உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Thursday, July 30, 2009
வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி !
வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்
வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி!
(வரம்)
ஆதி கேசவனின் அழகு மார்பினிலே
வாசம் செய்யுகின்ற ஆதிலக்ஷ்மி!
தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும்
தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி!
பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே
பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி!
வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின்
உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி!
(வரம்)
எம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து
தோற்றம் கொண்டசந் தானலக்ஷ்மி!
வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும்
அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி!
எட்டுக் கரங்களுடன் சுற்றி வரும்பகைகள்
வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி!
மாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி
முக்தி அளிக்கும்வித் யாலக்ஷ்மி!
அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து
இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி!
உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம்
உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி!
(வரம்)
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
//வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்
ReplyDeleteவாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி!//
நாங்களும் அப்படியே வேண்டிக் கொள்கிறோம்..
வார்த்தைகள் தாமாக வந்தமர்ந்திருக்கின்றன...அருமை கவிக்கோ கவிக்கா
ReplyDeleteவரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்-க்கா! :)
ReplyDeleteவிரதமெல்லாம் உங்களுக்குத் தானே? நீங்க செஞ்சி வச்ச வடை பாயசம் எல்லாம் நான் சாப்பிடலாம் தானே? :)
லட்சுமிக்கு அருமையான கவிதைக்கா ;)
ReplyDeleteஆனா ஒரு டவுட்டு எத்தனை லட்சுமி போட்டோவுல 8 இருக்கு ஆனா நீங்க பத்து சொல்லியிருக்கிங்க? ;)
\\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்-க்கா! :)
விரதமெல்லாம் உங்களுக்குத் தானே? நீங்க செஞ்சி வச்ச வடை பாயசம் எல்லாம் நான் சாப்பிடலாம் தானே? :)
\\
ஐய்...அசுக்கு...புசுக்கு...அப்போ நானு ;)
//நாங்களும் அப்படியே வேண்டிக் கொள்கிறோம்..//
ReplyDeleteஆகட்டும். வருகைக்கு நன்றி ஜீவி ஐயா.
//வார்த்தைகள் தாமாக வந்தமர்ந்திருக்கின்றன...அருமை கவிக்கோ கவிக்கா//
ReplyDeleteநன்றி மௌலி, வரலக்ஷ்மி விரதம் என்னிக்குன்னு சரியான நேரத்தில் தெரிவித்தமைக்கும், கவிதை எழுதும்படி உரிமையுடன் பணித்தமைக்கும் :) கடைசி நிமிஷத்தில் எழுத முடியுமோ என்னவோன்னு நினைச்சேன். அன்னை அருளால் அமைந்தது.
//வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்-க்கா! :)//
ReplyDeleteநன்றி கண்ணா.
//விரதமெல்லாம் உங்களுக்குத் தானே? நீங்க செஞ்சி வச்ச வடை பாயசம் எல்லாம் நான் சாப்பிடலாம் தானே? :)//
நல்லா! எங்க வீட்டுக்கு வந்தா நிஜமாவே சாப்பிடலாம் :)
//லட்சுமிக்கு அருமையான கவிதைக்கா ;)//
ReplyDeleteநன்றி கோபி :)
//ஆனா ஒரு டவுட்டு எத்தனை லட்சுமி போட்டோவுல 8 இருக்கு ஆனா நீங்க பத்து சொல்லியிருக்கிங்க? ;)//
வரலக்ஷ்மியும் ராஜ்யலக்ஷ்மியும் லக்ஷ்மியின் மற்ற பெயர்களில் அடக்கம். மற்றபடி பாடல் அஷ்டலக்ஷ்மிகளின் மீதுதான் எழுதினேன்.
//ஐய்...அசுக்கு...புசுக்கு...அப்போ நானு ;)//
இப்போதைக்கு உங்களுக்கும் கண்ணனுக்கும் சேர்த்து நானே சாப்டாச்! :)
மதுரையம்பதி said...
ReplyDelete// வார்த்தைகள் தாமாக வந்தமர்ந்திருக்கின்றன...அருமை//
அதேதான் நானும் நினைத்தது.
ஆமாங்க, தாமரையில் அமர்ந்தபடி தகதகக்கும் அஷ்டலக்ஷ்மிகளைப் போலவே அழகழகாய் வார்த்தைகள்.
//அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து
இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி!//யை நாங்களும் வணங்கித் துதிக்கின்றோம். நன்றி கவிநயா!
அஷ்டலக்ஷ்மித்தாயே அனைவருக்கும் அருள் புரிவாய் அம்மா
ReplyDelete//ஆமாங்க, தாமரையில் அமர்ந்தபடி தகதகக்கும் அஷ்டலக்ஷ்மிகளைப் போலவே அழகழகாய் வார்த்தைகள்.//
ReplyDeleteஅவள் அளவுக்கு அழகாவா? ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை, அவ்ளோதான் :) ரசித்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
//அஷ்டலக்ஷ்மித்தாயே அனைவருக்கும் அருள் புரிவாய் அம்மா//
ReplyDeleteஅதையே நானும் கேட்டுக்கறேன்.
வருகைக்கு நன்றி கைலாஷி.
பொருத்தமான பொருள் நிறைந்த சொற்களால் அன்னையைப் பாடியிருக்கிறீர்கள் அக்கா. துதிப்பாடலாக இருக்கத் தகுந்தது.
ReplyDelete//பொருத்தமான பொருள் நிறைந்த சொற்களால் அன்னையைப் பாடியிருக்கிறீர்கள் அக்கா. துதிப்பாடலாக இருக்கத் தகுந்தது.//
ReplyDeleteகுமரனே சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு :) மிக்க நன்றி குமரா.