உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Thursday, April 15, 2010
புத்தாண்டு வாழ்த்து!
சித்திரைத் திங்களுடன் சேதி வந்தது;
முத்திரை பதிக்கும் காலம் கூட வந்தது!
புத்தம் புது வருஷம் பிறந்து விட்டது;
நித்தம் இன்பம் தர வந்து விட்டது!
சுற்றிச் சேர்ந்த இருள் விலகி விட்டது;
வெற்றி ஒளி எங்கும் படர்ந்து விட்டது!
குற்றம் குறை மறந்து ஒன்று கூடுவோம்;
சுற்றம் சூழ வந்து சிந்து பாடுவோம்!
சற்றும்சோ ராமல் நாளும் உழைத்து வாழுவோம்;
கற்ற பாடங் களால் வாழ்வைப் பேணுவோம்!
சித்தம் எல்லாம் கனிந்த அன்பு பூணுவோம்;
யுத்தம் என்பதில்லா வையம் காணுவோம்!!
--கவிநயா
பி.கு. கொஞ்சம் தாமதமாயிருச்சு. பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்களுக்கு நன்றிக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete\\பி.கு. கொஞ்சம் தாமதமாயிருச்சு. பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)\\\
ReplyDeleteரைட்டு..ரைட்டு....உங்களுக்கும் அட்ஜஸ்ட் செய்யதுக்கிட்ட வாழ்த்துக்கள் ;)
:)))) ok, ok, adjust pannikkaroom!
ReplyDeleteஅருமையான வாழ்த்து. நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
//பி.கு. கொஞ்சம் தாமதமாயிருச்சு. பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)//
ReplyDelete******
அருமையான வாழ்த்து கவிநயா...
லேட்டா இருந்தாலும், லேட்டஸ்டா இருக்கு...
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
இதோ என் “விக்ருதி” புத்தாண்டு வாழ்த்துக்கள்....
மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html
//யுத்தம் என்பதில்லா வையம் காணுவோம்!!//
ReplyDeleteவையத்திலே யுத்தம் வராம இருக்கணும். ஆனா அது நம்ம கையில் இல்லையே !!
அதனாலே, அட் லீஸ்ட், நம்ம வீட்டுலேயாவது
இந்த விக்ருதி வருசத்திலே
யுத்தம் வராம இருப்பதற்கு
கரு மாரியாத்தா துணை புரியணும்....
அப்படின்னு எங்க வீட்டு மாரியாத்தா சொல்லுது.
உங்க பாட்டை ஹிந்தோள ராகத்திலே பாட நினைச்சு பாடினேன்.
ஹிந்தோளம் தானா அப்படின்னு யுத்தத்திற்கு உடனேயே வந்துவிட்டாளே....!!!
சுப்பு தாத்தா.
வாங்க மௌலி. நன்றி :)
ReplyDelete//ரைட்டு..ரைட்டு....உங்களுக்கும் அட்ஜஸ்ட் செய்யதுக்கிட்ட வாழ்த்துக்கள் ;)//
ReplyDeleteவாழ்த்துக்கெல்லாமா அட்ஜஸ்ட் பண்றது? முழுசா நல்லா வாழ்த்த வேணாமோ? :)
நன்றி கோபி.
//:)))) ok, ok, adjust pannikkaroom!//
ReplyDeleteஅட, தக்குடு, இந்த பக்கமெல்லாம் வரீங்களே :) நன்றி தம்பி :)
//அருமையான வாழ்த்து கவிநயா...
ReplyDeleteலேட்டா இருந்தாலும், லேட்டஸ்டா இருக்கு...
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//
வாங்க கோபி. உங்களுடைய அருமையான வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டேன். நன்றி :)
//ஹிந்தோளம் தானா அப்படின்னு யுத்தத்திற்கு உடனேயே வந்துவிட்டாளே....!!!//
ReplyDeleteவாங்க தாத்தா. அன்பு யுத்தத்துக்கும் ஆயுத யுத்தத்துக்கும் பெரிய்ய்ய வித்தியாசம் இருக்கே! நாம இங்கே சொன்னது ரெண்டாவதா உள்ளதைத்தானே :)
இனிமேதான் பாடல் கேட்கணும்... வருகைக்கும் பாடித் தந்தமைக்கும் மிக்க நன்றி தாத்தா.
உங்களுடைய, பாட்டியுடைய, ஆசிகள் என்றும் வேண்டும்...