இந்த வருஷம் அடிக்கடி ஜலதோஷம்.
அதுவும் எப்போதும் இல்லாத அளவு மூக்கடைப்பினால் ரொம்பவே சிரமப்பட்டேன். படுத்தாலும்,
உட்கார்ந்தாலும், நின்னாலும், எந்த position-ல இருந்தாலும் சுத்தமா மூச்சு விட முடியலை!
நீராவி புடிச்சு, விரளி மஞ்சளை சுட்டு அதன் புகையை முகர்ந்து, இப்படில்லாம் ஏதேதோ செய்து
பார்த்தேன். ஒண்ணும் வேலை செய்யலை. இராத்திரி பூரா தூங்காம நடை பழகிக்கிட்டே இருந்தேன்னா
பார்த்துக்கோங்க. ஆனா திடீர்னு தற்செயலா ஒரு position-ல ‘டக்’குன்னு மூக்கடைப்பு விட்டுப்
போயிடுச்சு. அதைப் பற்றி சொல்றதுக்குதான் இந்தப் பதிவு.
மல்லாந்து படுத்துக்கோங்க. கழுத்துக்குக்
கீழே உயரமான தலையணையை வெச்சு, கழுத்தை வளைச்சு பின்னாடி பார்க்கிறா மாதிரி படுத்துக்கணும்.
அதாவது, சாதாரணமா அண்ணாந்து, இன்னும் கொஞ்சம் கழுத்தை வளைச்சு தலைகீழா பின்னாடி பார்த்தா
எப்படி இருக்கும்? அதே மாதிரி படுத்துக்கிட்டு செய்யணும். அவ்வளவுதான். இப்படி ஒரு சில
விநாடிகள் இருந்தாலே சுவாசக் குழாய் உடனே சுத்தமாகிடுது! (உட்கார்ந்துகிட்டும் செய்யலாம்னு நினைக்கிறேன்.
இன்னும் முயற்சிக்கலை).
கிட்டத்தட்ட மத்ஸ்யாசனம் மாதிரி... (கழுத்து position மட்டும்).
ஒரு வேளை யோகாசனங்களை ஒழுங்கா செய்துகிட்டு வந்திருந்தா இந்த தொந்தரவே வந்திருக்காது போல.
இதைக் கண்டு பிடிச்சப்போ எனக்கு
அப்படி ஒரு relief-ஆ இருந்தது! இப்போ நாலஞ்சு நாளா இதேதான் செய்யறேன். இது உங்களுக்கு
ஏற்கனவே தெரியுமோ என்னவோ? ஆனா எனக்குத் தெரிஞ்சிருக்கலை…
கழுத்தை ரொம்ப strain பண்ணிக்க
வேண்டாம். ஆசனமாகவே செய்யணும்னா கவனம் தேவை. குறிப்பா அந்த position-ல இருந்து
வெளில வரும்போது, முதல்ல தலையை மேலே தூக்கிட்டு,
பிறகுதான் முழு உடம்பையும் கீழே கொண்டு வரணும். இல்லைன்னா கழுத்து எலும்பு பாதிக்கப்படும்.
உங்களுக்கும் உதவக்கூடும் என்ற
எண்ணத்தில் பகிர்ந்தது…
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.buzzle.com/img/articleImages/544043-47225-5.jpg
முயற்சி செய்து பார்க்கிறேன்... ஏதாவது ஆகிடுச்சுன்னா சகோதரி தான் பொறுப்பு....
ReplyDeleteஅது சரி... :) ஒண்ணும் ஆகாதுப்பா! இருந்தாலும் ஒரு டிஸ்கியும் போட்டு வெச்சுட்டேனே, பார்க்கலையா :)
Deleteவருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்!
மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாததை எளிய பயிற்சியால் நிவாரணமளித்ததை பகிர்ந்த பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி அம்மா!
Deleteநல்லது... செய்து பார்ப்போம்... நன்றி...
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி திரு.ரமணி!
Deleteநல்ல பகிர்வு. அனைவருக்கும் பயனாகும் ஆலோசனை.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி .ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் செய்யும் முயற்சிகள்
ReplyDeleteவெற்றி அளித்த போது வருவன தானே இவ்வாறான கண்டு பிடிப்புக்கள் .
இது அனைவருக்கும் பயன் தரும் நல்லதொரு தகவல் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
நீங்கள் சொல்வது உண்மையே. நன்றி அம்பாளடியாள்!
Deleteபதிவுத் தலைப்பைப் பாத்ததும் சந்தோஷமா ஓடி வந்தேன். என்னை மாதிரி 'சைனஸ்' தொந்தரவு இருக்கறவங்களுக்கெல்லாம் ரொம்ப உதவும் பதிவு. அதுவும் இங்கே பெங்களூர் க்ளைமேட்டுக்கு 'ஆ..ஊ'ன்னா ஜலதோஷம் தான். நிச்சயம் செய்து பாக்கறேன். மிக அருமையான, உபயோகமான பகிர்வுக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஉங்களுக்குப் பயன்பட்டால் சந்தோஷம்! நன்றி பார்வதி!
Deleteமத்யாசனம் நல்ல ஆசனம். சாதாரண நிலைக்கு வரும்போது மிகுந்த கவனம் தேவை....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ஆமாம். நன்றி வெங்கட்!
Deleteநாங்க தினம் படுத்துக்கறதே அந்த பொசிஷன்லே தானே! :)))) மத்ஸ்யாசனம் ஆஸ்த்மா நோயாளிகளுக்குக் கட்டாயமாய்ச் செய்யணும். :)
ReplyDeleteபதிவு எழுதும்போதே உங்க நினைவு வந்தது அம்மா :) ஆனா இந்த விஷயம் எனக்குத் தெரியாதே. கூகுளார்கிட்டல்லாம் கேட்டுப் பார்த்தேன். என்னைப் போலவே தெரியாம எத்தனை பேர், பாருங்க... வருகைக்கு நன்றி கீதாம்மா.
Deleteஇப்ப கொஞ்சம் பரவாயில்லையா? எனக்கும் சளி தான் எப்போதும் சனி :)
ReplyDeleteஅச்சோ. உங்களுக்குமா? தினசரி காலையில கருந்துளசி சாப்பிடுங்க. முக்யமா, குட்டிப் பாப்பாவுக்கு ஒட்டி விட்ராதீங்க!
Deleteவருகைக்கு நன்றி தம்பீ :)