Monday, January 10, 2011

இது அவன் திருவுரு; இவனே அவன்!


திருப்பள்ளியெழுச்சி - 7

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்

மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்

திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையின் தலைவனே! பரம்பொருளின் சுவையானது பழச்சுவையோ, அமுதத்தின் சுவையோ, அறிந்து கொள்ள அரியதோ, அன்றி எளியதோ என்பதை தேவர்களும் அறிய மாட்டார்கள். அப்படி இருக்கையில், இதுவே அவர் திருவுருவம், அவரே இவர், என்று நாங்களும் அறிந்து கொள்ளும்படி, இந்த மண்ணுலகில் எழுந்தருளிக் காட்சி அளிப்பவனே! எங்களை உன் விருப்பம் போல ஆட்கொண்டு அருளிட, பள்ளி எழுந்தருள்வாயே!


படத்துக்கு நன்றி: http://www.tamilhindu.net/t1118-topic

4 comments:

  1. //அது பழச்சுவையென அமுதென
    அறிதற்கு அரிதென எளிதென//

    கலக்கல்!

    //எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்//

    எங்களை உனக்கு எப்படி ஆட்கொள்ளப் போகிறாய், சொல்?-ன்னு முதலாளியை மிரட்டி, வேலை தேடிக் கொள்வது போல் ஜாலியா இருக்கு! :)

    ReplyDelete
  2. முக்கனியின் சுவையென படம் பாடல் விளக்கம். நன்றி.

    ReplyDelete
  3. //எங்களை உனக்கு எப்படி ஆட்கொள்ளப் போகிறாய், சொல்?-ன்னு முதலாளியை மிரட்டி, வேலை தேடிக் கொள்வது போல் ஜாலியா இருக்கு! :)//

    வருக கண்ணா!

    ReplyDelete
  4. //முக்கனியின் சுவையென படம் பாடல் விளக்கம். நன்றி.//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)