உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Wednesday, June 18, 2008
அப்போது கிடைக்கலாம்…
நினைவுகளே நெய்யூற்ற,
வெந்து கொண்டிருக்கிறது
இதயம்...
வானம் பார்த்த பூமியைப் போல்
மனதை பார்த்து ஏமாந்து
வறண்டு விட்டது
புன்னகை...
நீராடை இல்லாமல் நிர்வாணமாக
உலா வர மறுக்கும் கண்கள்
முடிவில்லா இருளுக்குள்
விடியலைத் தேடுகின்றன...
இவளுடைய வானத்தில்
நிலாகூட கறுப்புப் பூசிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறது...
மின்மினிப் பூச்சிகூட
இவளைக் கடக்கையில்
வெளிச்சம் உதறி
இருளணிந்து கொள்கின்றது...
காலடியில் விடாது
நழுவிக் கொண்டே இருக்கும் பூமி
என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறி
இவளை விழுங்கி விடக்கூடும் -
அப்போது கிடைக்கலாம் அவளுக்கு,
அவள் இதுநாள் வரை
தேடிச் சலித்து விட்ட நிம்மதி…
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
////வானம் பார்த்த பூமியைப் போல்
ReplyDeleteமனதை பார்த்து ஏமாந்து
வறண்டு விட்டது
புன்னகை...////
////இவளுடைய வானத்தில்
நிலாகூட கறுப்புப் பூசிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறது...////
////காலடியில் விடாது
நழுவிக் கொண்டே இருக்கும் பூமி
என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறி
இவளை விழுங்கி விடக்கூடும் -
அப்போது கிடைக்கலாம் அவளுக்கு,
அவள் இதுநாள் வரை
தேடிச் சலித்து விட்டிருந்த நிம்மதி…////
ஆஹா! என்ன அருமையான வரிகள். இக்கவிதையைப் படிக்கும் போது ஏதோஒன்று உள்ளுணர்வைப் பிசைகின்றது. கவிதையும் படமும் அருமை! வாழ்த்துக்கள்!
//பூமி
ReplyDeleteஎன்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறி
இவளை விழுங்கி விடக்கூடும் -
அப்போது கிடைக்கலாம் அவளுக்கு,
அவள் இதுநாள் வரை
தேடிச் சலித்து விட்டிருந்த நிம்மதி…//
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்"
எனத் தேடிச் சலிப்போருக்கெல்லாம் வாழும் போது கிடைக்காத நிம்மதி
பூமி விழுங்கும் போதுதான் கிடைக்கிறதெனில் அந்நிம்மதியின் பயந்தான் என்ன என்பதும் சோகத்துக்குரிய கேள்விக்குறி..இல்லையா கவிநயா?
//இவளுடைய வானத்தில்
நிலாகூட கறுப்புப் பூசிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறது...
மின்மினிப் பூச்சிகூட
இவளைக் கடக்கையில்
வெளிச்சம் உதறி
இருளணிந்து கொள்கின்றது...//
அழகு வரிகள்.
அழகான வரிகள் சகோதரி.
ReplyDeleteவாழ்வினைச் சூழ்ந்த இருள் வசந்தத்தினை அள்ளிவரும் நாளது வெகுதொலைவிலில்லை.
இருள் போர்த்திய துயர் நிலவை விடியலில் ஒரு பிரகாசமான கதிரவன் விழுங்கத்தானே செய்வான்?
நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிடியலின் தேடல் இருந்தால் போதுமே, வெளிச்சத்தினை தருவிப்பதற்கு!
//இக்கவிதையைப் படிக்கும் போது ஏதோஒன்று உள்ளுணர்வைப் பிசைகின்றது.//
ReplyDeleteஅப்படியானால் நான் சொல்ல வந்தது சரியாகப் போய்ச் சேர்ந்துட்டதுன்னு எடுத்துக்கறேன். மிக்க நன்றி, அகரம்.அமுதா!
//வாழும் போது கிடைக்காத நிம்மதி
ReplyDeleteபூமி விழுங்கும் போதுதான் கிடைக்கிறதெனில் அந்நிம்மதியின் பயந்தான் என்ன என்பதும் சோகத்துக்குரிய கேள்விக்குறி..இல்லையா கவிநயா?//
உண்மைதான் ராமலக்ஷ்மி! அதனாலதான் "கிடைக்கும்" அப்படின்னு சொல்லாம, "கிடைக்கலாம்" அப்படின்னு சொன்னேன். வாசிப்புக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி!
//இருள் போர்த்திய துயர் நிலவை விடியலில் ஒரு பிரகாசமான கதிரவன் விழுங்கத்தானே செய்வான்?//
ReplyDeleteஅப்படின்னு நம்புவோம்! :) அன்புக்கு நன்றி, ரிஷான்!
வாங்க ஜீவா! ரொம்ப நாளா காணுமேன்னு பார்த்தேன் :)
ReplyDelete//விடியலின் தேடல் இருந்தால் போதுமே, வெளிச்சத்தினை தருவிப்பதற்கு!//
உண்மைதானா? தேடல் மட்டுமே போதுமா? அப்படின்னா ரொம்ப நல்லதாச்சே :) மிக்க நன்றி!
கறுப்பு எண்ணங்கள் மட்டுமா வாழ்க்கை
ReplyDeleteபொறுப்புணர்ந்து தன்செயல்நாடும் புதுமைப் பெண்ணிவள்
நிழல்களைத் துரத்திவிட்டு நிஜத்தைப் பார்க்கின்றாள்
கழுத்துவரை வந்தஒளி முகத்தில்பட எத்தனை நேரமாகும்
சாதிப்பாள் இவள் சோதனைகளைத் தாண்டிநின்று!
இதெல்லாம் டூமச் லேட். வேகமா இடுகை செய்யுங்க!
ReplyDeleteமின்மினிப் பூச்சிகூட
ReplyDeleteஇவளைக் கடக்கையில்
வெளிச்சம் உதறி
இருளணிந்து கொள்கின்றது...
காலடியில் விடாது
நழுவிக் கொண்டே இருக்கும் பூமி
என்றாவது ஒருநாள் வெடித்துச் சிதறி
இவளை விழுங்கி விடக்கூடும் -
அப்போது கிடைக்கலாம் அவளுக்கு,
அவள் இதுநாள் வரை
தேடிச் சலித்து விட்ட நிம்மதி…//
கவித்துவமான வரிகள். நிறைவான முடிவு. தேடல்களில் தொலைந்து போனவர்களின் முகவரிகளை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி.
எனக்குப் பிடித்தது..
ReplyDelete//மின்மினிப் பூச்சிகூட
இவளைக் கடக்கையில்
வெளிச்சம் உதறி
இருளணிந்து கொள்கின்றது...//
நெஞ்சை கனக்க வைக்கும் வரிகள் எல்லாமே..
//சாதிப்பாள் இவள் சோதனைகளைத் தாண்டிநின்று!//
ReplyDeleteநம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி அண்ணா!
//இதெல்லாம் டூமச் லேட். வேகமா இடுகை செய்யுங்க!//
ReplyDeleteஅட. அவ்வளவு ஆவலா! சந்தோஷமா இருக்கு. நன்றி அகரம்.அமுதா! ஆனா சரக்கு இருந்தாதானே போட முடியும்! :)
//கவித்துவமான வரிகள். நிறைவான முடிவு. தேடல்களில் தொலைந்து போனவர்களின் முகவரிகளை பதிவு செய்துள்ளீர்கள் நன்றி.//
ReplyDeleteநல்வரவு தமிழ்சினிமா! வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி!
//நெஞ்சை கனக்க வைக்கும் வரிகள் எல்லாமே..//
ReplyDeleteவாங்க நாகு! மிக்க நன்றி!
Very touchy poem, made the heart heavy:))
ReplyDelete:(((
ReplyDelete:))) Vaarthaigalellaam superaa irunthathu :)))
//Vaarthaigalellaam superaa irunthathu //
ReplyDeleteமிக்க நன்றிங்க, ஜி!
//Very touchy poem, made the heart heavy:))//
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ஷ்வேதா!