Friday, October 11, 2013

நவ துர்கா தேவியர் - ஆசுரி, சித்தாத்ரி


தூய வெண்மையின் நிறம் கொண்ட துர்க்கையே
மாய மோஹினி வடிவில் வந்த துர்க்கையே
பாற்கடல் அமுதைத் தேவர்க் களித்த துர்க்கையே
அருட்கடலாக சித்தி அளிக்கும் துர்க்கையே

ஆசுரி என்னும் நாமம் கொண்ட துர்க்கையே
அன்புடன் எம்மை என்றும் காக்கும் துர்க்கையே


அஷ்ட சித்திகள் யாவும் அருளும் துர்க்கையே
இஷ்டங்கள் யாவும் பூர்த்தி செய்யும் துர்க்கையே
சிவ நடன மென்னும் ஸ்ருங்கார தாண்டவத்திலே
சித்தி ராத்ரியாய் அவ தரித்த துர்க்கையே

சித்தாத்ரி துர்க்கையே சிவ தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

சர்வ சக்தியும் ஒன்றாய் இணைந்த துர்க்கையே
மர்த்தினியாக கன்மம் மாய்க்கும் துர்க்கையே
அபயம் தந்தெமை ஆ தரிக்கும் துர்க்கையே
ஜெயங்கள் யாவுமே தந்து காக்கும் துர்க்கையே

மூல துர்க்கையே மஹா லக்ஷ்மி துர்க்கையே
தேவி துர்க்கையே சரணம் தரணும் துர்க்கையே!


--கவிநயா

(சுபம்) 

வாசித்து வந்த அனைவருக்கும் அன்னையின் அருள் சிறக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

துர்க்காஷ்டகம் கேட்க: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4
படத்திற்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

6 comments:

  1. அருமை... அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்...

    வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பதிவையும் தவறாமல் வாசித்ததோடல்லாமல், பின்னூட்டியும் சென்ற உங்களுக்கு சிறப்பு நன்றிகள், தனபாலன். மிக்க நன்றி.

      Delete
  2. அழகான பாடல். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //அனைவருக்கும் அன்னையின் அருள் சிறக்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.//

    அழகான எண்ணம் + சிறப்பான வேண்டுதல் மகிழ்ச்சியளிக்கிறது. மனம் நிறைந்த நன்றிகள்.

    http://gopu1949.blogspot.in/2013/10/64.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. உங்கள் அருமையான பதிவையும் இப்போதுதான் பார்க்க முடிந்தது. மிக்க நன்றி.

      Delete
  3. துர்க்கை சரணம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவா. மிக்க நன்றி.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)