உன்நினைவு மகரந்தங்களை
சேமித்து வைத்துக் கொண்டு
மலராமல் காத்திருக்கிறது
என் இதயத் தாமரை -
உன் வருகைக்கென.
--
இலக்கை அடைய எத்தனித்து,
முடியாமல்,
உன் நினைவுகளில்
தடுக்கித் தடுக்கி
விழுந்து கொண்டேயிருக்கிறது
மனசு.
--
நிலவொளியை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
சகோர பறவையைப் போல
உன் நினைவுகளை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
நான்.
--
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/leo-avelon/467505613/sizes/m/
படத்திற்கேற்ற கவிதையா.........
ReplyDeleteகவிதைக்கேற்ற படமா......
அற்புதம்
படக்கவிதை அருமை ;))
ReplyDeleteநல்லா இருக்குங்க. ரெண்டாவது மனதை தொடுகிறது.
ReplyDelete//உன்நினைவு மகரந்தங்களை
ReplyDeleteசேமித்து வைத்துக் கொண்டு
மலராமல் காத்திருக்கிறது
என் இதயத் தாமரை -
உன் வருகைக்கென//
--
நல்ல உவமை... காதல் கொப்பளிக்கிறது உங்கள் வார்த்தைகளில்...
//இலக்கை அடைய எத்தனித்து,
முடியாமல்,
உன் நினைவுகளில்
தடுக்கித் தடுக்கி
விழுந்து கொண்டேயிருக்கிறது
மனசு//
--
மனசு அப்படித்தான்... அலைபாய்ந்து கொண்டே இருக்கும்... மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்..
//நிலவொளியை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
சகோர பறவையைப் போல
உன் நினைவுகளை மட்டுமே
உண்டு உயிர் வாழும்
நான்//
--
நிலவொளியை மட்டுமே உண்டு உயிர் வாழும் சகோர பறவை... இது செய்தி எனக்கு..
காதலையும், அதற்காக காத்திருத்தலையும் வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்... ரொம்ப நல்லா இருக்கு...
//--கவிநயா/
சரியான பெயர்தான்...
படமும்
ReplyDeleteவரிகளும்
அழகாய்
நினைவுகளில் காத்திருப்பதும் சுகமே!
ReplyDelete//படத்திற்கேற்ற கவிதையா.........
ReplyDeleteகவிதைக்கேற்ற படமா......
அற்புதம்//
கவிதைதான் பர்ஷ்டு!
திகழ்மிளிர் தானே? திகழ்னு பாத்து குழம்பிட்டேன் :) மிக்க நன்றி திகழ்!
//படக்கவிதை அருமை ;))//
ReplyDeleteமிக்க நன்றி கோபி :)
//நல்லா இருக்குங்க. ரெண்டாவது மனதை தொடுகிறது.//
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி + நன்றி சதங்கா :)
//காதலையும், அதற்காக காத்திருத்தலையும் வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்... ரொம்ப நல்லா இருக்கு...
ReplyDeleteவருகைக்கும் ரசனை மிகுந்த பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கோபி :)
//--கவிநயா/
சரியான பெயர்தான்...//
மீண்டும் நன்றி! பெயர் காரணம் "கேள்விக்கென்ன பதில்?" பதிவில் இருக்கு :) முடிஞ்சா நேரம் கிடைக்கையில் பாருங்க... :)
//படமும்
ReplyDeleteவரிகளும்
அழகாய்//
மிக்க நன்றி ஜமால்!
//நினைவுகளில் காத்திருப்பதும் சுகமே!//
ReplyDeleteமிகவும் உண்மை! வருகைக்கு மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
கவிதை அழகாக இருக்கிறது கவிநயா. வாழ்த்துக்கள்.
ReplyDelete//உன்நினைவு மகரந்தங்களை
ReplyDeleteசேமித்து வைத்துக் கொண்டு
மலராமல் காத்திருக்கிறது
என் இதயத் தாமரை -
உன் வருகைக்கென.//
இதழ் விரித்து மலர்ந்தால் பொத்தி சேமித்து வைத்திருக்கும் நினைவுகளாகிய மகரந்தங்கள் கொட்டி விடும் என்கிற பயமா?.. வருகைக்குக் காத்திருப்பதால், வருகை தந்து விட்டால் மகிழ்ச்சியில் பொத்தி வைத்திருப்பதை மறந்து மலர்ந்து விடுமோ?.. வந்து விட்டால் கொட்டி விட்டதைப் பற்றிக் கவலையில்லை.. அதான் இன்னும் இன்னும் புது நினைவுகள் சேரப்போகின்றனவே? அவற்றை சேமித்து வைத்துக் கொண்டால் போயிற்று.
//கவிதை அழகாக இருக்கிறது கவிநயா. வாழ்த்துக்கள்.//
ReplyDeleteமிக்க நன்றி ஜெஸ்வந்தி!
//இதழ் விரித்து மலர்ந்தால் பொத்தி சேமித்து வைத்திருக்கும் நினைவுகளாகிய மகரந்தங்கள் கொட்டி விடும் என்கிற பயமா?.. வருகைக்குக் காத்திருப்பதால், வருகை தந்து விட்டால் மகிழ்ச்சியில் பொத்தி வைத்திருப்பதை மறந்து மலர்ந்து விடுமோ?.. வந்து விட்டால் கொட்டி விட்டதைப் பற்றிக் கவலையில்லை.. அதான் இன்னும் இன்னும் புது நினைவுகள் சேரப்போகின்றனவே? அவற்றை சேமித்து வைத்துக் கொண்டால் போயிற்று.//
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள் ஜீவி ஐயா. உண்மைதான். அதே போலவே சில உணர்வுகளையும் நினைவுகளையும் கூட வார்த்தைகளால் வடிவமாக்கியபின் அவற்றின் தாக்கம் நீர்த்துப் போய்விடுவது போல் ஒரு பிரமை ஏற்படுவதுண்டு. துன்பத்திற்கு அத்தகைய வடிகால் தேவைதான். ஆனால் மற்ற சில பொக்கிஷங்களை உள்ளேயே வைத்து அவ்வப்போது இலேசாகத் திறந்து பார்த்துக் கொண்டாலே போதுமென்றிருக்கும் :)
வருகைக்கும் அழகான கருத்திற்கும் மிக்க நன்றி.
@ கவிநயா!
ReplyDelete//மற்ற சில பொக்கிஷங்களை உள்ளேயே வைத்து அவ்வப்போது இலேசாகத் திறந்து பார்த்துக் கொண்டாலே போதுமென்றிருக்கும் :)
//
அருமை! ரொம்பவும் ரசித்தேன்..
அந்த பொக்கிஷங்கள் நமக்கு மட்டுமே சொந்தமானவை; அதன் அருமையும் பெருமையும் நமக்கு மட்டுமே தெரியும்; அதன் மகத்துவத்தைப் பிறரிடம் சொல்லக் கூடத் தயக்கம்;
சொற்களில் அதைச் சிறைப்படுத்திச் சொல்லி விட்டால், அதன் சிறப்பில் ஒரு மாற்று குறைந்து விடுமோ என்கிற
தயக்கம்.. அதே அலைவரிசையில் புரிந்து கொள்ள வேண்டுமே என்கிற கவலை.. இப்படி எத்தனையோ..
பகிர தயங்கித் தயங்கி மனசில் அடி ஆழத்தில் இப்படி எத்தனையோ..
என்றைக்கும் நமக்கு மட்டுமே சொந்தமேயான.. நமதேயான..
என்றைக்கும் பழைமையாகாமல்,
திறந்து பார்க்கும் நேரமெல்லாம்
புதுவாசம் கொடுக்கக்கூடியதாய்..
//அருமை! ரொம்பவும் ரசித்தேன்..
ReplyDeleteஅந்த பொக்கிஷங்கள் நமக்கு மட்டுமே சொந்தமானவை; அதன் அருமையும் பெருமையும் நமக்கு மட்டுமே தெரியும்; அதன் மகத்துவத்தைப் பிறரிடம் சொல்லக் கூடத் தயக்கம்;
சொற்களில் அதைச் சிறைப்படுத்திச் சொல்லி விட்டால், அதன் சிறப்பில் ஒரு மாற்று குறைந்து விடுமோ என்கிற
தயக்கம்.. அதே அலைவரிசையில் புரிந்து கொள்ள வேண்டுமே என்கிற கவலை.. இப்படி எத்தனையோ..
பகிர தயங்கித் தயங்கி மனசில் அடி ஆழத்தில் இப்படி எத்தனையோ..
என்றைக்கும் நமக்கு மட்டுமே சொந்தமேயான.. நமதேயான..
என்றைக்கும் பழைமையாகாமல்,
திறந்து பார்க்கும் நேரமெல்லாம்
புதுவாசம் கொடுக்கக்கூடியதாய்..//
அதே... அதே! எத்தனை அழகான சொல் ஆளுமை உங்களுக்கு. மீள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.
நினைவுகள் நெஞ்சம் தொட்டன.
ReplyDeleteஜீவியுடனான உங்கள் சிந்தனைப் பகிவுகளையும் ரசித்தேன்:)! அருமை.
//நினைவுகள் நெஞ்சம் தொட்டன.
ReplyDeleteஜீவியுடனான உங்கள் சிந்தனைப் பகிவுகளையும் ரசித்தேன்:)! அருமை.//
வாங்க ராமலக்ஷ்மி. உடல் நலம் எப்படி இருக்கு? வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!