வணக்கம்.
கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கபீரின் ஈரடிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அழகுத் தமிழில் மொழிபெயர்த்து, அதோடு வெல்லப்பாகு, ஏலம், முந்திரி, எல்லாம் சேர்த்து, சுவைக்கச் சுவைக்க நமக்கு அளிப்பவர், கபீரன்பர். அத்துடன் மட்டுமல்லாது, படம் வரைவதிலும், கவிதை எழுதுவதிலும், ஆன்மீகத்திலும், இப்படி பற்பலவற்றிலும் சிறந்த சகலகலாவல்லவர். கபீர் வலைப்பூவில் அவருடைய பதிவு எண்ணிக்கை 100-ஐ எட்டியதை முன்னிட்டு, சில பதிவர்களை சிறப்பு இடுகைகள் இடுவதற்கென விருந்துக்கு அழைத்திருக்கிறார். (நல்ல ஐடியாவா இருக்கில்ல! :) அந்த அதிர்ஷ்டம் எனக்கும் அடித்தது. நம்மால் முடியுமா என்று முதலில் கொஞ்சம் தயங்கினாலும், இறையருளால் ஒரு மாதிரி எழுதி விட்டேன் :) முதல் விருந்தினர் இடுகையை நம்ம கண்ணன் என்கிற கேயாரெஸ் இட்டிருந்தார். அடுத்ததாக இப்போது நம்முடையது... நேரம் கிடைக்கையில் படித்துப் பாருங்கள்...
அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
அன்புடன்
கவிநயா
Writing in that blog is a good recognition for you! Congratulations akkaa! :-)
ReplyDeleteநன்றி குமரா :)
ReplyDeleteமகிழ்ச்சியான விஷயம். வாழ்த்துக்கள் கவிநயா!
ReplyDeleteசரியான நபரைத் தேர்ந்தெடுத்த கபீரன்பருக்கும் வாழ்த்துக்கள்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்:)!
நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteஉங்க தீபாவளியும் இனிமையாக இருந்திருக்கும்னு நம்பறேன் :)