Saturday, July 26, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 3

(முதல் பகுதி இங்கே; ரெண்டாம் பகுதி இங்கே)

அன்னக்கு அவர பாத்ததுல இருந்து அவரு ஞாபகமாவே இருந்துச்சு. அவர் மொகமும் கண்ணும் எங்கண்ணயும் மனசயும் விட்டு அகலவே இல்ல. அவரு மேல மோதினதையும் அவரு சிரிச்சிக்கிட்டே சொன்னதயும் மனசுக்குள்ள திருப்பித் திருப்பி ஓட்டிப் பாத்துக்கிட்டே இருந்தேன். இன்னொரு முறை அவர எங்கயாச்சும் பாக்க மாட்டமான்னு ஒரே ஏக்கமா இருந்துச்சு. கூடவே, இது என்ன பைத்தியம்னு எனக்கே தோணுச்சு. இவ்ளோ பெரீய்ய்ய சென்னையில அவர எங்க பார்க்க முடியும். அவரு யாரு, என்ன பேருன்னு ஒரு மண்ணும் தெரியாது. அவரு சென்னைதானான்னு கூட தெரியாது. இப்பிடி இருக்கும்போது அவரையே நெனச்சுக்கிட்டு இருக்கேனேன்னு எனக்கே எம்மேலயே கோவமாவும் வந்தது.

அப்ப நான் ப்ள்ஸ் டூ படிச்சிக்கிட்டிருந்தேன். கணக்குல கொஞ்சம் வீக்கு நானு. என் அப்பாவுக்கு சொல்லிக் குடுக்க நேரம் இல்ல. ட்யூஷன் டீச்சர் கெடைப்பாங்களான்னு பாத்துக்கிட்டிருந்தோம். அப்பதான் என் ஃப்ரெண்டு தேவி வந்து எங்கப்பாகிட்ட சொன்னா…”அங்கிள், என் அண்ணனோட ஃப்ரெண்டு ஒருத்தரு ரொம்ப நல்லா மாத்ஸ் போடுவாரு. அவரு எனக்கு சொல்லித் தரேன்னு சொல்லியிருக்காரு. மதுவும் என்கூட வரட்டுமா அங்கிள்”ன்னு கேட்டா. உடனே எங்கப்பாவும், “ சரிம்மா. நீ போய்ப் பார்த்துட்டு வா”ன்னு சொல்லிட்டாரு.

அந்த சனிக்கெழம நான் தேவிகூட அவ வீட்டுக்கு போனேன். அன்னக்குதான் ட்யூஷன் ஆரம்பம். அவ அண்ணன் ராஜா வெளில கெளம்பிக்கிட்டிருந்தான். (அவ அவனை அவன், இவன்னு சொல்லி, எனக்கும் அப்பிடியே வந்துருச்சு).

“ஹாய் மது. போங்க போங்க. சுந்தர் உள்ளதான் இருக்கான்”, அப்பிடின்னு சொல்லிட்டு போனான்.

ஹால்ல உக்கார்ந்திருந்த அவரப் பாத்ததும் என் இதயம் ஒரு நிமிஷம் நின்னே போச்சு! பின்ன, இத்தன நாளும் என்னோட நெனப்புல இருந்த அதே மொகத்த நேர்ல பாத்தா… அவரேதான் இவரு. இவரேதான் அவரு… யப்பா. என் சந்தோஷத்த சொல்லி முடியாது!

“சுந்தரண்ணா. இவதான் மது. நாங்க ரெண்டு பேரும் உங்க ஸ்டூடண்ட்ஸ் இனிமே”, சிரிச்சுக்கிட்டே அவர்ட்ட என்னய அறிமுகம் பண்ணி வச்சா, தேவி.

“அப்பாடா. அண்ணான்னு சொல்லிட்டா!”, அப்பிடின்னு நிம்மதியாச்சு மனசு. நான் என்னமோ அவர அண்ணான்னு கூப்புடறதா இல்ல!

“ஹலோ”, அப்படின்னேன் மெதுவா, அவர பாத்தும் பாக்காம.

“ஹலோ. வணக்கங்க. நீங்கதானா…”, அப்பிடின்னு சொல்லிச் சிரிச்சாரு. அதே வெள்ளச் சிரிப்பு. மனச அள்ளிக்கிட்டு போற சிரிப்பு. அவருக்கு என்னய நெனப்பிருக்கோ என்னமோன்னு நெனச்சுக்கிட்டேன்.

“அன்னக்கு சுத்துப் புறம் தெரியாம பில்ல ரொம்ப கவனமா பாத்துக்கிட்டு வந்த மாதிரியே பாடத்தையும் கவனமாக் கேட்டுக்குவீங்கதானே”ன்னு சொன்னாரு.

அப்பிடி ஒரு சந்தோஷம் எனக்கு! மனசு கன்னா பின்னான்னு துள்ளிக் குதிச்சுச்சு! என்னய நெனவு வச்சிருக்காரே! உதட்டில ஒரு கள்ளப் புன்னகை வந்து ஒட்டிக்கிச்சு…தேவிதான் என்னய ஒரு மாதிரி பாத்தா. சரி சரி, ஒன்னய அப்பறம் வச்சுக்கறேங்கிற மாதிரி என்னயப் பாத்துட்டு, போய் மாத்ஸ் புத்தகத்த எடுத்துக்கிட்டு வந்தா…

(தொடரும்)

--கவிநயா

12 comments:

  1. நல்லா போய்க்கிட்டிருக்கு. ஆனா தொடர்ச்சி கொஞ்சம் உதைக்குது. +2ல விட ஆரம்பிச்ச ஜொல்லு காலேஜ் முடிக்கறவரை போகுதா(ஏன் போகக்கூடாதான்றீங்களா - அதுவும் சரிதான்)

    ReplyDelete
  2. அடுத்து என்ன?
    கதை சுவரசியம் 1...2...3.. கூடிக் கொண்டே போகிறதே?

    வாழ்த்துக்கள்.

    திவிஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  3. வாங்க நாகு. முழுசையும் படிச்சாதான் உதைக்குதா இல்லையான்னு தெரியும்..

    //+2ல விட ஆரம்பிச்ச ஜொல்லு//

    ச்சே! இப்படிக் கேவலப்படுத்திடீங்க :( இனி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல :(

    ReplyDelete
  4. //அடுத்து என்ன?
    கதை சுவரசியம் 1...2...3.. கூடிக் கொண்டே போகிறதே?//

    அவ்ளோதாங்க விஜய். இன்னும் ரெண்டு (அ. மூணு)பகுதிதான்.. ரசிச்சதுக்கு நன்றி!

    ReplyDelete
  5. ஜூப்பரு..நல்லா போகுது...இப்படியே எல்லா பாகத்தையும் சீக்கிரமா போடுங்க கவிநயா...

    ReplyDelete
  6. வாங்க ரம்யா!

    //ஜூப்பரு..நல்லா போகுது...இப்படியே எல்லா பாகத்தையும் சீக்கிரமா போடுங்க கவிநயா...//

    ஆஹா. உங்க ஆர்வத்தைப் பாத்து சந்தோஷமா இருக்கு :) ரெண்டு நாளுக்குள்ள முடிச்சிர்றேன்...

    ReplyDelete
  7. //
    மனச அள்ளிக்கிட்டு போற சிரிப்பு. அவருக்கு என்னய நெனப்பிருக்கோ //

    அடுத்து வருவது
    மோஹனமா ? முகாரியா ?

    மீ. பா.
    தஞ்சை.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  8. //அடுத்து வருவது
    மோஹனமா ? முகாரியா ?//

    கூடிய சீக்கிரம் தெரிஞ்சிரும் பாட்டீ :)

    ReplyDelete
  9. பகுதி 4 போட்டாச்சு!

    ReplyDelete
  10. மீரா(மது)வின் கண்ணன் ட்யூஷன் மாஸ்டரா அவதரித்து விட்டாரா, பலே.
    இதோ வ்ருகிறேன் பகுதி நாலுக்கு.

    ReplyDelete
  11. நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  12. பகுதி 3 படிச்சாச்சு. :-)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)