அப்பதான் அவர முதல் முதலா பாத்தேன். ஆரெம்கேவியில அம்மாவுக்கு பொடவை வாங்கிட்டு வெளில வரப்ப, கைல இருந்த பில்லப் பாத்துக்கிட்டே வந்தவ, ‘பட்’டுன்னு யார் மேலயோ மோதிட்டேன். நிமிந்து பாத்தா அவருதான். சுறுசுறுன்னு கோவம் வந்துருச்சு. “பொண்ணுங்கள இடிக்கவுன்னே கடைக்கு வருவீங்களோ”, அப்டின்னு ஆரம்பிக்க போனேன். அதுக்குள்ள அவரு, “ஏங்க, பாதைய பாத்து போங்க. பில்ல அப்பறம் பாத்துக்கலாம். எங்கயாச்சும் தடுக்கி கிடுக்கி விழுந்து கிழுந்து வக்க போறீங்க”, அப்பிடின்னு லேசா சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. அப்பதான் அவர ஒழுங்கா பாத்தேன். நெசமாச் சொல்றேங்க, “தோள் கண்டேன் தோளே கண்டேன்” ங்கிற பாட்டுக்கு அர்த்தம் எனக்கு அப்பதாங்க முதல் முறையா முழுசா புரிஞ்சது.
ஆம்பளங்க கூட இப்பிடி ஒரு ரோஜாப்பூ கலர்ல இருப்பாங்கன்னு அவரப் பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். செகப்பா இருக்கவங்க பல்லு பளிச்சுன்னு தெரியாத மாதிரி இருக்கும். ஆனா இவரு லேசா சிரிக்கும்போதே அவரு பல்லு வரிசை, என்னழகைப் பாரேன்னு மின்னிச்சு. மீசையெல்லாம் இல்ல. மழுமழுன்னு இருந்திச்சு மொகம். கருகருன்னு முடி, தல கொள்ளாம. சந்தனக் கலர்ல பாண்ட்டும், ரோஸ் கலர்ல ஷர்ட்டும் போட்டிருந்தாரு. எல்லாத்துக்கும் மேல அவரோட கண்ணுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அந்தக் கண்ணுல அப்பிடி ஒரு சாந்தம். அப்பிடி ஒரு அன்பு. கோவம்னா கிலோ என்ன வெலன்னு கேப்பாரு போல. அப்பிடியே மந்திரிச்சு விட்ட மாதிரி அவரையே பாத்துக்கிட்டு நின்னேன்.
“ஏய் மது. சீக்கிரம் வாடி.. ஆட்டோ புடிச்சாச்சு”, தங்கச்சி கீழ இருந்து கத்தறா. பொது எடத்துல பேரச் சொல்லிக் கத்தாதேன்னு எத்தன தடவ இந்தக் கழுதக்குச் சொல்லுறது. அறிவே இல்ல. இரு ஒன்னய. வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கிறேன். மனசுக்குள்ள அவளத் திட்டிக்கிட்டே, “வந்துட்டேண்டி”, அப்பிடிங்கிறேன். இவர் மேல வச்ச கண்ண இன்னம் வாங்கல…
அந்த ஆரெம்கேவி வாசல்ல பார்க் பண்றதுக்கெல்லாம் எடம் இருக்காது. ஒரே சனக்கூட்டம்தான். அதுனால ஆட்டோக்காரங்க அவசரப்படுத்துவாங்க. அவர விட்டு வெலக மாட்டேன்னு அடம் புடிச்ச பார்வைய ரொம்ப செரமப்பட்டு வெலக்கிக்கிட்டு, “ஸாரிங்க”, அப்டின்னு எனக்கே கேக்காத மாதிரி சொல்லிட்டு ஆட்டோவுக்கு போனேன்... திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டேதான். அவரும் என்ன ஒரு தரம் திரும்பிப் பாத்தாரு. அத நானும் பாத்தேன். சந்தோஷமா இருந்துச்சு. ரெண்டு பேரும் சிரிச்சிக்கிட்டோம்…
(தொடரும்)
--கவிநயா
அண்ணலும் (கண்ணனும்) நோக்கியாயிற்று அவளும் நோக்கியாயிற்று. அப்புறம்...
ReplyDeleteஅடுத்த பதிவிலா... சரி!
தொடர்கதையா! கலக்குங்க!
ReplyDeleteவருக ராமலக்ஷ்மி! ஆமா, தொடர்ச்சி அடுத்த பதிவிலதான். கதையப் பத்தி ஒண்ணுமே சொல்லலயே நீங்க :)
ReplyDeleteவாங்க ஜீவா! தொடர் மட்டுமில்ல. காதல் கதையும், இந்த மாதிரி நடையும் கூட கன்னி முயற்சிதான். மறுபடி தொடர்ச்சியைப் படிக்க வருவீங்கதானே :)
ReplyDelete//கதையப் பத்தி ஒண்ணுமே சொல்லலயே நீங்க :)//
ReplyDelete"அண்ணலும் (கண்ணனும்) நோக்கியாயிற்று அவளும் நோக்கியாயிற்று."
முதல் இந்த மூன்று வரியும் மோதலில் ஆரம்பித்துக்
காதலில் முடியப் போகும்
கதையைப் பற்றியதுதானே
கவிநயா:)?
[அப்படித்தானே முடியும்னு
இபபக் கேட்கக் கூடாதில்லையா:))!]]
கலக்கல்ஸ் :))
ReplyDeleteஆஹா..
ReplyDeleteஅழகிய காதல் தொடரா?
சீக்கிரமா அடுத்த பார்ட் போடுங்க..
முதல் அத்தியாயமே சுவாரஸ்யமா இருக்கு !
என்னங்க இன்னுமா இந்தக் கதை படிச்சுகினு இருக்கீக ?
ReplyDeleteஅப்படித்தான் இன்னா இருக்குது இதுலே !
ஓஹோ ! காதல் கதையா !
அதான் இத்தன சுவாரசியமா படிக்கிறீர்களா !
ஏங்க ! எதோ சிறுசுக எழுதுது .
அதுக்குப்போய் ஒரு கமென்டெல்லாம் கொடுக்காதீங்க.
எல்லாமே இப்படித்தாங்க ஆரம்பிக்கும்
ஸங்கராபரணத்திலே ஆரம்பிச்சு
ஸஹானாவிலே முடிஞ்சு போகும்.
என்னது ! அந்த சிவப்பு புள்ளையா ?
அடட .. அதே சந்தன கலர் பேண்டு, ரோஸ் கலர் சட்டையா !
சரிதான் ! இப்பவே புரிஞ்சு போச்சு !
என்ன நடக்கப்போவுதோ தெரியலையே !
எண்ட குருவாயூரப்பா !
இந்த மதுவைக் காப்பாத்திடுப்பா !
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
http://menakasury.blogspot.com
இப்படி குட்டி குட்டி பகுதிகளாக எழுதினால் எவ்வளவு பெரிய கதையும் சுவாரஸ்யமாக கொண்டு போகலாம். பார்க்கலாம் கண்ணனுக்கு தந்த உள்ளம் என்ன ஆகிறது என்று.
ReplyDeleteஅருமையான தொடக்கம்!!
ReplyDeleteஅவருக்கு இந்த மாதிரி அனுபவம் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன். அதான் திரும்பிப் பாத்து சிரிச்சுட்டுப் போறார் போல. :-)
ReplyDeleteஇந்தப் பதிவுக்கு வரும் யாவரும் இங்கு சென்று இந்தப்பாடலைக்
ReplyDeleteகேட்காவிடில் இந்தக் கதை படித்து என்ன பயன் ?
http://www.musicindiaonline.com/p/x/XqxgGyh0Gd.As1NMvHdW/
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
//சந்தனக் கலர்ல பாண்ட்டும், ரோஸ் கலர்ல ஷர்ட்டும் போட்டிருந்தாரு.//
ReplyDeleteஏங்க இந்த ராமராஜன் கலர் சட்டைய விட மாட்டீகளா..
குழு குழு குற்றாலத் தென்றல் காற்று,
ReplyDeleteதிருவனந்தபுரம் சாலையெல்லம்.
புது ஆர்.எம்.கே.வி முன்னே மனதை துள்ள வைக்கும் ஆனந்த நீரூற்று.
வந்தவங்களை வாங்க வாங்கா எனும் அன்பு உபசரிப்பு.
அடுத்து ஒரு கனவுக் காட்சி வரலாமே.
இசை கூடத் தொடங்கி விட்டதே பிண்ணணியில்.
கதை அருமையாய் தொடங்கியுள்ளீர்கள்
பாராட்டுக்கள்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
நல்ல துவக்கம். இவ்வளவு சீக்கிரம் தொடரும் போட்டுட்டீங்க. அண்ணலும் நோக்க, அவளும் நோக்க ...
ReplyDeleteநடக்கட்டும், நடக்கட்டும் ... (இதே போல நம்ம போஸ்ட்டுக்கு ஒருத்தங்க பின்னூட்டியிருந்தாங்க :)) அது இங்க ரிப்பீட்டு.
காதல் கதையா? பலே பலே... நீங்க இந்த டாபிக்ல கதை எழுதறது இதுதான் முதல்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஅதுவும் first person-la(இதுக்கு தமிழ்ல என்னன்னு மறந்துடுச்சி - losing it big time nowadays!) ஜமாய்ச்சிருக்கீங்க... ரோஜாப்பூ கலர்னவுடனே புரட்சித் தலைவர்தான் ஞாபகத்துக்கு வரார். :-)
//அப்பிடியே மந்திரிச்சு விட்ட மாதிரி அவரையே பாத்துக்கிட்டு நின்னேன். //
இது தூள்!
//[அப்படித்தானே முடியும்னு
ReplyDeleteஇபபக் கேட்கக் கூடாதில்லையா:))!]]//
நீங்க கேக்கலாம், நான் தான் பதில் சொல்வேனான்னு தெரியல :))
//கலக்கல்ஸ் :))//
ReplyDeleteமுதல் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி, ரம்யா!
//சீக்கிரமா அடுத்த பார்ட் போடுங்க..//
ReplyDeleteவாங்க ரிஷான். இப்படி யாராச்சும் கேக்க மாட்டாங்களான்னு இருந்தேன் :))
//எல்லாமே இப்படித்தாங்க ஆரம்பிக்கும்
ReplyDeleteஸங்கராபரணத்திலே ஆரம்பிச்சு
ஸஹானாவிலே முடிஞ்சு போகும்.//
:))
//எண்ட குருவாயூரப்பா !
இந்த மதுவைக் காப்பாத்திடுப்பா !//
சரியான ஆள்கிட்டதான் சொல்லியிருக்கீங்க :) இனிமே கவலையில்ல. நன்றி பாட்டீ!
//இப்படி குட்டி குட்டி பகுதிகளாக எழுதினால் எவ்வளவு பெரிய கதையும் சுவாரஸ்யமாக கொண்டு போகலாம். பார்க்கலாம் கண்ணனுக்கு தந்த உள்ளம் என்ன ஆகிறது என்று.//
ReplyDeleteவருக ரமேஷ். பாருங்க பாருங்க.. பார்த்துட்டு சொல்லுங்க.. :)
//அருமையான தொடக்கம்!!//
ReplyDeleteமுதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றிங்க இசக்கிமுத்து!
//இந்தப் பதிவுக்கு வரும் யாவரும் இங்கு சென்று இந்தப்பாடலைக்
ReplyDeleteகேட்காவிடில் இந்தக் கதை படித்து என்ன பயன் ?//
சுப்புரத்தினம் ஐயா! உங்களுக்கு ரொம்பக் குறும்புதான் :)) நான் கூட நீங்க இந்த கதைத் தலைப்பு வர பாட்டைத்தான் ("கங்கைக் கரைத்தோட்டம்...")எடுத்துக் குடுத்திருக்கீங்கன்னு நெனச்சேன்...
//அவருக்கு இந்த மாதிரி அனுபவம் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன். அதான் திரும்பிப் பாத்து சிரிச்சுட்டுப் போறார் போல. :-)//
ReplyDeleteஹா ஹா ஹா :))) - இது நான்
அச்சச்சோ! எப்பேர்ப்பட்ட தங்கமானவரை இப்படிச் சொல்லிட்டீங்களே குமரண்ணா - இது மது :)
//ஏங்க இந்த ராமராஜன் கலர் சட்டைய விட மாட்டீகளா..//
ReplyDeleteஅய்ய... அது look at me கலர்னு நெனச்சுட்டீங்களா ராகவ்? அது அழகான baby pink-க்காக்கும்! அதுவும் அவர் நெறத்துக்கு என்ன பொருத்தம் தெரியுமா? - இது மது :)
//குழு குழு குற்றாலத் தென்றல் காற்று,
ReplyDeleteதிருவனந்தபுரம் சாலையெல்லம்.
புது ஆர்.எம்.கே.வி முன்னே மனதை துள்ள வைக்கும் ஆனந்த நீரூற்று.
வந்தவங்களை வாங்க வாங்கா எனும் அன்பு உபசரிப்பு. //
ஆகா, அழகா லொகேஷன் அமைச்சுக் குடுத்திட்டீங்க. சூரி ஐயா பாட்டும் பின்னணியும். வேறென்ன வேணும் :))
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விஜய்!
வருக சதங்கா!
ReplyDelete//நடக்கட்டும், நடக்கட்டும் ... //
நடக்கட்டும்..நடக்கட்டும்.. வந்து வாழ்த்துங்க..வாழ்த்துங்க.. :))
வருக நாகு!
ReplyDelete//காதல் கதையா? பலே பலே... நீங்க இந்த டாபிக்ல கதை எழுதறது இதுதான் முதல்னு நினைக்கிறேன்..//
உங்களுக்குத் தெரியாததா? நீங்க என்னோட முதல் ஆடியன்ஸ் ஆச்சே :))
//அதுவும் first person-la(இதுக்கு தமிழ்ல என்னன்னு மறந்துடுச்சி - losing it big time nowadays!) ஜமாய்ச்சிருக்கீங்க...//
நன்றி.. நன்றி!
//ரோஜாப்பூ கலர்னவுடனே புரட்சித் தலைவர்தான் ஞாபகத்துக்கு வரார். :-)//
அடடா.. ஆனா நீங்க சொன்னப்புறம்தான் எனக்கு அவரு நினைவுக்கு வராரு :)
////அப்பிடியே மந்திரிச்சு விட்ட மாதிரி அவரையே பாத்துக்கிட்டு நின்னேன். //
இது தூள்!////
:))
அடுத்த பகுதி போட்டாச்சு.. வாங்க வாங்க.. :)
ReplyDelete3-ம் பகுதி போட்டாச்சு :)
ReplyDeleteபகுதி 4 போட்டாச்சு!
ReplyDelete