Friday, August 14, 2009

பாரதம் வாழியவே!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!


வாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே!
வாழிய எங்களின் மணித்திரு நாடு வாழிய வாழியவே!

கல்வியில் சிறந்தே கலைகளில் செறிந்தே பாரதம் வாழியவே!
அன்பினில் நிறைந்தே அகத்தினில் மலர்ந்தே வாழிய வாழியவே!

ஆல்விழு தெனவே அகிலம் தாங்கிட பாரதம் வாழியவே!
வேல்விழி மாதரும் சரிநிக ரெனவே வாழிய வாழியவே!

போரினை விடுத்தே பாரினைக் காத்திட பாரதம் வாழியவே!
வீரத் துடன்வி வேகமும் சேர்ந்திட வாழிய வாழியவே!

விஞ்ஞானத் துடன்மெய் ஞானமும்ஒளிர்ந்திட பாரதம் வாழியவே!
அஞ்ஞானம் எனும் இருளகற்றி என்றும் வாழிய வாழியவே!

கவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே!
புவியினர் யாவரும் புகழ்ந்திட மகிழ்ந்திட வாழிய வாழியவே!!


--கவிநயா

20 comments:

  1. சுதந்திரத் திருநாள் தங்களது அருமையான வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியுள்ளது.

    //வாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே!//

    நன்றி கவிநயா. சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //கவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே!//

    மூணுபேரும் ஒரே ஆளா இருந்தா மிக எளிதள்ளவா?

    ReplyDelete
  3. ஒவ்வொரு 'வாழியவும்' உணர்வுகளை மீட்டி விடுகிறது! "பாரதம் உலகுக்கு வழிகாட்டும்"--என்கிற மஹாகவியின் வாக்கு பொய்க்கப் போவதில்லை..

    உங்களுக்கும், எல்லோருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. வந்தே மாதரம் சொல்லி வாழ்த்துவோம் நம் தாயை.
    அருமையான வாழ்த்துகள் கவிநயா.
    நமக்கு இவ்வளவு வாழ்த்துகளும் தேவை. நன்றி.

    ReplyDelete
  5. தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கவிநயா.

    ReplyDelete
  6. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  7. சுதந்திரதின வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete
  8. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!


    ----------

    கவிதை நல்லாயிருக்குப்-பா

    ReplyDelete
  9. //நன்றி கவிநயா. சுதந்திர தின வாழ்த்துக்கள்!//

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  10. //மூணுபேரும் ஒரே ஆளா இருந்தா மிக எளிதள்ளவா?//

    மன்னிக்கணும். நீங்க சொன்னது எனக்கு சரியா புரியலை.

    முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி ஜோதிபாரதி.

    ReplyDelete
  11. //"பாரதம் உலகுக்கு வழிகாட்டும்"--என்கிற மஹாகவியின் வாக்கு பொய்க்கப் போவதில்லை..//

    நன்றாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா.

    //உங்களுக்கும், எல்லோருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  12. //வந்தே மாதரம் சொல்லி வாழ்த்துவோம் நம் தாயை.
    அருமையான வாழ்த்துகள் கவிநயா.
    நமக்கு இவ்வளவு வாழ்த்துகளும் தேவை. நன்றி.//

    மிக்க நன்றி வல்லிம்மா.

    ReplyDelete
  13. //தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கவிநயா.//

    நன்றி கைலாஷி.

    ReplyDelete
  14. //சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ஜெய்ஹிந்த்//

    நன்றி வசந்த். ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  15. //சுதந்திரதின வாழ்த்துக்கள் அக்கா ;)//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  16. //அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!//

    நன்றி ஜமால்!

    //கவிதை நல்லாயிருக்குப்-பா//

    நன்றிப்பா :)

    ReplyDelete
  17. சுதந்திரதின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. //சுதந்திரதின வாழ்த்துக்கள்//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, வண்ணத்துப் பூச்சியாரே!

    ReplyDelete
  19. கவிதை நல்லா இருக்கு. ஆனாலும்....

    //வேல்விழி மாதரும் சரிநிக ரெனவே //

    எங்கள் அஸ்ஸாம் மேகாலயா மணிபுரி சகோதரிகளை இப்படி ஒதுக்கி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

    கடி ஜோக் :))

    ReplyDelete
  20. //கடி ஜோக் :))//

    அது சரி :))

    வருகைக்கு நன்றி கபீரன்பன் ஐயா.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)