalai aarayndhu paarpom.//

    ரொம்ப சரி! இந்த சின்ன வயசில் ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே தெரியுது :)

    //Aanalum, thanimaiyilum, manadhukkul olindhu kondu "comfort" tharuvadhu Perumal mattume!
    Thanimaiyilum thindaadum manadhu avanai dhaan naadum! :)//

    :) அப்படித்தான் இருக்கணும் :)

    ReplyDelete
  11. //தனிமை எனக்கு பிடிச்ச விஷயம்.... :-))//

    எனக்கும்! ரொம்ப!! :)

    நன்றி திவாஜி.

    ReplyDelete
  12. //நச்//

    உங்க பின்னூட்டமும்! :)

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அரசன்.

    ReplyDelete
  13. தன்னோடும் தானும் தனித்தனியா?

    ஒரு கவிதைக்கு உட்பொருள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. //Alagu.
    RM.Natarajan//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  15. //தன்னோடும் தானும் தனித்தனியா?//

    கொஞ்சம் அழுத்திச் சொல்லத்தான் :)

    //ஒரு கவிதைக்கு உட்பொருள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.//

    வாசிக்கக் காத்திருக்கேன்...

    நன்றி ஜீவி ஐயா!

    ReplyDelete
  16. பெயருக்கேற்ற கவிதை.

    ReplyDelete
  17. ஜெரி ஈசானந்தன். said...
    //பெயருக்கேற்ற கவிதை.//

    முதல் வருகைக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி ஜெரி ஈசானந்தன்!

    ReplyDelete
  18. கவிதை நல்லா இருக்கு. தனிமையிலே இனிமை காண முடியுமா? அம்பாளை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். :-)

    ReplyDelete
  19. /உறவெல்லாம் விதவிதமாய்
    உலகெங்கும் இருந்தாலும்
    கடமைகள் பலப்பலவாய்
    காத்தேதான் கிடந்தாலும்
    தனிமையிலே மனம் மட்டும்
    தன்னோடு தான் மட்டும்...
    /

    அற்புதம்

    ReplyDelete
  20. //கவிதை நல்லா இருக்கு. தனிமையிலே இனிமை காண முடியுமா? அம்பாளை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். :-)//

    நல்லாச் சொன்னீங்களே... தனிமை வேண்டுவதே அதற்குத்தான் :) கிடைப்பதுதான் குதிரைக் கொம்பா இருக்கு :)

    நன்றி ராதா :)

    ReplyDelete
  21. //அற்புதம்//

    நன்றி திகழ்! :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)