Friday, July 25, 2008

கண்ணனுக்குத் தந்த உள்ளம்... 2

(முதல் பகுதி இங்கே...)

“மது…எழுந்திருடி… மணி ஏழாகப் போகுது. இன்னும் என்ன தூக்கம்? நாளைக்கே கல்யாணம் ஆச்சுன்னா, மாமியார்காரி வந்து என்ன இப்பிடிப் பொண்ண வளத்து வச்சிருக்கீங்கன்னு என்னயத்தான் திட்டுவா…”, அம்மா காலைல வேலயோட வேலயா வழக்கமான சுப்ரபாதத்தோட என்னய எழுப்புறாங்க.

ஆனா நான் எப்பவோ எந்திரிச்சுட்டேன். ம்… தூங்கினாதான எந்திரிக்கிறதுக்கு. ராத்திரி பூரா தூக்கமே இல்ல. மனசு பூரா பூரான் ஓடுற மாதிரி இருக்குது. சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம என்னமோ ஒரு சங்கடம் வயத்தப் பெசயுது. என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியல.

நேத்துதான் எனக்கு பரீட்சையெல்லாம் முடிஞ்சது. பாஸ் பண்ணிட்டேன்னா நானும் ஒரு இன்ஜினியர்னு சொல்லிக்கலாம். இன்னக்கி ஃப்ரெண்ட்ஸோட சேந்து பெரிய ஊர் சுத்தல் ப்ளான் பண்ணியிருக்கோம். எட்டர மணிக்கு ரெடியாகணும். என் பெஸ்ட் ஃப்ரெண்டு தேவி வந்தோன்ன ரெண்டு பேரும் சேர்ந்து காலேஜ் வாசல்ல மத்தவங்கள மீட் பண்ணறதா இருக்கோம். ஆனா என் மனசெல்லாம் அதுல இல்ல. வேற எங்கயோ இருக்கு.

“மதூஊஊஊ…. உன் ஃப்ரெண்டு காலங்காத்தால ரெண்டு தரம் ஃபோன் பண்ணிட்டா… எந்திரிடி!!!”, வந்துட்டாங்க எங்க வீட்டு சின்ன மகாராணி. என் அருமத் தங்கச்சி கவிதாவத்தான் சொல்லுறேன்.

சரிதான்.. இனியும் படுத்துக் கெடக்க முடியாதுன்னு தீர்மானிச்சு எந்திரிக்கிறேன். விறுவிறுன்னு காலை வேலையெல்லாம் முடிச்சுட்டு, தேவியக் கூப்புட்டு, “என்னடி விஷயம்”னு கேட்டா, அவ, “என்ன ட்ரஸ்டி போட்டுக்க போற இன்னக்கு?”, அப்பிடின்னு கேக்கறா! என்னமோ உலக சமாதானப் பிரச்சனை மாதிரி!

“ஏதோ ஒண்ணு. அதெல்லாம் யாரு யோசிச்சா?”, சலிச்சுக்கிட்டே சுவாரஸ்யமில்லாம சொல்லுறேன்.

“ஏய், என்னடி ஆச்சு ஒனக்கு? நானும் ஒரு வாரமா பாக்குறேன், சுரத்தே இல்லாம இருக்க. உன் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு பேரு, என்கிட்டயும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிற” ன்னு திட்டுறா அவ.

“அப்பிடில்லாம் ஒண்ணும் இல்லடி.. சரி, நீ சொல்லு. என்ன ட்ரஸ் போடலாம்? சேல கட்டுவமா?” ன்னு கேக்கறேன்.

சேல கட்டுறதுதான் இப்பல்லாம் ரொம்ப ஸ்பெஷல். கொஞ்சம் பெரியவங்களே இப்பல்லாம் சேலை கட்டுறது அபூர்வமா இருக்கு. அதுனால இன்னக்கி மத்தவங்களும் சேலதான் கட்டுவாங்கன்னு நெனக்கிறேன். ஆனா எனக்கு சேல கட்டிக்கதான் ரொம்பப் புடிக்கும். சேலதான் இந்த ஒலகத்துலயே அழகான ட்ரஸ்ஸுன்னு நெனப்பு எனக்கு.

“ஓஹோ. ஆமாமா. ஒன்னய நாளைக்கி பொண்ணு பாக்க வராங்கள்ல? அதுக்கு இன்னக்கி ப்ராக்டிஸா?”அப்பிடின்னு கேட்டு கலகலன்னு சிரிக்கிறா தேவி.

அவளோட சேந்து என்னால சிரிக்க முடியல.

(தொடரும்)

--கவிநயா

13 comments:

 1. நெல்லை தமிழ் மணத்துடன் பகுதி இரண்டு அருமை.

  தி.விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 2. அட்ரா சக்கை..சக்க போடு போடுது கவிநயா..தூள் கெளப்புங்க..என்ன அவரு தான் பொண்ணு பாக்க வராரோ??

  ReplyDelete
 3. //நெல்லை தமிழ் மணத்துடன் பகுதி இரண்டு அருமை.//

  நன்றி விஜய்.

  ReplyDelete
 4. வாங்க ரம்யா...

  //சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம என்னமோ ஒரு சங்கடம் வயத்தப் பெசயுது.//
  //அவளோட சேந்து என்னால சிரிக்க முடியல.//

  இப்பிடில்லாம் மது சொல்றதப் பாத்தா நீங்க சொன்ன மாதிரி இருக்குமான்னு சந்தேகமா இருக்கு.. எதுக்கும் அவகிட்ட கேட்டுச் சொல்றேன் :)

  ReplyDelete
 5. //ஆனா எனக்கு சேல கட்டிக்கதான் ரொம்பப் புடிக்கும். சேலதான் இந்த ஒலகத்துலயே அழகான ட்ரஸ்ஸுன்னு நெனப்பு எனக்கு//

  அது என்ன "எனக்கு"?
  எங்க எல்லாருக்கும் தான்!

  next part please....
  no juspense allowed...

  ReplyDelete
 6. மனதைத் தொலைத்து தடுமாறும் மதுவின் மனநிலையை அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.

  //எதுக்கும் அவகிட்ட கேட்டுச் சொல்றேன் :)//

  கேட்டுத்தான் சொல்வீர்களா:)), சரி!

  [அட, நெல்லைப் பக்கமா நீங்க..?]

  ReplyDelete
 7. அட, நம்ம கண்ணனா! வருக வருக!! திடீர்னு 2-ம் பாகத்துல வந்து தரிசனம் தந்திருக்கீங்க? முதல் பகுதி படிச்சாச்சா? :)

  //அது என்ன "எனக்கு"?
  எங்க எல்லாருக்கும் தான்!//

  ஆஹா. அப்படின்னா ரொம்ப மகிழ்ச்சிதான் :))

  //next part please....
  no juspense allowed...//

  வருது, வருது... வந்துகிட்டே இருக்கு...:)

  ReplyDelete
 8. கலக்கல் கவிநயா... குறுந்தொடர்தான்... அதுக்காக இம்புட்டு குறு வாவா இருக்கனும்?? :))

  //நெல்லை தமிழ் மணத்துடன் பகுதி இரண்டு அருமை.//

  நெல்லை தமிழ்??? நீங்களும் நெல்லை சீமையா??

  ReplyDelete
 9. 3-ம் பகுதி போட்டாச்சு :)

  ReplyDelete
 10. வருக ராமலக்ஷ்மி.

  மதுரைப் பக்கம் சில வருஷம்; அப்புறம் அந்தப் பக்கம், இந்தப் பக்கம், இப்படி.. :) யாதும் ஊரே யாவரும் கேளிர்.

  ReplyDelete
 11. //கலக்கல் கவிநயா... குறுந்தொடர்தான்... அதுக்காக இம்புட்டு குறு வாவா இருக்கனும்?? :))//

  நல்வரவு ஜி! ரசித்ததற்கு நன்றி!

  இப்பதாம்ப்பா முதல் முதலா ஒரு தொடர் எழுதறேன். அதுவும் குறுந்தொடர்.. ஒரு பதிவுக்கு எவ்ளோ எழுதணும், எங்க நிறுத்தணும், இதெல்லாம் இன்னும் தெளிவா இல்ல. கொஞ்சம் குறைகளைப் பொறுத்துக்கோங்க.. போகப் போகச் சரியாயிடும் (அப்படின்னு நம்புவோம்; வேற வழி? :)

  ReplyDelete
 12. பகுதி 4 போட்டாச்சு!

  ReplyDelete
 13. பகுதி 2 படிச்சாச்சு. :-)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)