அன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மானிக்கிறதுதான்! ஒவ்வொருத்தரும் நிறைய பேருக்கு பகிர்ந்தளிப்பதால், இதற்குள் எல்லாருமே வாங்கியிருப்பாங்கன்னு தோணுது. ஆணி ரொம்ப ரொம்ப அதிகமா இருப்பதால், மற்ற வலைப்பூக்களுக்கு போய் வாங்கியவங்க, வாங்காதவங்க யாருன்னு பார்க்கவும் முடியல. அதனால, மனசில் தோணறவங்களுக்கு இந்த விருதுகளை பகிர்ந்து அளிக்கிறேன். தவறா நினைக்காம அன்புடன் அங்கீகரிக்கணும்னு கேட்டுக்கறேன்.
முதலில் "This blogger is my best friend" விருது. இதனை எனக்கு அன்புடன் அளித்தவர், தோழி ஜெஸ்வந்தி. மிக்க நன்றி ஜெஸ்வந்தி!
இந்த விருதிற்கான விதிமுறைகள்:
1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம்.
2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம்.
3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் .
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.
நான் இந்த விருதினை அளிக்கும் நண்பர்கள்:
ராமலக்ஷ்மி - பதிவுலகிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தவறாமல் ஊக்கம் அளிப்பவர். சமூக அக்கறை கொண்ட இவரது எழுத்துகளும், இவருடைய புகைப்படங்களும், குறிப்பாக அவற்றுக்கு இவர் எழுதும் comments-ம் ரொம்ப பிடிக்கும்.
மதுரையம்பதி - இவருடைய பதிவுகள், கதைகள், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கான விளக்கங்கள் மிகவும் பிடிக்கும்.
கண்ணன் - இவர் ஒவ்வொரு பாடலையும், செய்தியையும், கருத்தையும், அலசி ஆராய்ந்து, உவமான உவமேயங்களுடன் சுவாரஸ்யமாக விளக்குவார். (இவரை கேயாரெஸ்-னு சொன்னாதான் நிறைய பேருக்கு தெரியும் :)
குமரன் - இவருடைய தமிழ் அறிவும், சமஸ்கிருத அறிவும், அவற்றைக் கொண்டு சங்கப் பாடல்கள், ஸ்லோகங்கள் முதற்கொண்டு அழகாய் விளக்கும் திறனும் என்னை வியக்க வைப்பவை.
அடுத்ததாக "Interesting Blog Award". எதிர்பாராவிதமாக தோழி அமுதாவிடம் இருந்து இந்த விருது கிடைத்தது :) நன்றி அமுதா!
இதனை குறைந்தது ஆறு பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம். (மற்றவங்க கோச்சுக்காதீங்கப்பா!)
கீதாம்மா - நடமாடும் கலைக் களஞ்சியம். சில பேருக்கு பாட்டீ; சில சமயம் பாப்பா :)
கபீரன்பன் அவர்கள் - ஒரு கருத்தை சொல்வதற்கு, அதற்கு பொருத்தமாக பல்வேறு செய்திகளை தொகுத்து வெகு அழகாக சொல்லுவார்.
கைலாஷி அவர்கள் - இவருடைய புகைப்படங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. கூடவே அழகான பொருத்தமான பாடல்களை இலக்கியங்களிலிருந்து எடுத்துத் தருவார்.
வல்லிம்மா - ரொம்ப ச்வீட்டானவர். முக்கியமான செய்திகளை இயல்பாக சொல்லி விடுவார்.
ஜீவி ஐயா - இவருடைய கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனசை அள்ளும் இயல்பான நடை. அழகான கதாபாத்திரங்கள்.
மீனா சங்கரன் - ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் நகைச்சுவையில் கலக்கும் எங்க ஊர் தோழி. இவர் பாடினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
அன்புடன்
கவிநயா
வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களுக்கும்
தங்களிடம்
பெற்ற மற்றவர்களுக்கும்.
விருதுக்கு நன்னிங்கோ! :-).
ReplyDeleteநன்றி கவிநயா. எதிர்பார்க்கவில்லை. அதனால் இனிக்கிறது. மிகவும் நன்றி.
ReplyDeleteஇதை எப்படி என் பதிவில போட்டுக்கறதுனு யோசிக்கிறேன்.:)
உங்களுக்கும்...உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஉங்களுக்கும் , உங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteசுகமாக இருக்கிறீர்களா?
விருதுக்கு நன்றி கவிநயா . விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் :)
ReplyDeleteவிருது வாங்கறது கடினமா? விருது கொடுக்கறது கடினமா??-ன்னு பட்டிமண்டபம் வைக்கணும் போல இருக்கே-க்கா? :)
ReplyDeleteகவி அவார்ட்ஸ் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
என்னையும் ஒரு பொருட்டா நினைச்சி விருது தந்தமைக்கு நன்றி-க்கா! :)
//இவரை கேயாரெஸ்-னு சொன்னாதான் நிறைய பேருக்கு தெரியும் :)//
ReplyDeleteஹிஹி!
கண்ணா-ன்னு உங்களையும் சேர்த்து மூனு பேருக்குத் தான் தெரியும்!
அதுல குமரன் ஒன்னும் கண்டுக்கிறமாட்டாரு!
என் தோழன் ராகவன், "அது என்ன கண்ண்ண்ணா?"-ன்னு கேட்பான்! :)
//கீதாம்மா - நடமாடும் கலைக் களஞ்சியம். சில பேருக்கு பாட்டீ; சில சமயம் பாப்பா :)//
ReplyDeleteகொஞ்சம் 2மச்சா, இல்லை 4 மச்சாத் தெரியுது. போகட்டும், இப்போ நான் ஆறு பேரைப் பிடிக்கணுமா?? கஷ்டமா இருக்கும்போல! எப்படி என்னோட வலைக்குப் பிடிச்சுட்டுப் போறது? :))))))))))))))))அதுவும் புரியலை! பார்க்கலாம்! கொஞ்சம் மெதுவா வரேனே!
நன்றி ஜமால்.
ReplyDeleteஅங்கீகரித்தமைக்கு நன்றி மௌலி.
ReplyDelete//அதனால் இனிக்கிறது.//
ReplyDeleteநீங்களே ச்வீட்ல? அதான் இனிக்குது :) நன்றி வல்லிம்மா.
நன்றி கோபி.
ReplyDeleteவிருதுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெஸ்வந்தி. அக்கறையான விசாரிப்புக்கும் நன்றி. ஆங்கிலத்தில் சொல்வாங்களே, அது போல "hanging in there" :)
ReplyDeleteமிக்க நன்றி கபீரன்பன்.
ReplyDelete//கவி அவார்ட்ஸ் //
ReplyDeleteஇது நல்லாருக்கே கண்ணா :)
//என்னையும் ஒரு பொருட்டா நினைச்சி//
நீங்களே இப்படி சொன்னா எப்படி? :) (குமரன் வேற கோச்சுப்பார் :)
//என் தோழன் ராகவன், "அது என்ன கண்ண்ண்ணா?"-ன்னு கேட்பான்! :)//
ReplyDelete:)))
//கொஞ்சம் 2மச்சா, இல்லை 4 மச்சாத் தெரியுது.//
ReplyDeleteஅப்படில்லாம் இல்ல கீதாம்மா. உண்மை, உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை! :)
//எப்படி என்னோட வலைக்குப் பிடிச்சுட்டுப் போறது?//
உங்க வலையில் விழாதவங்க யாரு? அவங்களைப் பிடிங்க :) மெதுவா பிடிச்சாலும் ஓகேதான் :) நன்றி அம்மா.
விருதுக்கு நன்றி கவிநயா :-). ஒரு மாதம் முன்பு வாங்கின பட்டாம்பூச்சி விருதையே இன்னும் மூணு பேரை கண்டு பிடிச்சு குடுக்க முடியாமல் திணறும் போது இன்னும் ஆறு பேரா? இதோ கிளம்பிட்டேன் ப்ளாகர் கடலில் மும்முரமா வலை வீச. மாட்டாமலா போயிடுவாங்க?
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
//ப்ளாகர் கடலில் மும்முரமா வலை வீச.//
ReplyDeleteமுத்துக்களா கிடைக்க வாழ்த்துகள் :) நன்றி மீனா.
//விருது வாங்க வாரீகளா?//
ReplyDeleteவந்துட்டேன்ல:)! தாமதமாய் வந்து பெற்றாலும், இதோ தாமதிக்காமல் தங்கள் விருதினை என் பதிவில் முகப்பில் சேர்த்திடுறேன்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்ன்னு சொல்லிக்கலாம்.
ReplyDeleteமிக்க நன்றி கவிநயா,
வேலைப் பளுவின் காரணமாக அதிகமாக முன் போல பதிவிட முடியவில்லை. ஆயினும் முழுவதுமாக விட்டு விடவும் மனதில்லை.முடிந்த வரை ஒன்றிரண்டு அவசரக்கோலமாக கிறுக்கத்தான் முடிகிறது,
அப்படி இருந்தும் விருது கொடுத்து கௌரவித்ததற்க்கு நன்றி. விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் ரசனை ரசிக்கக் கூடியதாக இருந்தது, கவிநயா!
ReplyDeleteவிருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும்,
அதைப் பாராட்டியவர்களுக்கும் மிக்க நன்றி.
//வந்துட்டேன்ல:)! தாமதமாய் வந்து பெற்றாலும், இதோ தாமதிக்காமல் தங்கள் விருதினை என் பதிவில் முகப்பில் சேர்த்திடுறேன்.//
ReplyDeleteரொம்ப சந்தோஷம் ராமலக்ஷ்மி!
//லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்ன்னு சொல்லிக்கலாம்.//
ReplyDeleteசொல்லிக்கலாமே! :)
//வேலைப் பளுவின் காரணமாக அதிகமாக முன் போல பதிவிட முடியவில்லை. ஆயினும் முழுவதுமாக விட்டு விடவும் மனதில்லை.//
உங்க நிலையில்தான் இப்போ நானும்... :) வேலைப் பளுவின் நடுவிலும் வந்து விருதை அங்க்கீகரித்தமைக்கு மிக்க நன்றி கைலாஷி!
//உங்கள் ரசனை ரசிக்கக் கூடியதாக இருந்தது, கவிநயா!//
ReplyDeleteஒவ்வொருவர் பற்றியும் இன்னும் கொஞ்சமாவாது விரிவாக எழுத ஆசைதான். நேரத்தின் மேல்தான் இப்போ பழி. பின்னொரு நாள் முயற்சிக்கிறேன் :)
மிக்க நன்றி ஜீவி ஐயா.
நல்ல நண்பன்னு சொல்லியிருக்கீங்க. நன்றி அக்கா.
ReplyDeleteஆனா ரொம்ப சரியா 'இன்ட்ரஸ்டிங்க் பிளாக்கர்' இல்லைன்னு சொல்லிட்டீங்க. அதுவும் சரி தான். :-)
//நல்ல நண்பன்னு சொல்லியிருக்கீங்க. நன்றி அக்கா. //
ReplyDeleteவருக குமரா. உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :)
//ஆனா ரொம்ப சரியா 'இன்ட்ரஸ்டிங்க் பிளாக்கர்' இல்லைன்னு சொல்லிட்டீங்க. அதுவும் சரி தான். :-)//
அடக் கடவுளே! குமரா! இது நியாயமா?! உங்களுடைய கோதைத் தமிழோட சேர்ந்து உருகற நான் அப்படிச் சொல்வேனா என்ன? :)