ஒரு உறவினரிடமோ அல்லது நண்பரிடமோ ஏதோ ஒரு காரணத்துக்காக நாம ரொம்ப கோபப் படறோம், சண்டை போடறோம்னு வச்சுக்குவோம். கோபம் வந்தாதான் நமக்கு கண்ணு மண்ணு எதுவும் தெரியாதே... அவர் மனம் புண்படும்படி, கண்டபடி வார்த்தைகளைக் கொட்டிடறோம். அன்றைக்கு சாயந்திரமே அந்த நண்பர் எதனாலோ திடீர்னு மரணம் அடைஞ்சுட்டார்னு சேதி வருது. அப்ப நமக்கு எப்படி இருக்கும்! நம்ம மனசு படக் கூடிய பாட்டையும், அந்த குற்ற உணர்வு காலமெல்லாம் நீட்டிப்பதையும் தவிர்க்க முடியுமா?
முடியும், நாம நினைச்சா... அதாவது, முதல்லயே அப்படியெல்லாம் கட்டுப்பாடில்லாம நடந்துக்கறதை, பேசறதை, கோவப்படறதைத் தவிர்த்தா, அதனோட பின் விளைவுகளையும் தவிர்க்கலாம்.
மரணம்.
அதைப் பார்த்தாலே, அடுத்த சில நாட்களுக்கு நம் மனசில் ஒரு பாதிப்பு இருக்கும். அது நம்ம நடவடிக்கைகளிலும் தெரியும். அதுவும் நமக்கு கொஞ்சம் நெருங்கியவர்களுடையதுன்னா, கேட்கவே வேண்டாம். வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது, அநித்தியமானது, அப்படின்னு யாரோ ‘சுளீர்’னு மண்டையில் அடிச்சு சொல்லிட்டுப் போன மாதிரி இருக்கும்.
நாளைக்கே… இல்லையில்லை… இன்றைக்கே நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? எத்தனை ஆசைகள், எத்தனை கோபங்கள், எத்தனை தாபங்கள், எத்தனை வருத்தங்கள், எல்லாம் குழம்பிய சேறு மாதிரி, நம்ம மனசின் அடியில் தங்கி விட்டவை. இவை எதுவுமே இல்லாம மனசு தெளிவா நிர்மலமான நீரோடை மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!
ஆனா அது ஒரே நாளில் வரக் கூடிய விஷயமா என்ன? தினம் தினம் நம்மை, நம் செயல்களை, நம் உணர்வுகளை, நம் நினைவுகளை, இப்படி எல்லாத்தையும் நாமே கவனிச்சு, நம்மை நாமே பயிற்றுவிச்சுக்க வேண்டிய மிகப் பெரிய விஷயம் அது.
அந்தப் பெரிய விஷயத்தையும் கொஞ்சம் சுலபமா செய்ய ஒரு வழி இருக்கு… அது என்ன வழி?
ஒவ்வொரு நாளையும் இன்றே கடைசின்னு நினைச்சு வாழறதுதான் அது.
அப்படி நினைக்கிறதால என்ன ஆகும்? நாம செய்யற தினசரி வேலைகளை முழு மனசோட, முழு ஈடுபாட்டோட செய்வோம். நம்மைச் சுற்றி இருக்கறவங்ககிட்ட சுடுசொல்லே பேசாம, அன்பை மட்டுமே பகிர்ந்துக்குவோம். புறம் பேச மாட்டோம். நம் குடும்பத்தினர் நாம இல்லாம தவிக்கக் கூடாதுங்கிறதுக்காக அவங்களை பல விஷயங்களிலும் பழக்கப் படுத்துவோம். சாதாரணமா நாளைக்கு நாளைக்குன்னு ஒத்திப் போடற விஷயங்களை இன்றைக்கே செய்ய முயற்சிப்போம். இப்படி ஒவ்வொண்ணையும் கருத்தோட செய்யும்போது, எங்கே நிம்மதின்னு தேட வேண்டிய அவசியமே வராது. மனசு அமைதிப் பூங்காவாத்தான் இருக்கும்!
பிறக்கும் போது, நாம அழுதுகிட்டே பிறக்கறோம்; நம்மைச் சுத்தி இருக்கறவங்க சந்தோஷப்படறாங்க. ஆனா நாம இந்த உலகை விட்டுப் போகும் போது நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாம் வருத்தப்படணும்; அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கையை வாழணும், என்பார் ஸ்ரீயோகானந்த பரமஹம்ஸர்.
தினமும் காலையில் இறைவனை நினைச்சு விபூதி பூசிக்கும் போது, வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நினைச்சுப் பார்த்து, இந்த விபூதியைப் போல இந்த உடலும் எந்த நிமிஷமும் சாம்பலாகலாம்னு உணர்ந்து, அதற்குத் தகுந்த மாதிரி நாம நடந்துக்கணும் என்பதற்காகத்தான் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினாங்க.
அதானல, இன்றே நமக்கு இறுதி நாளா இருக்கக்கூடும், அப்படின்னு மனசின் ஓரத்தில் போட்டு வச்சுக்கட்டு, தினசரி வாழ்க்கையை வாழ்வோம்!
Live one day at a time and make it a master piece! – எங்கேயோ படிச்சது; எனக்குப் பிடிச்சது :)
“Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.” – இது மகாத்மா காந்தி சொன்னது.
அன்பாய் வாழ்க! அமைதியாய் வாழ்க!
நன்றாய் வாழ்க! நீடுழி வாழ்க!
அன்புடன்,
கவிநயா
நல்ல கருத்துள்ள பதிவு கவிநயா
ReplyDeleteஒவ்வொருவரும் வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய கருத்து. கண்டிப்பாக கடைபிடிக்க இன்றிலிருந்து ஆரம்பித்து விட்டேன்.
ReplyDeleteஒரு அற்புதமான கருத்தை எளிமையாய் அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். காட்டிய வழி பிடிச்சிருக்கு:)! நன்றி கவிநயா.
ReplyDeleteதலைப்பை பார்த்தவுடன் “பகீர்”னு இருந்தது....
ReplyDeleteபதிவின் இந்த வரிகளை (அதானல, இன்றே நமக்கு இறுதி நாளா இருக்கக்கூடும், அப்படின்னு மனசின் ஓரத்தில் போட்டு வச்சுக்கட்டு, தினசரி வாழ்க்கையை வாழ்வோம்) படிக்கும் வரை ஒரே குழப்பம்....
உங்களிடமிருந்து மற்றுமொரு நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்....
அருமையா சொன்னீங்க..
ReplyDeleteellorume ithai kadai pidikkanum.migavum sari.thalaippu,vilakkam ellaame pudhumaiyaga irukkiradhu.
ReplyDeletenatarajan
//நல்ல கருத்துள்ள பதிவு கவிநயா//
ReplyDeleteமிக்க நன்றி வேலு ஜி :)
//ஒவ்வொருவரும் வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய கருத்து. கண்டிப்பாக கடைபிடிக்க இன்றிலிருந்து ஆரம்பித்து விட்டேன்.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி மிதிலா. இந்தப் பதிவு அதன் பலனை அடைந்து விட்டது :)
//ஒரு அற்புதமான கருத்தை எளிமையாய் அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். காட்டிய வழி பிடிச்சிருக்கு:)! நன்றி கவிநயா.//
ReplyDeleteவாசிச்சதுக்கு உங்களுக்குத்தான் நன்றி ராமலக்ஷ்மி :)
//தலைப்பை பார்த்தவுடன் “பகீர்”னு இருந்தது....//
ReplyDelete:) அப்படில்லாம் நிறுத்திட மாட்டேன், இப்போதைக்கு. அவ்ளோ சீக்கிரம் உங்களுக்கெல்லாம் என்னிடமிருந்து விடுதலை கிடைச்சிடுமா என்ன? :)
//உங்களிடமிருந்து மற்றுமொரு நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்....//
மிக்க நன்றி கோபி.
//அருமையா சொன்னீங்க..//
ReplyDeleteநன்றி உழவன்.
//ellorume ithai kadai pidikkanum.migavum sari.thalaippu,vilakkam ellaame pudhumaiyaga irukkiradhu.//
ReplyDeleteநன்றி திரு.நடராஜன் :)
fine.please also see
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Pe-Eosmk6oE
ithai paarunga kandippa. all visitors also please.
subbu rathinam
நல்ல பதிவு.... எளிமையான விளக்கத்தோடு மிக அழகா எழுதி இருக்கிங்க, வாழ்த்துக்கள் கவிநயா!!!
ReplyDeleteம்ம்ம் இன்றே கடைசின்னா மால் ஐ காலி பண்ணிடுவோமே?
ReplyDeleteஹிஹிஹி ஜஸ்ட் கிடிங்! நல்ல பதிவு!
//ம்ம்ம் இன்றே கடைசின்னா மால் ஐ காலி பண்ணிடுவோமே?//
ReplyDeleteஅப்படின்னா?
//நல்ல பதிவு!//
நன்றி திவாஜி!
சுப்பு தாத்தா, ப்ரியா, உங்க ரெண்டு பேர் பின்னூட்டத்திற்கும் நான் பதிலே இடலை போலருக்கு :( மன்னிச்சுக்கோங்க. இப்பதான் தற்செயலா பார்த்தேன். மிகவும் நன்றி! தாத்தா, நீங்க அனுப்பிய சுட்டியையும் இப்பதான் பார்க்கிறேன். ரொம்ப ரொம்ப ஸாரி. என்ன ஆச்சர்யமான ஒற்றுமை! பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDelete