ஆனையா, யானையா? எது சரி? (தமிழ்க் கடவுள் - அதாங்க, யானையோட தம்பி - அவரு வந்து சொல்லுவாருன்னு நினைக்கிறேன் :)
யானைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்! (பிள்ளையாரையும் :) உங்களுக்கு? அதுவும் இந்தப் படத்துல இருக்க யானையைப் பாருங்களேன்... சிரிக்கிற மாதிரியே இருக்கில்ல? :)
ஆனை பாரு யானை பாரு
ஆடி அசைஞ்சு வருது பாரு!
கறுப்பு யானை கம்பீ ரமா
நாட்டை நோட்டம் விடுது பாரு!
தூணைப் போலக் காலைப் பாரு
நீண்ட தும்பிக் கையைப் பாரு!
முறத்தைப் போலக் காதைப் பாரு
விசிறி வீசும் அழகைப் பாரு!
மலையைப் போல உடம்பைப் பாரு
கடுகைப் போலக் கண்ணைப் பாரு!
குட்டிக் குட்டி வாலைப் பாரு
குனிய வச்சு ஏறிப் பாரு!
நீரை உறிஞ்சிக் குளிக்கும் பாரு
பூவாய்ச் சொரிந்து களிக்கும் பாரு!
வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு
வாகாய் உள்ளே தள்ளும் பாரு!
கழுத்தில் மணியைக் கட்டிப் பாரு
காத தூரம் கேட்கும் பாரு!
பிள்ளை யாரு முகத்தைப் பாரு
உள்ளம் துள்ளிக் குதிக்கும் பாரு!
ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!
--கவிநயா
எல்லோருக்கும் யானையை பிடிக்கும். நல்ல படத்துக்கு நல்ல பாட்டு.
ReplyDelete//நீரை நேக்காய் உறிஞ்சும் பாரு
பூவாய்ச் சொரிந்து குளிக்கும் பாரு! //
மொழித் தடையில்லாவிட்டால் ரசிக்கலாம். ஆங்கிலத்தை விட்டு சொல்ல வேண்டுமானால்
நீரை உறிஞ்சி குளிக்கும் பாரு
பூவாய் சொரியும் திவலை பாரு
என்று மாற்றிக்கொள்ளலாமா :)
யானையை நல்லா பாத்தாச்சு தாங்ஸ் அக்கா. அது என்ன எல்லா வரிலேயும் பாரு பாருன்னு முடிச்சுட்டு. ஒரு வரிலே மட்டும் மாத்திட்டீங்க.
ReplyDeleteகறுப்பு யானை கம்பீ ரமா
வரியை மாத்திப்போடுங்க இப்படி
கறுப்பு யானை குட்டி பாரு
அருமையான பாடல்.
ReplyDeleteஆமாம் கவிநயா ஆனை சிரிக்கிற மாதிரியேதான் இருக்கிறது.
//ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!//
ஆனையின் சிரிப்பில் தெரிகிற பெருமிதம் தும்பிக்கையால் மட்டுமல்ல அல்ல தன்னம்பிக்கையாலும் என உணர்த்தி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
அருமைக்கா.....யானை யானை, அழகரானை, அழகரும் சொக்கரும் ஏறும் யானை... :-)
ReplyDeleteஎனக்கு பிடிச்சது ஆனைதான்!
ReplyDeleteகபீரன்பன் வாத்தியாரும் திராச வாத்தியாரும் கரெக்டா தப்பு கண்டு பிடிச்சு அதுக்கு திருத்தமும் சொல்லிட்டாங்க! :-))
- ஆனைப்பாகன்
/ஆனை யோட பலத்தைப் பாரு
ReplyDeleteதும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!/
எளிமை
அருமை
வாழ்த்துகள்
என்னுடைய ஊருக்கு வாங்க கவிநயா..யானைகளை அருகிலிருந்தே ரசிக்கலாம்.
ReplyDeleteஇங்கே பாருங்க :)
http://msmrishan.blogspot.com/2009/01/village-in-srilanka.html
கீற்றில் உங்கள் அழகான கவிதையொன்றை இன்று கண்டேன். பாராட்டுக்கள் சகோதரி..தொடர்ந்து எழுதுங்கள் !
யானை பாட்டு அருமை.
ReplyDeleteகுழந்தைகள் பாடி,ஆடினால் அற்புதமாய் ரசிக்கலாம்.நயமான கவிதை
ஆகா..பாரு பாருன்னு பாடல் அசத்தல் ;)
ReplyDeleteநீங்கள் யானைப்பாட்டு பாடியது கேட்டு,
ReplyDeleteஏகப்பட்ட யானைகள் எங்கள் வளசரவாக்கம் சீப்ராஸ் பார்க்குக்கு
வந்து விட்டன.
அதை ப்பார்க்க, உங்கள் கானத்துக்கு செவிமடுக்க வாருங்கள்.
சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட்
Welcome to
ReplyDeletehttp://ceebrospark.blogspot.com
subbu thatha
//மொழித் தடையில்லாவிட்டால் ரசிக்கலாம். ஆங்கிலத்தை விட்டு சொல்ல வேண்டுமானால்//
ReplyDeleteவாங்க கபீரன்பன் ஐயா. நீங்க சொன்னபடி மாற்றிட்டேன் - கொஞ்சம் வேற மாதிரி... :)
//நல்ல படத்துக்கு நல்ல பாட்டு.//
மாத்தி சொல்லீட்டிங்க :) பாட்டுதான் முதல்ல வந்தது; படம் அப்புறம் :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க தி.ரா.ச. ஐயா.
ReplyDelete//யானையை நல்லா பாத்தாச்சு தாங்ஸ் அக்கா.//
அச்சோ. உங்களுக்கும் நான் அக்காவா. நல்ல வேளையாப் போச்சு!
//ஒரு வரிலே மட்டும் மாத்திட்டீங்க.//
ஆமா, யானையுடைய கம்பீரத்தைச் சொல்லணும்னு ஆசை. அதோட 'கம்பீரம்' அப்படிங்கிற சொல்லும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒலியே கம்பீரமா இல்ல? அதனால மாத்தல. தவறா நினைக்காதீங்க :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
வாங்க (விகடன் புகழ் :) ராமலக்ஷ்மி.
ReplyDelete//ஆமாம் கவிநயா ஆனை சிரிக்கிற மாதிரியேதான் இருக்கிறது.//
:)))
//ஆனையின் சிரிப்பில் தெரிகிற பெருமிதம் தும்பிக்கையால் மட்டுமல்ல அல்ல தன்னம்பிக்கையாலும் என உணர்த்தி விட்டீர்கள்.//
அந்த வரி எழுதும்போது உங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சுக்கிட்டே எழுதினேன்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
//அருமைக்கா.....யானை யானை, அழகரானை, அழகரும் சொக்கரும் ஏறும் யானை... :-)//
ReplyDeleteவாங்க மௌலி. ஆமா, எனக்குக் கூட அப்படி ஒரு பாட்டு லேசா நினைவு இருக்கு :)
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி மௌலி.
வாங்க திவா.
ReplyDelete//எனக்கு பிடிச்சது ஆனைதான்!//
:)))
//கபீரன்பன் வாத்தியாரும் திராச வாத்தியாரும் கரெக்டா தப்பு கண்டு பிடிச்சு அதுக்கு திருத்தமும் சொல்லிட்டாங்க! :-))//
வாத்தியார்னாலே ரொம்ப மோசம். தப்பு கண்டுபிடிக்கிறதுல எவ்ளோ சந்தோஷம்! :)
//- ஆனைப்பாகன்//
வருகைக்கு மிக்க நன்றி ஆனைப் பாகரே :)
வருக ரிஷு.
ReplyDelete//http://msmrishan.blogspot.com/2009/01/village-in-srilanka.html//
அடேங்கப்பா! எம்புட்டு யானை! அசந்தே போயிட்டேன். யானை பார்க்கவாச்சும் உங்க ஊருக்கு வந்துட வேண்டியதுதான் :)
//கீற்றில் உங்கள் அழகான கவிதையொன்றை இன்று கண்டேன். பாராட்டுக்கள் சகோதரி..தொடர்ந்து எழுதுங்கள் !//
ஊக்கத்திற்கு மிக்க நன்றி ரிஷு.
//எளிமை
ReplyDeleteஅருமை//
வாங்க திகழ்மிளிர். மிக்க நன்றி :)
//யானை பாட்டு அருமை.
ReplyDeleteகுழந்தைகள் பாடி,ஆடினால் அற்புதமாய் ரசிக்கலாம்.நயமான கவிதை//
வாங்க கோமா. ஆம், குழந்தைகளுக்காகவே எழுதின பாப்பா பாட்டுதான் இது :) வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள் பல :)
//நீங்கள் யானைப்பாட்டு பாடியது கேட்டு,
ReplyDeleteஏகப்பட்ட யானைகள் எங்கள் வளசரவாக்கம் சீப்ராஸ் பார்க்குக்கு
வந்து விட்டன.//
வாங்க சுப்பு தாத்தா. உங்க பார்க்குக்கு வந்து பார்த்தேன். பாட்டு அருமை. வாயினாலேயே சவுண்ட் எஃபக்ட் லாம் குடுத்து தூள் கெளப்பியிருக்கீங்க! :) ரொம்ப நல்லா இருக்கு. மிக்க நன்றி!
//ஆகா..பாரு பாருன்னு பாடல் அசத்தல் ;)//
ReplyDeleteவாங்க கோபி. ரசனைக்கு மிக்க நன்றி :)
அட, என்ன கொடுமைடா இது சரவணா, ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் இப்படிப் போயிட்டு வரதுக்குள்ளே, எனக்குப் பிடிச்ச ஆனை ரசனைக்குப் போட்டியா எல்லாரும் முளைச்சிருக்காங்களே, இந்தக் கொடுமையைக்கேட்பாரில்லையா??? :P:P:P:P:P:P
ReplyDeleteஆனைகளும் அருமை, பாட்டும் அருமை! :))))))))))
இரசித்தேன்...
ReplyDeleteஆனைமுகன் தம்பி வரலை. ஆனையே வந்திருக்கேன். (என் மகள் நேற்று தன் அம்மாவிடம் சொன்னது: அம்மா. குமரன்னு டி.வி.யிலே வருதே. அது நம்ம குண்டு குமரன் அப்பாவா எம்.குமரன் குமரனா?).
ReplyDeleteஆனையும் சரி தான்; யானையும் சரி தான்.
பாட்டைப் பாடிப் பார்த்தேன் அக்கா. நல்லா இயற்கையா வருது ஒவ்வொரு சொல்லும்.
//அட, என்ன கொடுமைடா இது சரவணா, ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் இப்படிப் போயிட்டு வரதுக்குள்ளே, எனக்குப் பிடிச்ச ஆனை ரசனைக்குப் போட்டியா எல்லாரும் முளைச்சிருக்காங்களே, இந்தக் கொடுமையைக்கேட்பாரில்லையா??? :P:P:P:P:P:P//
ReplyDeleteவாங்க வாங்க கீதாம்மா. உங்களுக்குதான் வெயிட்டிங்! உங்கள நினைச்சுக்கிட்டேதான் ஆனை பாட்டு போட்டேன். சரியா ஊர்ல இருந்து வந்துட்டீங்க :) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
//இரசித்தேன்...//
ReplyDeleteவாங்க அமுதா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி. :)
//ஆனைமுகன் தம்பி வரலை. ஆனையே வந்திருக்கேன். (என் மகள் நேற்று தன் அம்மாவிடம் சொன்னது: அம்மா. குமரன்னு டி.வி.யிலே வருதே. அது நம்ம குண்டு குமரன் அப்பாவா எம்.குமரன் குமரனா?).//
ReplyDeleteச்சோ ச்வீட் :) உங்க குட்டி பொண்ணு பெரிய பொண்ணா ஆகறதுக்குள்ள பார்க்கணும் :)
//ஆனையும் சரி தான்; யானையும் சரி தான்.//
நன்றி தமிழ் கடவுளே :)
/பாட்டைப் பாடிப் பார்த்தேன் அக்கா. நல்லா இயற்கையா வருது ஒவ்வொரு சொல்லும்.//
ரொம்ப நன்றி குமரா.
//வாங்க வாங்க கீதாம்மா. உங்களுக்குதான் வெயிட்டிங்! உங்கள நினைச்சுக்கிட்டேதான் ஆனை பாட்டு போட்டேன். சரியா ஊர்ல இருந்து வந்துட்டீங்க :) //
ReplyDeletesentimentala touchitinga ponga!!!! ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டே, நன்றியுடன் :)))))))))))))))))))))))))
//sentimentala touchitinga ponga!!!! ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டே, நன்றியுடன் :)))))))))))))))))))))))))//
ReplyDeleteஉங்க ஆனந்தத்தைக் கண்டு எனக்கும்
ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே! :)
மீள் வருகைக்கு மிக்க நன்றி கீதாம்மா.
ஹையோ ய்யானை. அழகே அழகு. யானை மணி கேட்டு இந்த வயதிலும் வாசலுக்கு ஓடுவேன். அதன் கண்கள் என்னைப்பார்க்கும் வரை நின்று கொண்டிருப்பேன். ரொம்ப நன்றிப்பா கவி.
ReplyDeleteவாங்க வாங்க வல்லிம்மா.
ReplyDelete//ஹையோ ய்யானை. அழகே அழகு. யானை மணி கேட்டு இந்த வயதிலும் வாசலுக்கு ஓடுவேன். அதன் கண்கள் என்னைப்பார்க்கும் வரை நின்று கொண்டிருப்பேன்.//
ச்சோ ச்வீட் :) உங்க குஷியைப் பார்த்து எனக்கும் குஷியா இருக்கு! ரொம்ப நன்றி அம்மா.
(உங்களோட கதை படிக்க நான் ரெடி. தொடர்ந்து எழுத நீங்களும் ரெடியாகிக்கோங்க! :)
யானையை பொதுவாக ஏன் எல்லோருக்குமே பிடிக்கிறது ?
ReplyDeleteஉலகத்திலே மூன்று மட்டுமே அலுப்பே தட்டாதாம்.
எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஒன்று : முழு நிலா.
இரண்டு: கடல் அலைகள்.
மூன்றாவது. யானை.
மூன்றுமே மன அமைதி ஒரு ரிலேகஷேசன் தர வல்லன.
அது சரி ! யானை பாரு பாட்டின் இரண்டாவது வர்ஷன் கேட்டீர்களோ ?
மீனாட்சி பாட்டி.
ரயிலை விட்டுட்டீங்களே, மீனாட்சி பாட்டி?? நான் இன்னும் ரயிலைப் பார்ப்பதிலும், பயணம் செய்வதிலும் விருப்பம் உள்ளவள். :)))))))) அதீத மன அழுத்தத்தையும் போக்கும் வல்லமை கொண்டவை இவை! :(
ReplyDelete//ஒன்று : முழு நிலா.
ReplyDeleteஇரண்டு: கடல் அலைகள்.
மூன்றாவது. யானை.
மூன்றுமே மன அமைதி ஒரு ரிலேகஷேசன் தர வல்லன.//
அட, உண்மைதான் மீனாட்சி பாட்டி. சரியா சொன்னீங்க.
//அது சரி ! யானை பாரு பாட்டின் இரண்டாவது வர்ஷன் கேட்டீர்களோ ?//
எங்கே இருக்கு? லிங்க் குடுங்களேன்...
வருகைக்கு மிக்க நன்றி பாட்டி :) புது பேரன் வரவுக்கு வாழ்த்துகள்.
//நான் இன்னும் ரயிலைப் பார்ப்பதிலும், பயணம் செய்வதிலும் விருப்பம் உள்ளவள். :)))))))) //
ReplyDeleteஎனக்கும் ரயிலோட தாலாட்டு ரொம்பப் பிடிக்கும் கீதாம்மா :) நிற்காம போய்கிட்டே இருக்கணும் போல இருக்கும்!
//அதீத மன அழுத்தத்தையும் போக்கும் வல்லமை கொண்டவை இவை! :(//
இதுக்கேன் வருத்தம்? மன அழுத்தம் போகறது நல்லதுதானே? :)
//மலையைப் போல உடம்பைப் பாரு
ReplyDeleteகடுகைப் போலக் கண்ணைப் பாரு!
குட்டிக் குட்டி வாலைப் பாரு
குனிய வச்சு ஏறிப் பாரு!//
-- கவிநயா
-- இந்த வரிகள் ரொம்ப ரொம்ப இயல்பாய் அமைந்து விட்டது, பாருங்கள்! இன்னொருதடவை படித்துப்பாருங்கள், நீங்களே இதை உணர்வீர்கள்.
பிர்மாண்டத்தைச் சொல்லி, தம்மாத்துண்டைக் கூடவே சுட்டிக் காட்டும் அழகே, அழகு!
அந்த 'குனிய வைச்சு ஏறிப் பாரு'
அட்டகாசமாய் வந்து விழுந்த வரிகள்!
குனிந்தால் தான் முடியும்.. மறுபடியும் அந்த பிர்மாண்டத்தை
பார்த்து மலைக்க வைத்திருக்கிறீர்கள்..
தமிழின் அமிழ்தை மாந்த வைத்திருக்கிறீர்கள்!
இதெல்லாம் யோசித்து எழுதுவதில்லை; 'வரம் பெற்றிருக்க வேண்டும், இப்படி வார்த்தைகள் துள்ளிக் குதித்து வர'.. என்று தான் நினைக்கத் தோன்றுகிறது..
வழிகாட்டி அழைத்து வந்தமைக்கு மிகவும் சந்தோஷம். ஆனைப் பாட்டு அருமை. குட்டிச் சிறார்கள் கொண்டாட்டமாக கையைச்சுப் பாடுவதற்கு வாகாக அமைந்திருக்கிறது.
மனத்தில் நினைவு வைத்துக் கொண்டு குழந்தைகளுக்காக
எழுதுவதற்கு வாழ்த்துக்கள்..
வாங்க ஜீவி ஐயா.
ReplyDelete//இதெல்லாம் யோசித்து எழுதுவதில்லை;//
உண்மைதான் ஐயா. குறிப்பாக நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் சொற்கள் யோசிக்காமல் தானாக வந்து விழுந்தவைதான் :)
//மனத்தில் நினைவு வைத்துக் கொண்டு குழந்தைகளுக்காக
எழுதுவதற்கு வாழ்த்துக்கள்..//
பாப்பா பாட்டு எழுதுவதற்கு தூண்டுகோலே நீங்கள்தான். அதனாலேயே நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று விரும்பினேன். மறக்காமல் வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். :)
2nd version of the same song here:
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=OzrAHl_Zaqs
subbu rathinam
"video no longer available" னு வருது தாத்தா.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=OzrAHl_Zaqs
ReplyDeleteplease try again. Sometimes, if the latest adobe flash player is not installed, the yutube says like this.
subbu thatha
சூப்பர் தாத்தா. யானையோட பிளிறல் சத்தத்தோட கலக்கலா இருக்கு :)
ReplyDeleteபடிக்கும்போது நம்மைக் குழந்தையாகவே மாற்றும் எழுத்து. ரொம்ப நல்லாருக்கு.
ReplyDelete//வாகாய் உரிச்சுத் தின்னும் பாரு//
ஆமா.. யானை வாழைப்பழத் தோலை உரிச்சுதான் திங்குமா? :-)
//ஆமா.. யானை வாழைப்பழத் தோலை உரிச்சுதான் திங்குமா? :-)//
ReplyDeleteஇல்லையே, அப்படியே சாப்பிடும்! :))))))))))) அதுவும் குலையோட உள்ளே தள்ளும்!
வாங்க உழவன், கீதாம்மா :)
ReplyDeleteஇந்த கேள்வியை முந்தி கூட யாரோ கேட்டிருந்தாங்க :) பாவம் மன்னிச்சி விட்ட்டுருங்க. (என்னை! :)
//இல்லையே, அப்படியே சாப்பிடும்! :))))))))))) அதுவும் குலையோட உள்ளே தள்ளும்!//
ReplyDeleteகுலை நடுங்குது! :-))
//குலை நடுங்குது! :-))//
ReplyDeleteயாருக்கு????
//ஆனைப்பாகன்//
(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஆனைப்பாகன்னு பெருமையா சொல்லிக்கிறவங்களுக்கா??? :P:P:P:P:P
யாருக்கு? வாழைக்குதான்!
ReplyDeleteவாங்க திவாஜி, கீதாம்மா. ஆனைன்னாலே உங்களுக்கு குஷின்னு தெரியுமே :)
ReplyDelete//அதுவும் குலையோட உள்ளே தள்ளும்!//
பாப்பா (எழுதின) பாட்டெல்லாம் அப்படித்தான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்... :) கண்டுக்காதீங்க :)
பி.கு. இங்கே பாப்பான்னு சொன்னது, கீதாம்மா, உங்களை இல்லை :)
//வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு
ReplyDeleteவாகாய் உள்ளே தள்ளும் பாரு!//
அப்படின்னு மாத்திட்டேன்!
//பி.கு. இங்கே பாப்பான்னு சொன்னது, கீதாம்மா, உங்களை இல்லை :) //
ReplyDeleteஎல்லாரும் போட்டிக்கு வந்தா என்ன செய்யறது?? வலை உலகின் ஒரே பாப்பா நான் மட்டும்தான்! சரியா???? :P:P:P:P:P:P
யாருக்கு? வாழைக்குதான்//
ReplyDeleteநல்லா சமாளிப்பு! :P:P:P:P:P:P:P:P:P:P:P
////வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு
ReplyDeleteவாகாய் உள்ளே தள்ளும் பாரு!//
அப்படின்னு மாத்திட்டேன்! //
ஆஹா.. ஒரு வழியா உங்கள மாத்த வச்சிட்டாங்களா? :-)
இக்கவிதை இப்போது இன்னும் அழகு பெற்றுள்ளது.
//ஆஹா.. ஒரு வழியா உங்கள மாத்த வச்சிட்டாங்களா? :-)//
ReplyDeleteஆமா, இந்த (அ)நியாயம் எங்கேயாவது நடக்குமா? :)
//இக்கவிதை இப்போது இன்னும் அழகு பெற்றுள்ளது.//
நன்றி உழவன்.
//வலை உலகின் ஒரே பாப்பா நான் மட்டும்தான்! சரியா???? :P:P:P:P:P:P//
ReplyDeleteபோனாப் போவுதுன்னு அந்தப் பாப்பாக்கு இந்தப் பாப்பா விட்டுக் குடுத்திருச்சு :)
ஆனை உரிச்சு சாப்பிட்டதைக் கவனிக்க விட்டுட்டனே:))!
ReplyDelete//ஆனை உரிச்சு சாப்பிட்டதைக் கவனிக்க விட்டுட்டனே:))!//
ReplyDeleteமிஸ் பண்ணீட்டீங்க போங்க :) என்னோட குட்டி யானை என் முன்னாடி அப்படித்தான் சாப்பிடும். நான் சொன்னா யாருமே நம்பவே இல்லை :(