ஆயிரங் கண்ணுடையாள் – நெஞ்சின்
ஆலயத்தில் உறைவாள்!
சிங்கத்தின்மேல வருவாள் – அவள்
சிந்தையிலே நிறைவாள்!
(ஆயிரங்)
ஆயுதங்கள் தாங்கி – அவள்
ஆணவத்தை அழிப்பாள்!
அன்புதனைத் தாங்கி – அவள்
அன்னையாகி அருள்வாள்!
(ஆயிரங்)
அஞ்சேல் என்றுசொல்லி – அவள்
அபயம் தந்திடுவாள்!
நெஞ்சின் துயரையெல்லாம் – அவள்
பஞ்சுபஞ்சாய் எரிப்பாள்!
(ஆயிரங்)
பாதம்பற்றி அழுதால் – அவள்
பாவங்களைக் களைவாள்!
நம்பித்தினம் தொழுதால் – அவள்
நற்றுணையா யிருப்பாள்!
(ஆயிரங்)
--கவிநயா
தாங்கள் சொற்களைக் கையாண்டுள்ள விதம் என்னை மிகவும் கவர்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDelete//நம்பித்தினம் தொழுதால் – அவள்
ReplyDeleteநற்றுணையா யிருப்பாள்!
//
வழி மொழிகிறேன்.
சிங்கத்தின் மேல் வந்து நம் சிந்தனையிலே நிறைந்தவளை அருமையாகப் பாடியிருக்கிறீர்கள் கவிநயா!
ReplyDelete//தாங்கள் சொற்களைக் கையாண்டுள்ள விதம் என்னை மிகவும் கவர்கிறது. வாழ்த்துக்கள்.//
ReplyDeleteநன்றி அகரம்.அமுதா!
//வழி மொழிகிறேன்.//
ReplyDeleteவழி மொழிந்தமைக்கு நன்றி ஜீவா!
//சிங்கத்தின் மேல் வந்து நம் சிந்தனையிலே நிறைந்தவளை அருமையாகப் பாடியிருக்கிறீர்கள் கவிநயா!//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி!
அன்னையின் அன்பினை
ReplyDeleteஆயிரமாயிரம் அறிவாரல்லவோ !
ஒவ்வொரு வெள்ளியன்றும்
ஓராயிரம் நாமங்களால், தீபங்களால்,அவள் முன்னே நின்று
தாயே ! என் அன்னையே ! நீ
ஆயிரம் கண்ணுடையாள் என்று காலம் காலமாக
வழிபடும் சமயபுரம் மாரியம்மனை நீங்கள் வர்ணித்துப்
பாடியதே அவள் தந்த அருளாம்.
அந்தச் சக்தி ஸ்வரூபிணியை
சிம்ம வாஹினியை
கண்களுக்கு எதிரே பிரத்யக்ஷமாகப் பார்ப்பது போற்
தோன்றியது தங்கள் கவிதையைப்படிக்கும்போது,
இல்லை, பாடி மகிழும்போது.
எனக்கே உரிய பழக்கத்தில், இந்த பாடலுக்கு
பகுதாரி எனும் ராகத்தில் மெட்டு அமைத்திருக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=6e69pNPHQu0
ஆனால் ஒரு மேடம் கவி நயாவுக்கு ஒரு சர்ப்ரைஸ்.
நான் பாடவில்லை. (அப்பாடி, பிழைத்துக்கொண்டோம் என்கிறீர்களா ?)
என் வீட்டுக் கிழவியும் பாடவில்லை. ( double thanks )
எங்கள் மருமகள் பாடியிருக்கிறாள்.
கேட்டு மகிழுங்கள்.
ராகம் : பகுதாரி.
நீங்கள் எல்லோரும் தத்தம் வீடுகளில் தினம் தினம்
மாலையில் விளக்கு ஏற்றி வைத்துப் பாட மிகவும்
உகந்தது மட்டும் அல்ல, உயர்ந்தது இந்தப்பாடல்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
மேடம் கவி நயா அவர்களின் பதிவுக்கு
ReplyDeleteவரும் எல்லோரும்
இப்பாடலைக் கேட்பதுடன்
தாமும் இப்பாடலை இதே மெட்டில் பாடி
அன்னையின் அருளைப் பெற
வேண்டும். இது இந்தக் கிழவனின்
அன்பு வேண்டுகோள்.
http://www.youtube.com/watch?v=6e69pNPHQu0
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
//எங்கள் மருமகள் பாடியிருக்கிறாள்.
ReplyDeleteகேட்டு மகிழுங்கள்.
ராகம் : பகுதாரி.//
கேட்டேன்.. கண் கலங்கினேன்.. மிக மகிழ்ந்தேன், ஐயா! மருமகளுக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அவர்கள் குரல், அடடா, எவ்வளவு இனிமை! நானும் (பாட வருகிறதோ, இல்லையோ :), இந்த ராகத்தில் பாடிப் பழகிக் கொள்ளப் போகிறேன்.
//மேடம் கவி நயா அவர்களின் பதிவுக்கு வரும் எல்லோரும் இப்பாடலைக் கேட்பதுடன் தாமும் இப்பாடலை இதே மெட்டில் பாடி அன்னையின் அருளைப் பெற வேண்டும்.//
மீண்டும் நன்றி ஐயா. ஆனால் என்னைப் போய் நீங்கள் மேடம் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்... :)
அருமையான பாடல் மேடம்!
ReplyDelete//நம்பித்தினம் தொழுதால் – அவள்
நற்றுணையா யிருப்பாள்!
//
நிச்சயமாக!
//அருமையான பாடல் மேடம்!//
ReplyDeleteஅச்சோ, மேடம் வேண்டாமே, சிபி. அக்கான்னே சொல்லுங்க :) பாடலை ரசிச்சதுக்கு நன்றி!
மேடம்னு சொன்னதே உங்களைக் கலாய்ப்பதற்குத்தான் மேடம்!
ReplyDeleteஜூப்பருங்க கவிக்கா...
ReplyDeleteபாடலும் வரிகளும் அருமை
ReplyDelete//மேடம்னு சொன்னதே உங்களைக் கலாய்ப்பதற்குத்தான் மேடம்!//
ReplyDeleteஅப்படிங்களா சார்! சரி சரி.. :)
//ஜூப்பருங்க கவிக்கா...//
ReplyDeleteவாங்க மௌலி! உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம். நன்றி!
//பாடலும் வரிகளும் அருமை//
ReplyDeleteரொம்ப நன்றி, திகழ்மிளிர்!
//
ReplyDeleteஅப்படிங்களா சார்! //
தம்பியைப் போய் சார்னு சொல்லலாமா அக்கா மேடம்!
//தம்பியைப் போய் சார்னு சொல்லலாமா அக்கா மேடம்!//
ReplyDeleteஎனக்கும் (கொஞ்சம் கொஞ்சம்) கலாய்க்கத் தெரியும், தம்பி சார் :)
//கேட்டேன்.. கண் கலங்கினேன்.. மிக மகிழ்ந்தேன், ஐயா! //
ReplyDeleteஇருக்காதா பின்னே. கொடுத்து வைத்தவர் நீங்கள் கவிநயா. தங்கள் பாடலை அத்தனை அழகாகப் பாடி உயிர் கொடுத்திருக்கிறார்கள்!
[என் வீட்டுத் திண்ணையிலேயே 3 நாட்கள் தங்கியிருந்து என்னைப் பெருமை படுத்திய மீனாட்சி பாட்டி சொன்னதின் பேரில் நானும் இப்பாடலைக் கேட்டு ரசிக்கும் பாக்கியம் கிடைத்தது.]
//கொடுத்து வைத்தவர் நீங்கள் கவிநயா. தங்கள் பாடலை அத்தனை அழகாகப் பாடி உயிர் கொடுத்திருக்கிறார்கள்!//
ReplyDeleteஉண்மைதான் ராமலக்ஷ்மி. நன்றி.
நானும் இந்தப் பாடலைப் பாடிப் பார்த்தேன் அக்கா. சுப்பு ஐயா கொடுத்திருக்கும் இணைப்பைப் பார்த்து அந்த வகையிலும் பாடிப் பழகுகிறேன். :-)
ReplyDeleteஇந்தப் பாடலைப் படித்ததை விடப் பாடிக் கேட்கும் போது இன்னும் உருக்குகிறது. அருமை. பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் நன்றிகள்.
ReplyDelete//இந்தப் பாடலைப் படித்ததை விடப் பாடிக் கேட்கும் போது இன்னும் உருக்குகிறது.//
ReplyDeleteஉண்மைதான் குமரா. நன்றி, உங்களுக்கும் பாடகிக்கும் :)
பாடல் அருமையாக உள்ளது...
ReplyDelete//பாடல் அருமையாக உள்ளது...//
ReplyDeleteநல்வரவு ரமேஷ்! மிக்க நன்றி.