அனைவருக்கும் இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்!
துர்க்கை வழிபாட்டில் நவதுர்க்கை வழிபாடு பிரசித்தமானது. நவ துர்க்கைகளையும் வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில், குறிப்பிடுகிறார்கள்.
சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா,
காத்யாயனி, காளராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி, என்ற நவ வடிவங்களாகவும்,வனதுர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, ஜ்வாலா துர்கை, லவண துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, என்று மற்றொரு வகை நவ வடிவங்களாகவும், நவதுர்கா தேவியர் அறியப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விவரம் அறிய வேண்டுமானால், பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் பதிவுகளிலும், கீதாம்மாவின் பதிவுகளிலும் சென்று பாருங்கள்! அவர்கள் பதிவுகளில் உள்ள விவரங்களின் உதவியுடன், நவ துர்க்கைகளைப் போற்றி, துர்க்காஷ்டகத்தின் மெட்டில் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நீங்களும் அவற்றைப் பாடி துர்க்கையம்மையின் அருள் பெற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
துர்க்கை அம்மையே எழில் துர்க்கை அம்மையேதுர்க்கை அம்மையே நவ துர்க்கை அம்மையே!
ஞானம் என்கிற சூலம் ஏந்தி நிற்பவள்
தர்மம் என்கிற சிம்மம் மீதமர்ந்தவள்
தீயவற்றையே அழித்து நன்மை தருபவள்
முக்கண்கள் கொண்டு மூன்று காலம் ஆள்பவள்
துர்க்கை அம்மையே எழில் துர்க்கை அம்மையே
துர்க்கை அம்மையே நவ துர்க்கை அம்மையே!
வனத்தில் வாழ்பவள் எங்கள் மனதை ஆள்பவள்
முனிவர் தேவரும் யாவரும் போற்ற மகிழ்பவள்
அகத்திய முனிக்கு அன்பால் உதவி செய்தவள்
விந்திய மலையின் கருவம் அடங்கச் செய்தவள்
வன துர்க்கையே வாழ வைக்கும் துர்க்கையே
மனதில் நின்றெங்கள் மாயம் மாய்க்கும் துர்க்கையே!
பர்வத ராஜன் மகளாய்ப் பிறந்த துர்க்கையே
பார்வதி என்னும் நாமம் கொண்ட துர்க்கையே
ஆதிசிவன் செய்த ஆனந்த தாண்டவத்திலே
அவ தரித்த துர்க்கையே எங்கள் அன்பு துர்க்கையே
சைல புத்ரி யாய் உலகை இயக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!
--கவிநயா
(தொடரும்)
துர்க்காஷ்டகம் கேட்க: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4
படத்திற்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/
இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்!
ReplyDeleteஅருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி அம்மா.
Deleteஅற்புதம்!!. அற்புதம்!!. பாடினா ரொம்ப நல்லா இருக்கு. என் பதிவைக் குறிப்பிட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி!!.
ReplyDeleteஉங்கள், கீதாம்மாவின் பதிவின் உதவியுடன் தான் எழுதினேன். அதனால் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி பார்வதி.
DeleteEnnadaa ithu navarathiri vanthuduthe, ambal bakthaiyidam irunthu enna post varporathunnu aavala ethir parthirndurnthen. Nice post as usual. :)))))
ReplyDeleteமிக்க நன்றி தானைத் தலைவி :)
Deleteதுர்க்கை அம்மனே போற்றி....
ReplyDeleteதொடருங்கள்... தொடர்கிறோம்...
மிக்க நன்றி சே.குமார்.
Delete