எங்கள் ஊர்க் கோவிலில் திருகார்த்திகைத் தீபம் |
எண்ணும் மனம் உறைந்தான்
எண்ணமெல்லாம் நிறைந்தான்
அண்ணா மலை அவன் தான்
அருள் மலையாய் வளர்ந்தான்!
உண்ணா முலைக் கெனத்தான்
தண்ணிலவாய்க் குளிர்ந்தான்
கண்ணுதலான் கனிந்தான்
தன்னில் சரி பாதி தந்தான்!
கேட்கும் வரம் அத்தனையும்
அள்ளி யள்ளித் தந்திடுவான்
ஓமென்றால் ஆமென்பான்
தா யென்றால் தாயுமாவான்!
கேட்கும் வரம் அத்தனையும்
அள்ளி யள்ளித் தந்திடுவான்
ஓமென்றால் ஆமென்பான்
தா யென்றால் தாயுமாவான்!
அயன் அரி அறியாத
அடி முடி கொண்டவன்தான்
கள்ளமற்ற அன்புக் கென்றால்
கட்டுப்பட்டு வந்திடுவான்!
--கவிநயா
--கவிநயா
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள்... பகிர்வுக்கு நன்றி
இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்!
Delete//எண்ணும் மனம் உறைந்தான்
ReplyDeleteஎண்ணமெல்லாம் நிறைந்தான்..//
அதுவே. இனிய திருகார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.
எண்ணெய், திரி இல்லையென்றாலும் தீபம் என்றாலே போதும் அதற்கென்று ஒரு தனி அழகு வந்துவிடுகிறது, பாருங்கள்!..
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை ஜீவி ஐயா! வருகைக்கு மிகவும் நன்றி.
Deleteஅருமை.
ReplyDeleteதிருகார்த்திகை திருநாள் நல்வாழ்த்துகள்.
கவிதையும் அருமை...
ReplyDeleteதீபமும் அருமை...
மிக்க நன்றி சே.குமார்!
Deleteதிருக்கார்த்திகை வாழ்த்துகள்! படமும் வரிகளும் அருமை.
ReplyDelete