உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, October 6, 2013
நவ துர்கா தேவியர் - சாந்தி துர்க்கை, கூஷ்மாண்டா தேவி
சுப்பு தாத்தா இந்தப் பாடலை ஆனந்த பைரவியில் அருமையாகப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா.
அன்பு வடிவினள் துர்கா அமைதி வடிவினள்
துன்பம் நீக்கியே துர்கா இன்பம் தருபவள்
கோபம் தீர்ப்பவள் நல்ல குணத்தை தருபவள்
சாந்த ரூபியாய் சாந்தம் அருளிச் செய்பவள்
சாந்தி துர்க்கையே எழிற் காந்தி துர்க்கையே
ஏந்தி எம்மையே கையில் தாங்கும் துர்க்கையே
அண்டம் யாவையும் படைத்துக் காக்கும் துர்க்கையே
அண்டும் வினைகளை அழித்து ஓட்டும் துர்க்கையே
அந்தி நேரத்தில் சந்தியா தாண்டவத்திலே
அவ தரித்த துர்க்கையே எங்கள் அன்பு துர்க்கையே
கூஷ்மாண்டா தேவியாய் குறைகள் நீக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
--கவிநயா
(தொடரும்)
துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4
படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/
Subscribe to:
Post Comments (Atom)
அருமை... நன்றிகள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.
DeleteListen to this Sthuthi in Raag Anandha bhairavi here:
ReplyDeletewww.menakasury.blogspot.com
subbu thatha.
அருமை தாத்தா. அப்போதே கேட்டு, இடுகையிலும் இணைத்து விட்டேன், இப்போதுதான் பதில் எழுத முடிந்தது தாத்தா. மன்னியுங்கள். மிக்க நன்றி தாத்தா.
Deletenalla irukku
ReplyDeleteஅட, ரொம்ப நாளாச்சு பார்த்து! :) நன்றி மௌலி...
Delete