உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Thursday, May 20, 2010
அனுமந்தா அனுமந்தா...!
அனுமந்தா அனுமந்தா
அஞ்சனை மைந்தா அனுமந்தா!
அனுமந்தா அனுமந்தா
ஆஞ்ச நேயா அனுமந்தா!
ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா
அஞ்சாத வீரா அனுமந்தா!
துஞ்சாமல் அனுதினம் கண்போல ராமரை
நெஞ்சார போற்றிடும் அனுமந்தா!
கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!
காற்றினில் ஏறி கடலினைக் கடந்து
இலங்கையைப் பொடித்தாய் அனுமந்தா!
புத்தியில் பக்தியில் சக்தியில் உனக்கு
நிகரில்லை எவரும் அனுமந்தா!
அத்தனை இருந்தும் அடக்கத்தின் உருவாய்
திகழ்பவன் நீயே அனுமந்தா!
கருத்திட்ட வண்ணன் கமலக் கண்ணன்
கதையினைச் சொன்னால் அனுமந்தா!
கருத்துடன் அமர்ந்து கண்ணீர் பெருக
கேட்டிடு வாயே அனுமந்தா!
நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான தாள லயத்துடன் அழகான பாடல் அனுமந்தனுக்கு.
ReplyDelete//கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!//
ரசித்தேன்.
படமும் அழகு. இணையத்தில் எடுத்ததா? தெரிந்தவர் வரைந்ததா?
ஆஞ்சநேயர் கவிதை ரொம்ப ரொம்ப அருமை கவிநயா. படித்து முடிக்கையில் இன்னொரு முறை படிக்க தூண்டுகிறது.
ReplyDeleteஆஞ்சநேயர் துதி மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது. பாடப்பாட பக்தி பரவசமாய் நெஞ்சை நிறைக்கிறது.
ReplyDeleteதமிழ் குழைந்து வந்து மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
மிக்க நன்றி, கவிநயா!
Hanumaanai parri muthal Kavithai.Romba Alagu.Ellarukkum Nallathe Nadakkum.
ReplyDeleteNatarajan.
//விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
ReplyDeleteவளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!
// alaku varikal akka. good job!
இன்று சனிக்கிழமை.வழ்க்கமாக ஆஞ்சனேயர் சன்னதிக்குச் சென்று அர்ச்சனை செய்வது வழக்கம்.
ReplyDeleteஇன்று இயலவில்லை.
இருப்பினும் அனுமன், அந்த அஞ்சனா புத்ரன்,
அஸாத்ய் ஸாதகன், ராம் பக்தன்,
ராம கானம் எங்கு ஒலிப்பினும் அங்கு பாஷ்ப வாரி பொழிந்துகொண்டு
அமைதியாக தன் இதயத்திலே ராமனை நினைந்து நினைந்து உருகியவன்
அவன் இன்று கவி ந்யா வாயிலிருந்து கவிதயாகப் புறப்பட்டு,
என்னைப் பாடவைத்துவிட்டான்.
என் கண்களைக் குளமாக்கிவிட்டான்.
இதோ ! இன்னும் ச்ற்று நேரத்தில் எனது வலையில் உங்கள் கானம்.
சுப்பு ரத்தினம்.
http;//pureaanmeekam.blogspot.com
//அருமை வாழ்த்துகள்//
ReplyDeleteநன்றி யாதவன்.
நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDelete//படமும் அழகு. இணையத்தில் எடுத்ததா? தெரிந்தவர் வரைந்ததா?//
குழுமத்தில் ஒருவர் இட்டதை சுட்டுட்டேன் :)
//ஆஞ்சநேயர் கவிதை ரொம்ப ரொம்ப அருமை கவிநயா. படித்து முடிக்கையில் இன்னொரு முறை படிக்க தூண்டுகிறது.//
ReplyDeleteமிகவும் நன்றி மீனா.
//Hanumaanai parri muthal Kavithai.Romba Alagu.Ellarukkum Nallathe Nadakkum.
ReplyDeleteNatarajan.//
நன்றி திரு.நடராஜன் :)
//alaku varikal akka. good job!//
ReplyDeleteநன்றி தம்பீ :)
உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி தாத்தா.
ReplyDelete//இன்னும் ச்ற்று நேரத்தில் எனது வலையில் உங்கள் கானம்.
சுப்பு ரத்தினம்.
http;//pureaanmeekam.blogspot.com//
நீங்களும் பாட்டியும் சேர்ந்து பாடிய அனுமன் பாடலை கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி தாத்தா.
//ஆஞ்சநேயர் துதி மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது. பாடப்பாட பக்தி பரவசமாய் நெஞ்சை நிறைக்கிறது.
ReplyDeleteதமிழ் குழைந்து வந்து மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
மிக்க நன்றி, கவிநயா!//
உங்களுக்கு பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி ஜீவி ஐயா. மிகவும் நன்றி.
wow...super
ReplyDelete//wow...super//
ReplyDeleteநன்றி அ.தங்கமணி :)
nice line drawing!
ReplyDelete//nice line drawing!//
ReplyDeleteகுழுமத்தில் இட்டவர் வேறு; சுட்டவள் நானு :)
நன்றி திவாஜி.