உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, January 9, 2011
அணங்கின் மணவாளா!
திருப்பள்ளியெழுச்சி - 6
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: உமாதேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் மெய்யடியார்கள், தங்கள் பந்தபாசங்களை துறந்து, உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்களும் தங்களின் இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பினை அறுத்து ஆட்கொண்டருளும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பான விளக்கம். நன்றி கவிநயா.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு-க்கா!
ReplyDeleteஅப்படியே பழைய பள்ளியெழுச்சி பாட்டெல்லாம் ஒரு எட்டு போய் வாசித்து விட்டேன்! ஒட்டு மொத்த பின்னூட்டம் இங்கே! :)
//பப்பற வீட்டிருந்து//
ReplyDeleteபப்பற என்றால் என்ன?
//பந்தனையறுத்து வந்தறுத்தார்//
அதான் பந்தனை அறுத்து-ன்னு சொல்லியாச்சே! அதுக்கப்பறமும் வந்து எதை அறுக்கணும்-ன்னு சொல்றாரு?
//இப்பிறப்பறுத்து எமையாண்டு//
இப்பிறப்பு மட்டும் தானா?
இப்போதைக்கு இவ்ளோ தான் கேள்வீஸ்! :))
ஏன் எனக்கு பிடிச்ச பாட்டு-ன்னா...//கண்ணியர் மானுடத்து இயல்பில் வணங்குகின்றார்// - இதனால் தான்! :)
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி :)
ReplyDeleteவருக கண்ணா!
ReplyDeleteஹ்ம்... நீங்கள்லாம் எழுதினா எவ்ளோ நல்லாருக்கும்! தெரிஞ்சவங்கள்லாம் செய்ய மாட்டேங்கிறீங்க :( நானு நாலு இடத்தில் படிச்சதை வச்சுதான் எழுதறேன்!
பப்பு என்றால் பரப்பு அப்படின்னு பார்த்தேன். பப்பு அற என்றால் மனம் பரப்பு அற, மனம் குவிந்து, அப்படின்னு ஒரு இடத்தில் பார்த்தேன்; இன்னோருத்தர், பரப்பு என்றால் உலகம் என்றும், உலகப் பற்று அறும்படி, அப்படின்னும் பொருள் சொல்றார்.
ReplyDeleteஎது சரின்னு நீங்களே சொல்லிடுங்க :)
//இப்பிறப்பு அறுத்து//
அப்படின்னா 'இந்த பிறப்பு பிறப்பு,ன்னு சொல்றாங்களே, அதை அறுத்துடு', அப்படின்னு பொருள் கொண்டேன் :)
//ஏன் எனக்கு பிடிச்ச பாட்டு-ன்னா...//கண்ணியர் மானுடத்து இயல்பில் வணங்குகின்றார்// - இதனால் தான்! :)//
ReplyDeleteஅதுக்கும் நீங்களே விளக்கம் சொன்னா நல்லாருக்கும்!