கரு நீலத் தாமரையோ தொட்டிலிலே
முளைத்தது!
தாய் விழிகள் திறக்கையிலே தாமரையோ
சிரித்தது!
இருப்பதென்ன கனவுலகோ?
பார்ப்பதென்ன கற்பனையோ?
பிறந்த குழந்தை அழாமல்
அறிந்தவர் போல் சிரிக்கிறதே!
திறந்து விரியும் பொக்கை வாயில்
சொர்க்கமெல்லாம் தெரிகிறதே!
ஆயர்குல ராணிக்கு என்றுமில்லா
ஐயங்கள்!
விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை,
ஆயர்குல இரத்தினத்தை,
ஆயர்குல இரத்தினத்தை,
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.stephen-knapp.com/krishna_print_onehundredseventynine.htm
படம் தந்த கவிதை
ReplyDeleteபடம்போல மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கொஞ்சம் மாற்றிச் சொல்லி விட்டீர்கள். கவிதை வந்த பிறகுதான் படம் தேடி எடுத்தேன் :) வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி!
Delete