Thursday, July 24, 2008

ஆடிவெள்ளிக் கெழமையிலே...

ஆடிவெள்ளிக் கிழமையில அம்மாவை மறக்கக் கூடாதில்லையா. அதனால "கண்ணனுக்குத் தந்த உள்ளம்..." தொடரை இன்னும் ரெண்டு நாள்ல தொடர்றேன் :)


ஆடி வெள்ளிக் கெழமையிலே
பாடி உன்னத் துதிக்க வந்தோம்
ஆசையோட பொங்க வச்சு
பாசத்தோட படைக்க வந்தோம்

மாவெளக்கு ஏத்தி வச்சோம்
மாரியாத்தா மனங் குளிர
மஞ்சப் பட்டு சாத்தி வச்சோம்
மகமாயி மனம் மகிழ

தீராத வெனை யெல்லாம்
உன்னக் கண்டா தீருமடி
மாறாத வெனை யெல்லாம்
மருண் டோடி மறையுமடி

தேடி வரும் வெனை தெகைச்சு
திரும்பி ஓடுமடி
பாடி உன்னச் சரணடைஞ்சா
பாவமெல்லாங் கரையுமடி

உன்னடியே கதியின்னு
ஓடோடி வந்தோமடி
பொன்னடியே புகலுன்னு
பணிஞ்சு நின்னோமடி!


--கவிநயா

21 comments:

  1. //உன்னடியே கதியின்னு
    ஓடோடி வந்தோமடி
    பொன்னடியே புகலுன்னு
    பணிஞ்சு நின்னோமடி!//

    உன் பாதம் சரணடைந்தேன் முத்து மாரியம்மா.

    ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் கவிநயா. மாங்காட்டு காமாக்ஷி தரிசனம் பெறுங்கள்.

    ReplyDelete
  2. //பாடி உன்னச் சரணடைஞ்சா
    பாவமெல்லாங் கரையுமடி//

    நல்ல பாடல் கவிக்கா..நல்லா பாடக்கூடிய வகையில் எழுதியிருக்கீங்க..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  3. //உன்னடியே கதியின்னு
    ஓடோடி வந்தோமடி
    பொன்னடியே புகலுன்னு
    பணிஞ்சு நின்னோமடி!//

    ஆரம்பமும், முடிப்பும் அன்னை அருளால் அற்புதமாக அமைஞ்சு போச்சு; உங்களுக்கு கவிதை எழுதும் கலை, கைவந்த கலையாக இருக்கிறது. சந்தமும், சீரும் சாதாரணமாக ஓடிவந்து அதனதன் இடத்தில் அற்புதமாக அமர்ந்து கொள்கின்றன.. படைப்பிலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் தங்களுக்கு இன்னும் பல சிறப்புகள் கைகூடி வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தேடி வரும் வெனை தெகைச்சுச்
    திரும்பி ஓடுமடி
    பாடி உன்னச் சரணடைஞ்சாப்
    பாவமெல்லாங் கரையுமடி

    வாழ்த்துகள். மிகவும் சுவைத்துப் படிக்கும் படியான அழகிய பாடல்.

    ReplyDelete
  5. ஆசையோடு பொங்கல் வைத்து அதைப் பாசத்தோட படைத்து விட்டு
    //உன்னடியே கதியின்னு
    ஓடோடி வந்தோமடி
    பொன்னடியே புகலுன்னு
    பணிஞ்சு நின்னோமடி!// என
    இப்படி பரிபூரணமாய் சரணடைந்தும் விட்டால் அன்னை அவள் உள்ளம் குளிர்ந்து அருளிடுவாளே! அற்புதம் கவிநயா.

    ReplyDelete
  6. ஆடி வெள்ளியிலே அம்மன் மீது
    அற்புதமாயொரு பாடல் !!
    அடடா !!!
    அதுவும் என் பேத்தி
    அக்ஷயாவின் பிறந்த நாளன்று

    அந்த ஆனந்தத்திலேயே உடனேயே
    பாடிவிட்டேன் செஞ்சுருட்டி ராகத்திலே

    அந்த மாரியம்மன் சமயபுரத்து நாயகி
    காளியம்மா ! மாரியம்மா !

    காலமெல்லாம் உனைப்பாடும்
    கவி நயாவுக்க ருள் செய்வாய்.
    ஞாலமெல்லாம் கேட்டிடவே இப்
    பாடல் ஒன்றைப் பதிவு செய்தோம்.


    http://ceebrospark.blogspot.com


    மீனாட்சி பாட்டி.
    தஞ்சை.

    ReplyDelete
  7. :) நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    "நல்ல வெள்ளிக் கிழமையிலே
    அம்மா உன் வாசலிலே
    பாட்டெடுத்தேன் உன் பெருமை சொல்ல
    வண்ண பூ தொடுத்தேன் நீ சூடி கொள்ள"

    இசைஞானியின் இந்த பாடல் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  8. //ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் கவிநயா. மாங்காட்டு காமாக்ஷி தரிசனம் பெறுங்கள்.//

    வருக கைலாஷி. மாங்காட்டு அரசியின் தரிசனம் கிடைச்சது, உங்க புண்ணியத்தால :) மிக்க நன்றி! மத்தவங்களுக்காகவும் அந்த தொடுப்பு:

    http://navarathrii.blogspot.com/

    ReplyDelete
  9. //நல்ல பாடல் கவிக்கா..நல்லா பாடக்கூடிய வகையில் எழுதியிருக்கீங்க..//

    வருக மௌலி. கருத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  10. வாங்க ஜீவி ஐயா. ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப் பக்கம் பார்த்ததில் மகிழ்ச்சி :)

    அன்னை அருளால்னு சொன்னீங்களே.. எவ்வளவு உண்மை. அவள் எழுத வைக்கிற வரைதானே எல்லாம்...வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.

    //சந்தமும், சீரும் சாதாரணமாக ஓடிவந்து அதனதன் இடத்தில் அற்புதமாக அமர்ந்து கொள்கின்றன..//

    நீங்க சொன்ன விதத்தை ரொம்ப ரசிச்சேன் :)

    ReplyDelete
  11. //மிகவும் சுவைத்துப் படிக்கும் படியான அழகிய பாடல்.//

    வாங்க அகரம்.அமுதா. ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. //இப்படி பரிபூரணமாய் சரணடைந்தும் விட்டால் அன்னை அவள் உள்ளம் குளிர்ந்து அருளிடுவாளே! அற்புதம் கவிநயா.//

    வாங்க ராமலக்ஷ்மி. தவறாமல் வந்து தயங்காமல் பாராட்டி வாழ்த்தும் உங்களுக்கும் அவள் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. //அதுவும் என் பேத்தி
    அக்ஷயாவின் பிறந்த நாளன்று//

    அன்புப் பேத்திக்கு என் மனம்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாட்டீ!

    //அந்த ஆனந்தத்திலேயே உடனேயே
    பாடிவிட்டேன் செஞ்சுருட்டி ராகத்திலே//

    கேட்டு மகிழ்ந்தேன். சுப்புரத்தினம் ஐயாவிற்கும் என் நன்றிகளைத் தெரிவித்து விடுங்கள்..

    //காலமெல்லாம் உனைப்பாடும்
    கவி நயாவுக்க ருள் செய்வாய்.//

    இதைப் படித்ததும் கண்கலங்கி மனம் நெகிழ்ந்தேன். அன்புக்கு மிகவும் நன்றி பாட்டீ.

    ReplyDelete
  14. //நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

    வாங்க ரமேஷ். வாசித்ததற்கும் இசைஞானியின் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி :)

    ReplyDelete
  15. தெப்பக்குளக் கரையினிலே தேவி நீ அமர்ந்திருக்க
    ஒப்பியுனதேவல் செய்ய ஓடி வந்தேன் மாரியம்மா!
    எப்பொழுதும் உந்தன் அடி எண்ணி எண்ணித் துதித்திடவே
    முப்பொழுதும் என் மனத்தில் முன் நின்று காத்திடம்மா!

    கவிநயா அக்கா. நீங்கள் சமயபுரத்தாளைப் பாடிய இந்தப் பாடலைப் படித்தவுடன் மதுரை தெப்பக்குளம் மாரியம்மனை நினைத்துக் கொண்டேன். அன்னையின் அருளால் அவள் தாள் வணங்கினேன். நன்றிகள்.

    ReplyDelete
  16. வாங்க குமரா. நீங்க தந்திருப்பது ஒரு பாடலின் பகுதியா. இல்ல, நீங்களே எழுதினதா? நல்லா இருக்கு :)

    //எப்பொழுதும் உந்தன் அடி எண்ணி எண்ணித் துதித்திடவே
    முப்பொழுதும் என் மனத்தில் முன் நின்று காத்திடம்மா!//

    அதுவே என் வேண்டுதலும். படித்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி குமரா.

    ReplyDelete
  17. ஆடிவெள்ளி அன்று அம்மனை பற்றி
    அருள் தரும் பாட்டு.

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  18. //ஆடிவெள்ளி அன்று அம்மனை பற்றி அருள் தரும் பாட்டு.//

    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி விஜய்.

    ReplyDelete
  19. காலையில நீங்க எழுதுனதைப் படிச்ச போது மதுரைத் தெப்பக்குள அம்மாவே அந்த நாலு வரிகளை எழுதிக்கிட்டாங்க கவிநயா அக்கா.

    ReplyDelete
  20. ஆஹா. அப்படித்தான் நெனச்சேன் குமரா :) முழுப் பாடலா எழுதித் தரச் சொல்லுங்களேன்...

    ReplyDelete
  21. இந்த வெள்ளிக்கு கற்பூரநாயகியே கனகவல்லி வலைப்பூவில் பதிந்திருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

    ஓம் சக்தி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)