Thursday, January 13, 2011

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!


திருப்பள்ளியெழுச்சி - 10

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!



பொருள்:
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த பிரம்மாவும் வருந்துகின்றனர். நீயோ, உன்னுடைய பரந்த கருணையினால் எங்களை ஆட்கொள்ளவென இந்த புவியில் எழுந்தருளி எங்களை ஆட்கொள்ள வல்லவனாயிருக்கிறாய்! அரிதான இனிய அமுதத்தை ஒத்தவனே! பள்ளி எழுந்தருள்வாயாக!


இன்றுடன் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிவுகள் நிறைவு பெறுகின்றன. ஓம் நமசிவாய! சிவாய நம ஓம்!!

8 comments:

  1. //மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிவுகள் நிறைவு பெறுகின்றன.//

    மனதுக்கு நிறைவான பதிவுகள்.

    நன்றிகளும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  2. இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. பின்னூட்டம் போடலியேன்னு நினைக்க வேண்டாம். தொடர்ந்து படித்துக் கொண்டு தான் வருகிறேன்.

    அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.
    வெளியே Snow; வீட்டுக்குள் பொங்கல் என்று ஜமாயுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி ராமலக்ஷ்மி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வாங்க ரமேஷ். உங்களுக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வரணும் ஜீவி ஐயா. உண்மையில், நீங்க கடைசி நாள் அன்றைக்கு பின்னூட்டுவீங்கன்னுதான் நினைச்சேன் :) நீங்க சுட்டிய தட்டச்சுப் பிழையையும் சரி செய்துட்டேன். மிக்க நன்றி ஐயா. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி எழுதிட்டு இருந்ததாலே உங்க பதிவுக்கு வரவே இல்லை. ஒரு பயம் தான்! :)))))) பொங்கல் வாழ்த்துகள், பொங்கல் கவிதையும் படிச்சாச்சு.

    ReplyDelete
  8. //ஒரு பயம் தான்! :))))))//

    ஆத்தாடி! என்ன பயம் அம்மா? :) சரி... இப்பவாச்சும் வந்தீங்களே :) பொங்கல் கவிதை படிச்சதுக்கும் சேர்த்து ரொம்ப நன்றி அம்மா :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)