அன்பால் நிறைந்த நெஞ்சம்
ஆண்டவனிடத்தில் தஞ்சம்
இயல்பில் குழந்தை உள்ளம்
ஈயப் பெருகும் இன்பம்
உலகம் அனைத்தும் உறவு
ஊக்கம் உயிரின் மூச்சு
எதையும் தாங்கும் இதயம்
ஏதம் இல்லா உதயம்
ஐயம் இல்லா பக்தி
ஒரு முகமான தியானம்
ஓயா எறும்பாய் உழைப்பு
ஔவை சொன்ன அறம்
அமைதி நிறைந்த வாழ்வு!
--கவிநயா
வணக்கம்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், கவிநயா :) !
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்!
Deleteஅகர வரிசையில் அமைந்த கவிதை புத்தாண்டை அன்புடன் வரவேற்கிறது!. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. வாழ்க வளமுடன்!..
ReplyDeleteநன்றி பார்வதி!
Deleteபுத்தாண்டு வேண்டுதலாய் நல்ல கவிதை...
ReplyDeleteநன்றி குமார்!
Deleteஅ முதல் ஔ வரை புதிதாய் ஒரு வாழ்த்து!
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.