(முதல் பகுதி இங்கே; ரெண்டாம் பகுதி இங்கே; மூன்றாம் பகுதி இங்கே)
இன்னக்கி அவர்ட்ட சொல்லப் போறேன். எப்பிடித்தான் சொல்லப் போறேன்னு தெரியல. மனசு கெடந்து தவிக்குது. தேவியும் எங்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டா. எங்கப்பா கூட சொல்லிட்டாரு. நாந்தான் யாரு சொன்னதயும் கேக்கல.
மழை வேற கொட்டு கொட்டுன்னு கொட்டுது. “இத்தன மழையில போய் இன்னக்கு சொல்லாட்டி என்னடி? நாளக்கி போயேன்”, அப்பிடிங்கிறாங்க அம்மா. ஆனா என்னால முடியாது. எவ்வளவு சீக்கிரம் சொல்றனோ அவ்வளவுக்கு நல்லதுன்னு தோணிப் போச்சு.
அன்னக்கு அவரு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சதுமே எனக்கு கணக்கு மேல காதல் வந்திருச்சு. கணக்கு மேலயா, இல்ல…. ம்… அத அப்பறம் பாக்கலாம். என்ன அருமையா, பொறுமையா சொல்லித் தந்தாரு. நான் மொத நா நெனச்சது போலவே அவருக்கு கோவமே வரதில்ல. எவ்வளவு முட்டாள்தனமா கேட்டாலும் கோவிச்சுக்காம சின்னப் புள்ளக்கி சொல்ற மாதிரி எதமா பதமா சொல்லுவாரு. மொகத்துல இருக்க அந்த புன்னகை மாறுனதே இல்ல. அவர எனக்கு ரொம்பவே புடிச்சிருச்சு.
ஒரு தரம் தீபாவளிக்கு மறு நாள் ட்யூஷன் இருந்துச்சு. எங்கம்மா “இத கொண்டு போய் உங்க வாத்தியாருக்கு குடுடி”ன்னு சொல்லி பலகாரமெல்லாம் நெறய பாக் பண்ணி தந்தாங்க. நானும் தீபாவளிக்கு எடுத்த என்னோட அழகான புத்தம் புது பாவாட தாவணிய கட்டிக்கிட்டு போனேன். தேவி வீட்டுக்குள்ள இருந்தா போல. இவரு மட்டும் ஹால்ல இருந்தாரு. அவருக்கு வணக்கம் சொல்லிட்டு, எங்கம்மா குடுத்தாங்கன்னு சொல்லி பலகாரத்தக் குடுத்தேன். என்னய பாத்துக்கிட்டே அத வாங்கிக்கிட்டாரு. பெறகு, “புது ட்ரஸ்ஸா. நல்லா இருக்கு”,ன்னு சொன்னாரு. என்ன தோணுச்சோ எனக்கு, நாம்பாட்டுக்கு லூசு மாதிரி அழ ஆரம்பிச்சிட்டேன்.
“என்னங்க நீங்க? எதுக்கு அழறீங்க? எதும் தப்பா சொல்லிட்டனா? ரொம்ப ஸாரிங்க, அழாதீங்க”,ன்னு அவரு ரொம்பவே பதறிட்டாரு. அப்ப யாரோ வர்ற சத்தம் கேக்கவும், நான் கண்ணத் தொடச்சுக்கிட்டு சமாளிச்சுக்கிட்டேன். அப்பறமா நெனச்சுப் பாத்தேன்… அவரு பாக்கணும்னுதான அதக் கட்டிக்கிட்டுப் போனேன். பின்ன எதுக்கு அழுவணும்? அவரு என்னயப் பாத்ததையும் சொன்னதையும் நெனச்சுக்கிட்டே இருந்தேன். அவர் அப்பிடிச் சொன்னதுனால ஏற்பட்ட சந்தோஷத்துலதான் அழுதிட்டேன்னு தோணுச்சு. அது ஒண்ணுதான் அவரு எங்கிட்ட கொஞ்சம் பெர்ஸனலா பேசினது.
அவரும் நானும் எப்பவும் கணக்கும் பொதுவா சில வார்த்தைகளும் தவிர வேற எதுவும் பேசிக்கிட்டதில்ல. இருந்தாலும் அவர்கிட்ட நான் ரொம்ப நெருக்கமா உணர ஆரம்பிச்சிட்டேன். அவர் மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியுது. ஆனா இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு பயம் வந்திருச்சு இப்ப. அவரு மொகத்தக் கூட பாக்காம என்னய நம்பிக்கையோட ட்யூஷனுக்கு அனுப்பி வச்ச எங்க அம்மா அப்பாவ நெனச்சு பாக்கிறேன். காதல் கீதல்னு விழுந்துருவேன்னு அவங்கல்லாம் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டாங்க. அதுவும் இந்த வயசுல! ஆனா இப்பிடியே இவர்கூட பேசி பழகினா அது எங்க கொண்டு போய் விடுமோ. எம்மேல எனக்கே நம்பிக்கை இல்ல. அம்மா அப்பா நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கைய சிதைக்கணுமா. இப்பிடில்லாம் யோசிக்கிறேன். அவர பாக்காம இருக்கத நெனச்சாலும் தாங்க முடியல. அவருக்கு எம்மேல பிரியம் இருக்கா என்னனும் தெரியல. தெரிஞ்சு என்ன ஆகப் போகுது. இதுக்கு மேல வளர விட்டா தப்புன்னு மட்டும் தோணுது. அதனாலதான் இந்த முடிவு எடுத்தேன்.
அதான், இன்னக்கி சொல்லப் போறேன், இனிமே ட்யூஷனுக்கு வரலன்னு.
அப்பாகிட்ட, “இப்ப அடிப்படையெல்லாம் புரிஞ்சிருச்சுப்பா. நானா படிச்சுக்கிறேன். ட்யூஷனுக்கு போயிட்டு வரதிலயே நெறய நேரம் போயிருது. மத்ததும் படிக்கணும்ல”,ன்னு சொல்றேன். அப்பாவும் மொதல்ல கொஞ்சம் தயங்குனாலும், என்னோட மார்க்கெல்லாம் பாத்துட்டு இதுக்கு ஒத்துக்கிட்டாரு.
இதோ அவரு வந்துட்டாரு. “இனிமே நான் ட்யூஷனுக்கு வர மாட்டேங்க. இது வரைக்கும் சொல்லிக் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. ஒங்ககிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்”, ன்னு சொல்றேன். அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல. தரையப் பாத்துக்கிட்டே எப்பிடியோ சொல்லி முடிச்சிட்டு நிமிந்து அவர பாக்குறேன். அவரு எப்பவும் போல அவருக்கே உரிய நிதானத்தோட இருக்காரு. ஏன் என்னன்னெல்லாம் கேக்கல. ஆனா என்னயவே குறுகுறுன்னு ரொம்ப நேரம் பாக்குறாரு. “அப்பிடியா. சரிங்க. எக்ஸாமுக்கு ஆல் தெ பெஸ்ட்.. நல்லா பண்ணுங்க. நாந்தான் ஒங்கள மிஸ் பண்ணுவேன்”, அப்பிடிங்கிறாரு. அதுக்கு என்ன அர்த்தமோ? அவருக்கும் கடவுளுக்கும்தான் தெரியும்.
அதான் நான் அவர கடைசியா பாத்தது.
(தொடரும்)
--கவிநயா
இந்தக் கதையை படிக்கிற பெண்ணை பெற்ற தமிநாட்டு அப்பாக்களுக்கு " அப்படா நிம்மதி".
ReplyDeleteபெரியவங்க பார்த்து முடிக்க இரூக்கும் கல்யனத்திற்காகதான் நம் கதாநாயகி மது அலங்காரம் >>>>>>>>>
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
அதான் நான் அவர கடைசியா பாத்தது.//
ReplyDeleteகடைசின்னு சொன்னா அன்னிக்கு கடைசியா ?
இல்ல எப்பைக்குமே கடைசியா ?
அடுத்து இப்படி இருக்குமோ?
********************************************************************
மதுவுக்கு ஒரு நல்ல இடத்துலே கலியாணமாயி சந்தோசமா
25 வருசம் ஓடிப்போச்சு. இப்ப மதுவோட கணவர் ஒரு பெரிய கம்பெனிலே ஸி.ஈ.ஓ.
ஒரு மகன், ஒரு மகள். மகன் பி.இ. முடிச்சுட்டு
ஸ்டேட்ஸ் போனவன் அங்கேயே க்ரீன் கார்டு வாங்கிட்டு செட்டிலாகபோறான்.
மகள் சீ.ஏ. ஃபைனல் இயர் முடிச்சுட்டு பிராஜக்ட் ஒரு கம்பெனிலே பண்ணிக்கிட்டு
இருக்கா.
டிரிங்.. டிரிங்.. ஸெல் போன் ! மது எடுக்கிறாள். " என்னது ! சாதாரணமா
இவரு, காலைலே போனா வரவரைக்கும் பேசமாட்டாரே ! இன்னிக்கு என்ன
அதிசயமா இருக்குன்னு " நினைச்சுக்கிட்டு செல் போனை காதில் வச்சுக்கிறா.
மது ! நான் தான் பேசறேன். என்னோட ஃப்ரன்ட் எங்க கம்பெனி ஆடிட்டர்
அவரைக்கூட்டிட்டு நான் 6 மணிக்கு வரேன். ஜஸ்ட் உனக்கு அட்வான்ஸ்
இன்ஃபர்மேஷன்.
என்ன விசயம் ! ஏதாவது பொண் கேட்டு வராகளா ! என்றேன்.
நான் வந்து சொல்றேன். என்று டப் என்று போனை கட் செய்கிறார்.
ஆமாம், தினத்துக்கும்தான் ஒரு ஃப்ரன்டு வராரு, இன்னிக்கு என்ன அதிசயமோ
ஃஃபோன் பண்றத்துக்குன்னு நினைச்சுக்கிறேன்.
மாலை .. கரெக்டா 6 மணி ஆவுது. யாரும் வந்த பாடில்லை. 6.15, 6.30, 6.45,
7.00 மணி ஆவும்போது தான் காரேஜிலே கார் வந்து நிக்கிர சத்தம் கேட்குது.
வந்துட்டாங்க போலன்னு நினைச்சுக்கிறேன். அப்படியே சோபா, டைனிங்
டேபிள் எல்லாம் சுத்தமா இருக்கான்னு ஒரு நோட்டம் விட்டுகிட்டு பின்
வாசக்கதவைத் திறந்தா ... !!
இவரு மட்டும் நிக்கிறாரு !
என்னங்க ! ஏதோ ஃப்ரென்டு வர்றதாகச் சொன்னீங்களேன்னு கேட்கிறேன்.
திடீரென்னு ஆபீசுலே அர்ஜென்ட் சமாசாரமாம். நாளைக்கு வரேன்னு சொல்லிப்போட்டார்.
என்கிறார்.
சரி, காபி கொண்டு வரேன்னு உள்ளே போய்,
சூடா காபி ( பாதி சக்கரை தான் அவருக்கு ) கொண்டு வரேன்.
' என்ன மது ! என்ன விசயம்னு கேட்கலையே "
பாதி இன்டரஸ்ட் கூட இல்லை எனக்கு நிசமா. ஆனாலும்
' என்ன விசயம் ? "ன்னு கேட்கிறேன்.
இதப்பாரு அப்படின்னு ஒரு ஃபோட்டோ வை க் காட்டுறார்.
தூக்கி வாரி ப்போட்டது. என்னது !! இது எப்படி ! இது எப்படி !!
ஒரே அதிர்ச்சி ! கடவுளே ! 25 வருசம் கழிச்சு என்ன இது சோதனை !
ஒரு கலக்கம்
" என்ன மது ! மலைச்சுப்போய் நின்னுட்டே ! பையன் அழகா
இருக்கானா பாரு ! நம்ம ராதுக்கு வந்திருக்கு. "
" அப்படியா ! " மூச்சு வந்தது. என்ன ஒரு அற்புதம். பையன் அதே அதே அதே
25 வருசம் முன்னாடி ட்யுசன் சொல்லிக்கொடுத்த அவரோட அதே சாடை
அதே சுருள் முடி. அது மட்டுமல்ல, சந்தன கலர் பேன்ட், ரோஸ் கலர் சட்டை.
"நம்ம பொண்ணு ப்ராஜக்ட் பன்ற இடத்துலே பாத்தாகளாம். ரொம்ப புடிச்சுப்
போயிடுச்சாம். நாந்தான் பொண்ணோட அப்பான்னு தெரிஞ்சோன்ன இன்னும் சந்தோசமாயிடுச்சாம்".
தட்டு மாத்திக்க தயாரா இருக்காரு. என்ன சொல்றே " ஏதோ சொல்லிக்கிண்டே போறாரு.
எதுவுமே காதில் விழவில்லை.
**************************************************************
மீ. பா.
தஞ்சை.
அடடே முதல் முறையா கதைல இப்படி பண்ணிட்டீங்களே..அன்னிக்கி சொன்ன மாதிரி நல்லாக் கொண்டுபோயிடுங்கப்பா..பாவம் நீங்க சொன்ன விவரம் எல்லாம் கேட்டு எனக்கே அந்த டியூசன் சார் மேல ஒரு கரிசனம் வந்துருச்சு.
ReplyDeleteநீங்க முதல் முறையா தொடர் போடறேன்னு சொல்றீங்க ஆனா இன்னிக்கி வெச்சிருக்கீங்க பாருங்க சஸ்பென்ஸு அது டாப்பு...தொடர்ந்து கலக்குங்க :))
//ஏன் என்னன்னெல்லாம் கேக்கல. ஆனா என்னயவே குறுகுறுன்னு ரொம்ப நேரம் பாக்குறாரு//
ReplyDelete"அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல"-ன்னு சொன்னவங்க, எப்பிடி இதை மட்டும் பாத்தாங்களாம்? :))))
//அதான் நான் அவர கடைசியா பாத்தது.//
ReplyDeleteஅடடா!
பாட்டி கவிநயாவோடு நீங்களும்ல கலக்குறீங்க:)!
//இந்தக் கதையை படிக்கிற பெண்ணை பெற்ற தமிநாட்டு அப்பாக்களுக்கு " அப்படா நிம்மதி". //
ReplyDelete:)) தவறாம கதையப் படிக்கிற உங்களுக்கு நன்றி விஜய்.
//அடுத்து இப்படி இருக்குமோ?//
ReplyDeleteஆஹா, பாட்டீ! சூப்பரா கதை பண்ணறீங்க! இப்படியும் இருக்கலாம்.. யாரு கண்டா?
//நீங்க சொன்ன விவரம் எல்லாம் கேட்டு எனக்கே அந்த டியூசன் சார் மேல ஒரு கரிசனம் வந்துருச்சு.//
ReplyDeleteஎன்ன அநியாயம்! மது மேல உங்களுக்கு கரிசனமே வரலயா ரம்யா? அவர்மேலதான் வந்ததா? ஹ்ம்... :))
நீங்க உடனுக்குடன் தரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி ரம்யா!
//"அவரு கண்ணப் பாக்க தைரியமில்ல"-ன்னு சொன்னவங்க, எப்பிடி இதை மட்டும் பாத்தாங்களாம்? :))))//
ReplyDeleteநீங்க இப்பிடி டெக்னிகல் டவுட்டெல்லாம் கேக்கலாமா கண்ணா :)) மதுவே உங்களுக்கு பதில் சொல்றா பாருங்க:
அவர்கிட்ட விஷயத்த சொல்லும்போது மட்டுந்தான் தரையப் பாத்தேன். மத்தபடி அவர பாத்தும் பாக்காம பாத்துக்கிட்டுதான இருந்தேன். அதோட உங்கள யாராச்சும் அப்பிடி ரொம்ப நேரம் பாத்தா நீங்க நேருக்கு நேர் பாக்காட்டியும் அது உங்க உணர்வுல தெரியுங்கண்ணா... - மது :))
//பாட்டி கவிநயாவோடு நீங்களும்ல கலக்குறீங்க:)!//
ReplyDeleteஉண்மைதான் ராமலக்ஷ்மி :)
பகுதி 5 சுடச் சுட ரெடி!
ReplyDeleteபகுதி 4 படிச்சாச்சு. :-)
ReplyDelete