அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
விக்ன விநாயகன் வினைகளைத் தீர்க்கட்டும்!
நற்குண நாயகன் நானிலத்தைக் காக்கட்டும்!
பிள்ளையாரே பிள்ளையாரே - மிக
சுட்டித்தனம் கொண்ட எங்கள் பிள்ளையாரே!
பிள்ளையாரே பிள்ளையாரே - இந்த
பிள்ளைகளை காக்க வேணும் பிள்ளையாரே!
உலகத்தை சுற்றச் சொன்னால்
பெற்றவரை சுற்றிடுவாய்!
பாரதத்தை எழுதச் சொன்னால்
தந்தம்கொண்டு எழுதிடுவாய்!
அவல்பொரி கடலை யெல்லாம்
அளவின்றி தின்றிடுவாய்!
மோதகத்தைப் பார்த்து விட்டால்
மோகம்மிகக் கொண்டிடுவாய்!
பார்வ தியின் தலைமகனே!
பார்புகழும் கோமகனே!
கூர் மதியைக் கொண்டவனே!
கொஞ்சுதமிழ் நாயகனே!
மூஞ்சூறில் ஏறி வந்து
மூவுலகும் காப்பவனே!
நா மணக்க பாடுகிறோம்
நல்லவழி காட்டிடுவாய்!!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.mazhalaigal.com/images/issues/mgl0903/im0903-06_pillaiyar.jpg
க'வினயா' விநயமாய்த் தந்த
ReplyDeleteபாடலை ஏற்று அந்த விநாயகனும் நம்மைக் காக்கட்டும்.
நன்றி ம்மா.
// விக்கின விநாயகன் வினைகளைத் தீர்க்கட்டும்!//
ReplyDeleteபாவமே! கொஞ்சம் தண்ணி கொடுங்க!
வாங்க வல்லிம்மா. நன்றி.
ReplyDelete//பாவமே! கொஞ்சம் தண்ணி கொடுங்க!//
ReplyDeleteஅடக் கடவுளே! நல்ல தமிழில் சொல்லணும்னு அப்படி சொன்னேன். இப்படி ஆகிடுச்சே :( மாத்திட்டேன் போங்க!
வருகைக்கு நன்றி திவா :)
பிள்ளையாரும் & பிள்ளையார் கவிதையும் அருமை ;))
ReplyDelete//பிள்ளையாரும்//
ReplyDeleteஆமால்ல? நன்றி கோபீ! :)
வினைகளை அறுக்கும் விநாயகர் எல்லோருக்கும் அருளட்டும்.
ReplyDelete//மூஞ்சூறில் ஏறி வந்து
ReplyDeleteமூவுலகும் காப்பவனே!
நா மணக்க பாடுகிறோம்
நல்லவழி காட்டிடுவாய்!!//
நன்றி மௌலி.
ReplyDeleteவருகைக்கு நன்றி கைலாஷி.
ReplyDeleteபார்வ தியின் தலைமகனே!
ReplyDeleteபார்புகழும் கோமகனே
உண்மைதான் இன்று உலமெங்கும் பல நாடுகளில் விநாயக வழிபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருகைக்கு நன்றி தி.ரா.ச. ஐயா.
ReplyDelete