என் தேவதைஎன்றேனும் என் தேவதை வருவாள் – தன்
சிறகி லென்னைத் தாங்கிக் கொள்வாள்
கண்ணீரைத் துடைத் தவள் எறிவாள்
கண்ணே என் றணைத்துக் கொள்வாள்
அன்னை அன்பை அவள் எனக் கருள்வாள்
பிள்ளை எனைமடி ஏந்திக் கொள்வாள்
கண்ணின் இமை போல் என்னைக் காப்பாள்
கண மொன்றும் என்னை விலகா திருப்பாள்
அவள் கால் தூசில்என் கவலைகள் மறையும்
அவள் கண் பட்டாலே ஆனந்தம் நிறையும்
உடலை விட்டே உயிர் ஏகிடினும் - அவள்
அன்பில் நானே உயிர்த் திருப்பேனே...
--கவிநயா
ஆஹா அருமையான கவிதை கவிநயா.
ReplyDelete//என்றேனும் என் தேவதை வருவாள்//
ReplyDelete//அவள்
அன்பில் நானே உயிர்த் திருப்பேனே...//
இந்த நம்பிக்கைதான் வாழ்க்கையை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது கவிநயா.
வெகு அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்வின் நம்பிக்கை தொனிக்கும் பாடல்.
ReplyDeleteவிடியலொன்றை நம்பித்தானே எப்பொழுதும் இரவுகளை எதிர்கொள்கிறோம்.
மிக அழகாக எழுதுகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.
சிண்ட்ரெல்லாவுக்கு உதவிய தேவதை போலவா!
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு!!!
ReplyDeleteஅன்புடன் அருணா
//விடியலொன்றை நம்பித்தானே எப்பொழுதும் இரவுகளை எதிர்கொள்கிறோம்.
ReplyDeleteமிக அழகாக எழுதுகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி//
ரிப்பிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஎ
வாங்க சதங்கா. நன்றி!
ReplyDelete//இந்த நம்பிக்கைதான் வாழ்க்கையை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது கவிநயா.//
ReplyDeleteநல்லாச் சொன்னீங்க, ராமலக்ஷ்மி. நன்றி!
//விடியலொன்றை நம்பித்தானே எப்பொழுதும் இரவுகளை எதிர்கொள்கிறோம்.//
ReplyDeleteஆமாம், ரிஷான். நம்பிக்கை என்றைக்கு பலிக்கும்னு பார்க்கலாம் :) நன்றி தம்பி!
//சிண்ட்ரெல்லாவுக்கு உதவிய தேவதை போலவா!//
ReplyDeleteஆமாம், அதேதான் :) முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மஞ்சூர் ராசா!
//ரொம்ப நல்லாருக்கு!!!//
ReplyDeleteவாங்க அருணா! உங்களுக்கும் இது முதல் வருகைன்னு நெனக்கிறேன். மிக்க நன்றி!
//ரிப்பிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஎ//
ReplyDeleteவாங்க மௌலி. உங்க ரிப்பீட்டுதான் இருக்கதுலயே பெஸ்ட்டு! :) நன்றி!
அந்த தேவதையே வந்து பாடுவது போலல்லவா
ReplyDeleteதோன்றுகிறது !
Just poetic brilliance !
சுப்பு ரத்தினம்
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
வாழ்த்துக்கள் கவி! ஒவ்வொரு வரிகளையும் சுவைத்துப்படித்தேன். நம்பிக்கையூட்டும் வரிகள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்றெனும் என்பது என்றென்றும் என்று வரட்டும்.
ReplyDeleteநாட்டியப் பேரொளி கவிநயா கவிதையில் கலக்கி இருக்கிங்க... அழகா இருக்கு..
ReplyDelete//அன்னை அன்பை அவள் எனக் கருள்வாள்
ReplyDeleteபிள்ளை எனைமடி ஏந்திக் கொள்வாள்
கண்ணின் இமை போல் என்னைக் காப்பாள்
கண மொன்றும் என்னை விலகா திருப்பாள்..//
ஓ..என்னதொரு ஏக்க வரிகள்..
பிள்ளை அன்னையாய்ப் போன
பாக்கியம்!..
ம்!..கவிதை அருமை!
ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDelete//என்றெனும் என்பது என்றென்றும் என்று வரட்டும்.//
என்றென்றும் தேவதை வந்தால் எத்தனை எத்தனை ஆனந்தம்.
ஆனால் அத்தனை ஆனந்தத்துக்கு
எத்தனை பேர் கொடுத்து வைத்திருக்கிறார்கள் ஜீவா?
என்றேனும் வருவாள் என்ற
நம்பிக்கையில்தான் வாழ்க்கை
வசந்தத்தை எதிர் கொண்டு
நகர்கிறது என்கிறேன். சரிதானா?
//எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteவாழ்வின் நம்பிக்கை தொனிக்கும் பாடல்.
விடியலொன்றை நம்பித்தானே எப்பொழுதும் இரவுகளை எதிர்கொள்கிறோம்.
மிக அழகாக எழுதுகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.//
ரிப்பீட்டேய்....!
//அந்த தேவதையே வந்து பாடுவது போலல்லவா
ReplyDeleteதோன்றுகிறது !
Just poetic brilliance ! //
வாங்க சுப்புரத்தினம் ஐயா. என்னென்னவோ சொல்லுறீங்க... :) ரசிச்சதுக்கு மிக்க நன்றி!
//வாழ்த்துக்கள் கவி! ஒவ்வொரு வரிகளையும் சுவைத்துப்படித்தேன். நம்பிக்கையூட்டும் வரிகள். //
ReplyDeleteஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி, அகரம்.அமுதா!
//என்றெனும் என்பது என்றென்றும் என்று வரட்டும்.//
ReplyDeleteஆஹா. நன்றி, ஜீவா! :)
//ஓ..என்னதொரு ஏக்க வரிகள்..//
ReplyDeleteஉங்களுக்கு புரிஞ்சதைப் போல அவளுக்கும் புரிஞ்சா நல்லாருக்கும், ஜீவி ஐயா.
//பிள்ளை அன்னையாய்ப் போன
பாக்கியம்!..//
இது எனக்கு புரியலயே :( விளக்குவீர்களா?
//ம்!..கவிதை அருமை!//
நல்லாவே ரசிச்சிருக்கீங்கன்னு தெரியுது. மிக்க நன்றி, உங்களுக்கு!
//நாட்டியப் பேரொளி கவிநயா கவிதையில் கலக்கி இருக்கிங்க... அழகா இருக்கு..//
ReplyDeleteவாங்க சஞ்சய். பத்மினியம்மா பட்டத்தைத் தூக்கி தாராளமாக் குடுக்கறீங்க? கோச்சுக்கப் போறாங்க! நானெல்லாம் சின்ன மின்மினிப் பூச்சி வகை. பேரொளிக்கு எங்க போறது? :)
கவிதை ரசிச்சதுக்கு நன்றி!
//ஆனால் அத்தனை ஆனந்தத்துக்கு
ReplyDeleteஎத்தனை பேர் கொடுத்து வைத்திருக்கிறார்கள் ஜீவா?//
ஜீவாவைக் கேட்டாலும் நானும் சொன்னா தப்பில்லைதானே? :)
அவர் வாழ்த்தா சொன்னாரு, நீங்க நடைமுறையை (reality) சொன்னீங்க. என்கிறதுதான் எனது புரிதல், ராமலக்ஷ்மி :)
//ரிப்பீட்டேய்....!//
ReplyDeleteவாங்க நிஜமா நல்லவன்! நீங்களும் ரிப்பீட்டா?? சரி.. இப்படிச் சொல்லிடறேன்.. உங்க ரிப்பீட்டும் ரொம்ப அருமை! முதல் வருகைக்கும், அரிய ரிப்பீட்டுக்கும் நன்றிகள்!
//அவர் வாழ்த்தா சொன்னாரு, நீங்க நடைமுறையை (reality) சொன்னீங்க. என்கிறதுதான் எனது புரிதல், ராமலக்ஷ்மி :)//
ReplyDeleteஉங்கள் புரிதலை ஏற்று அவரது வாழ்த்தை வழி மொழிகிறேன்.
SanJai said...
ReplyDelete//நாட்டியப் பேரொளி கவிநயா கவிதையில் கலக்கி இருக்கிங்க...//
ஆகா, தகவலுக்கு நன்றி சஞ்சய்.
கவிநயா கவி நயத்தில்தான் பேரொளியென்றால் அபிநயத்திலும்தானா?
பேஷ் பேஷ். பாராட்டுக்கள் கவிநயா!
அருமையான வரிகள் கவி.
ReplyDelete//உடலை விட்டே உயிர் ஏகிடினும் - அவள்
அன்பில் நானே உயிர்த் திருப்பேனே...
//
இது மேலும் இனிக்கிறது.
//உங்கள் புரிதலை ஏற்று அவரது வாழ்த்தை வழி மொழிகிறேன்.//
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி!
//கவிநயா கவி நயத்தில்தான் பேரொளியென்றால் அபிநயத்திலும்தானா?//
அச்சச்சோ! கூச்சப்பட வைக்கிறீங்க. நான் சின்ன மின்மினிப்பூச்சி மட்டுமே. ரெண்டுலயும் :)
//அருமையான வரிகள் கவி.
ReplyDelete//உடலை விட்டே உயிர் ஏகிடினும் - அவள்
அன்பில் நானே உயிர்த் திருப்பேனே...
//
இது மேலும் இனிக்கிறது.//
வாங்க நிர்ஷன்! கவிதை உங்களுக்குப் பிடிச்சது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி!
அருமையான கவிதை வரிகள் கவிநயா!
ReplyDeleteவிரைவில் உங்கள் தேவதை உங்களிடம் வந்து சேருவாள்!
வாழ்த்துக்கள்!
/உங்களுக்கு புரிஞ்சதைப் போல அவளுக்கும் புரிஞ்சா நல்லாருக்கும், ஜீவி ஐயா.
ReplyDelete//
கண்டிப்பாய்ப் புரியும்!
நாங்க சொல்றோம்!
மிகவும் அழகாக கட்டுக்கோப்பாக கவிதை படைக்கும் வல்லமை உங்களிடம் இருக்கிறது. தொடர்ந்து படிப்பேன். இப்புதியவளின் வாழ்த்துக்கள்.
ReplyDelete//அருமையான கவிதை வரிகள் கவிநயா!
ReplyDeleteவிரைவில் உங்கள் தேவதை உங்களிடம் வந்து சேருவாள்!//
வாங்க நாமக்கல் சிபி! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
//கண்டிப்பாய்ப் புரியும்!
நாங்க சொல்றோம்!//
ஆஹா :) இந்த மாதிரி அன்பிலதான் தேவதைகள் தங்களை வெளிப்படுத்திக்கிறாங்கன்னு நெனக்கிறேன். அன்புக்கு மிக்க நன்றி :)
//மிகவும் அழகாக கட்டுக்கோப்பாக கவிதை படைக்கும் வல்லமை உங்களிடம் இருக்கிறது. தொடர்ந்து படிப்பேன். இப்புதியவளின் வாழ்த்துக்கள்.//
ReplyDeleteவாங்க தமிழரசி! (உங்க ப்ரொஃபைல் பாத்தேன் :). ரசித்ததற்கு மிக்க நன்றி. அவசியம் அடிக்கடி வாங்க!
நம்பிக்கையை விதைத்தமைக்கு நன்றி!
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeleteஅழகான வரிகள்...
இத பாக்காம சிபியண்ணன் பதிவு மூலமாதான் இங்க வந்தேன்:)
/நல்ல கவிதை
ReplyDeleteஅழகான வரிகள்... //
தம்பி! என் உடன் பிறப்பே!
இன்றைக்கு இங்கேயா?
//நம்பிக்கையை விதைத்தமைக்கு நன்றி!//
ReplyDeleteஉங்க பக்கம் வந்து நான் பார்த்ததை நீங்களும் பார்த்தீங்கதானே :) அங்க இந்தக் கவிதையை இட்டமைக்கு மிக்க நன்றி!
//நல்ல கவிதை
ReplyDeleteஅழகான வரிகள்...
இத பாக்காம சிபியண்ணன் பதிவு மூலமாதான் இங்க வந்தேன்:)//
வாங்க தமிழன்! எப்படியோ வந்துட்டீங்கள்ல :) முதல் வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றிகள்!
//உங்க பக்கம் வந்து நான் பார்த்ததை நீங்களும் பார்த்தீங்கதானே :) அங்க இந்தக் கவிதையை இட்டமைக்கு மிக்க நன்றி!//
ReplyDeleteகவிதை எனக்கு பிடித்ததோடு மட்டுமின்றி இதைப் படித்த நேரம் என் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது!
அதனால்தான் மகிழ்ச்சியோட (உக்க அனுமதி இல்லாமலேயே) காப்பி அடிச்சி போட்டுட்டேன்!
//இதைப் படித்த நேரம் என் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது!//
ReplyDeleteஆஹா. கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு, சிபி! You made my day! நீங்க எப்பவும் இதே மகிழ்ச்சியோட இருக்க, என்னுடைய வாழ்த்துக்கள்!
//அதனால்தான் மகிழ்ச்சியோட (உக்க அனுமதி இல்லாமலேயே) காப்பி அடிச்சி போட்டுட்டேன்!//
சரிதான். அட் லீஸ்ட், போட்ட பிறகாவது சொல்லணும்னு தோணுச்சே! அதுக்கு நன்றி! :)
//ஆஹா. கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு, சிபி! You made my day! நீங்க எப்பவும் இதே மகிழ்ச்சியோட இருக்க, என்னுடைய வாழ்த்துக்கள்!//
ReplyDeleteரொம்ப நன்றி!
கவிதை பிரம்மாதம்... மிகவும் ரசித்தேன்....
ReplyDelete//கவிதை பிரம்மாதம்... மிகவும் ரசித்தேன்....//
ReplyDeleteவாங்க ரமேஷ்! ரொம்ப நன்றி!