Sunday, September 6, 2009

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில்வண்டி...!



சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி
கத்திகத்தி கரும்புகை விடும் வண்டி
திக்கிதிக்கி மூச்சிரைக்க வரும் வண்டி
முத்துமுத்து புன்னகையை தரும் வண்டி!

குடுகுடு குடுவென வரும் வண்டி
விடுவிடு வேகமெடுத் திடும் வண்டி
கடகட கடகட எனும் வண்டி
தடதட தண்டவாளம் அதிர் வண்டி!

காடுகடல் மலையெல்லாம் புகும் வண்டி
மேடுபள்ள பேதமில்லா புகை வண்டி
ரோடுஇல்லா பாதையிலும் வரும் வண்டி
கோடுபோல நீண்டுநெளிந் திடும் வண்டி!

பெட்டிபெட்டி யாகஇழுத் திடும் வண்டி
சுட்டிப்பிள்ளை களின்உள்ளம் கவர் வண்டி
பட்டிதொட்டி யிலும்நிற்கும் ஒரு வண்டி
பத்திரமாய் கொண்டுசேர்க்கும் ரயில் வண்டி!

அன்னை யெனதாலாட்டி விடும் வண்டி
பிள்ளை யெனகூவிஓடி வரும் வண்டி
உன்னைஎன்னை ஏற்றிக்கொண்டு செல்லும் வண்டி
நம்மைநல்ல நண்பராக்கும் ரயில் வண்டி!!


--கவிநயா

19 comments:

  1. கவிதை நன்றாக இருக்கிறது கவிநயா. படிக்கும் போது நீங்கள் எப்போது ரயிலில் தான் பிரயாணம் செய்கிறீர்களோ என்று கேட்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  2. ம்ம்ம்...ஒரு 3 வருஷம் ரயில் வண்டி பயணம் தொடர்ந்து செய்திருக்கேன். அருமையான நினைவுகள் அது ;))

    \\நம்மைநல்ல நண்பராக்கும் ரயில் வண்டி!!
    \\

    உண்மையிலும் உண்மை..ரயில் சினோகத்தில் கிடைத்த நட்புகள் நிறைய!! ;)

    ReplyDelete
  3. //http://sivamgss.blogspot.com/2009/09/blog-post_07.html//
    யானைக்கு அடுத்து அலுக்காத ஒன்று ரயில் பயணம். நன்றி, புகைவண்டிப் படத்துக்கு! வேலைக்குச் செல்லும்போது அப்போல்லாம் மின்வண்டித் தொடர் அம்பத்தூரில் இருந்து சென்னைக்குக் கிடையாது. புகை வண்டியிலே தான் போகணும். கிட்டத் தட்ட ஒரு வருஷம் போல் தண்டையார்பேட்டை வரை போயிருக்கேன். :))))))))))))

    ReplyDelete
  4. வாங்க ஜெஸ்வந்தி. ஆம், ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும் :) வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //chullikkaadan said...

    nice//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  6. //ம்ம்ம்...ஒரு 3 வருஷம் ரயில் வண்டி பயணம் தொடர்ந்து செய்திருக்கேன். அருமையான நினைவுகள் அது ;))//

    //உண்மையிலும் உண்மை..ரயில் சினோகத்தில் கிடைத்த நட்புகள் நிறைய!! ;)//

    நல்ல நினைவுகளை கிளறிவிட்டது குறித்து மகிழ்ச்சி கோபி :) வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. //http://sivamgss.blogspot.com/2009/09/blog-post_07.html//

    பதிவுக்கு மிக்க நன்றி கீதாம்மா.

    //யானைக்கு அடுத்து அலுக்காத ஒன்று ரயில் பயணம்.//

    உண்மை அம்மா :)

    //நன்றி, புகைவண்டிப் படத்துக்கு!//

    கூகுளாருக்கு... :)

    வருகைக்கும் உங்களுடைய ரயில் பயணம் பற்றிய பகிர்தலுக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  8. எனக்கு மெட்டு போடு மெட்டு போடு என கூப்பிடும் கவிதை அருமை.

    ReplyDelete
  9. //அன்னை யெனதாலாட்டி விடும் வண்டி
    பிள்ளை யெனகூவிஓடி வரும் வண்டி
    உன்னைஎன்னை ஏற்றிக்கொண்டு செல்லும் வண்டி
    நம்மைநல்ல நண்பராக்கும் ரயில் வண்டி!!//

    இங்கு தான் கவிநயா அவரது தனி முத்திரையுடன் பளிச்சிடுகிறார்!

    ReplyDelete
  10. //Several tips said...

    மிக்க நன்று//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  11. //எனக்கு மெட்டு போடு மெட்டு போடு என கூப்பிடும் கவிதை அருமை.//

    போட்டுட வேண்டியதுதானே? :) வருகைக்கு நன்றி மீனா.

    ReplyDelete
  12. //இங்கு தான் கவிநயா அவரது தனி முத்திரையுடன் பளிச்சிடுகிறார்!//

    குறிப்பான பாராட்டுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா! :)

    ReplyDelete
  13. ந.செந்தில் குமார், புதுக்கோட்டைSeptember 11, 2009 at 9:01 AM

    //குடுகுடு குடுவென வரும் வண்டி
    விடுவிடு வேகமெடுத் திடும் வண்டி
    கடகட கடகட எனும் வண்டி
    தடதட தண்டவாளம் அதிர் வண்டி!//

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் அழகான பாட்டு...

    வண்டி வண்டியா பாட்டு எழுதி தள்ளுங்க..

    பாட்டு படிக்கும் போது கந்த சஷ்டி கவசம் ஞாபகம் வந்தது...

    அருமை.

    ReplyDelete
  14. //குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கும் அழகான பாட்டு...

    வண்டி வண்டியா பாட்டு எழுதி தள்ளுங்க..

    பாட்டு படிக்கும் போது கந்த சஷ்டி கவசம் ஞாபகம் வந்தது...

    அருமை.//

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி செந்தில் குமார் :)

    ReplyDelete
  15. என்னதான் மின்னாக்கம் ஆனாலும் கரும் புகையும் சிக்குபுக்கும்ன்தான் மனசுல நிக்குது! :-))

    ReplyDelete
  16. இவர் தங்கை வீட்டுக்கு போய் lunch சாப்பிட்டபின், முந்தா நாள் மாலை, தாம்பரத்திலேந்து கோடம்பாக்கம் எலக்டிரிக் ட்ரைனில் வர்ற வழிலே இவர் பாடிண்டே ரெகார்டும் பண்ணிண்டு வந்தது பக்கத்தில் இருந்த எல்லோருக்கும் பொழுதுபோக்காக இருந்தது.
    பக்கத்தில் இருந்த பாஸஞ்சர்ஸ் எல்லாம் , ஏன் பாட்டி ! தாத்தா எப்பனாச்சும்
    ம்யூசிக் director ஆக‌ இருந்தாரோ என்றார்கள். ஏன்னு கேட்டேன். யாராச்சும் ரசிக்கிறாங்களோ இல்லையோன்னு கூட கவலைப்படாம‌
    பாடிக்கிட்டே வர்றாரே...அதனாலே என்றார்கள்.

    சங்கீதத்திலே அப்படி ஒரு உத்சாகம். பாடி முடிச்சப்பறம்
    சொல்றாரு, கவினயா கவிதையிலே உயிர் இருக்கு. என்னோட பாட்டு எப்படி இருக்கு அப்படின்னு எங்கிட்ட கேட்டாரு.
    ஒரு செகன்ட் தயக்கத்துக்குப்பறம் சொன்னேன்.
    உங்க தங்கையாத்து அவியலவிட நன்னாருக்கு என்றேன்.

    பாடலை யூ ட்யூபில் பாக்கலாம்.

    மீனாட்சி பாட்டி.
    http://ceebrospark.blogspot.com

    ReplyDelete
  17. //என்னதான் மின்னாக்கம் ஆனாலும் கரும் புகையும் சிக்குபுக்கும்ன்தான் மனசுல நிக்குது! :-))//

    ஆமால்ல? வருகைக்கு நன்றி திவா :)

    ReplyDelete
  18. //யாராச்சும் ரசிக்கிறாங்களோ இல்லையோன்னு கூட கவலைப்படாம‌
    பாடிக்கிட்டே வர்றாரே...அதனாலே என்றார்கள்.//

    அது சரி... :) ஆனா நாங்கல்லாம் இருக்கோமே, ரசிக்க :)

    //என்னோட பாட்டு எப்படி இருக்கு அப்படின்னு எங்கிட்ட கேட்டாரு.
    ஒரு செகன்ட் தயக்கத்துக்குப்பறம் சொன்னேன்.
    உங்க தங்கையாத்து அவியலவிட நன்னாருக்கு என்றேன். //

    குறும்புதான் பாட்டிக்கு :)

    தாத்தாவுக்கும் உங்களுக்கும் நன்றிகள், பாட்டை கேட்டுட்டு மறுபடி வரேன் :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)