Sunday, April 4, 2010

கறுப்பு உணர்வுகள்



நினைப்பால் நிறுத்த முடியாத
சுவாசம் போல்
கட்டளைக்குப் பணியாத
கடலலை போல்
துடைத்து விட முடியாத
மையிருட்டுப் போல்
என்னுள்
பிடிவாதமாய் அப்பியிருக்கும்
சில கறுப்பு உணர்வுகள்

இரத்த விழி திறந்து
இருக்கும் இடம் மறந்து
எரித்துப் பொசுக்கிவிட எண்ணும்
கண்ணீர் மடை அவிழ்த்து
பெருகும் வெள்ளந்தனில்
முழுகி விடவும் துணியும்
கசப்பால் கைகலந்து
வெறுப்பால் வழி மறித்து
இடறித் தடுமாறச் செய்யும்
கனவில் மனம் மூடி
கவிதை மடி தேடி
சுருண்டு கொள்ளவும் விழையும்


--கவிநயா

17 comments:

  1. //மனம் மூடி
    கவிதை மடி தேடி//

    அருமை கவிநயா.

    ReplyDelete
  2. என்னுள்
    பிடிவாதமாய் அப்பியிருக்கும்
    சில கறுப்பு உணர்வுகள்

    கவிதை நன்றாக இருக்கிறது கவிநயா .படமும் பொருத்தமாய்

    ReplyDelete
  3. ஒரு மாதிரி புரியுது...

    ReplyDelete
  4. /நினைப்பால் நிறுத்த முடியாத
    சுவாசம் போல்
    கட்டளைக்குப் பணியாத
    கடலலை போல்
    துடைத்து விட முடியாத
    மையிருட்டுப் போல்/

    கால வெள்ளத்தாலும்
    கண்ணீராலும்
    காரியத்தாலும்
    கழுவ முடியாதவை தான்,பல‌
    கறுப்பு உணர்வுகள்

    என்பதைச் சொல்ல விழைந்த வார்த்தைகள் அருமை

    /இரத்த விழி திறந்து
    இருக்கும் இடம் மறந்து
    எரித்துப் பொசுக்கிவிட எண்ணும்
    கண்ணீர் மடை அவிழ்த்து
    பெருகும் வெள்ளந்தனில்
    முழுகி விடவும் துணியும்
    கசப்பால் கைகலந்து
    வெறுப்பால் வழி மறித்து
    இடறித் தடுமாறச் செய்யும்
    கனவில் மனம் மூடி
    கவிதை மடி தேடி
    சுருண்டு கொள்ளவும் விழையும்/

    முடித்த விதமும்
    படம் இன்னும் அற்புதம்

    ReplyDelete
  5. கலக்கல் கவிநயா.

    ReplyDelete
  6. //அருமை கவிநயா.//

    நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  7. //கவிதை நன்றாக இருக்கிறது கவிநயா .படமும் பொருத்தமாய்//

    ரசித்தமைக்கு நன்றி பூங்குழலி.

    ReplyDelete
  8. //ஒரு மாதிரி புரியுது...//

    :) புரியாமல் இருப்பது ஒருவகையில் நல்லது :) வாசிச்சதுக்கு நன்றி கோபி.

    ReplyDelete
  9. //கால வெள்ளத்தாலும்
    கண்ணீராலும்
    காரியத்தாலும்
    கழுவ முடியாதவை தான்,பல‌
    கறுப்பு உணர்வுகள்//

    ஆம் திகழ். வழக்கம்போல் அழகாக ரசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. //Very nice Kavinayaa.//

    நன்றி ஜெஸ்வந்தி.

    (இன்னும் உங்க வலைப் பக்கம் - ஏன் யார் வலைப் பக்கமுமே போகலை... :( சீக்கிரம் வரேன்)

    ReplyDelete
  11. //கலக்கல் கவிநயா.//

    நன்றி அம்மு.

    ReplyDelete
  12. Padikka padikkathaan enakku konjam konjamaai artham purikirathu.Miga alagu.

    ReplyDelete
  13. //Padikka padikkathaan enakku konjam konjamaai artham purikirathu.Miga alagu.//

    நன்றி திரு.நடராஜன் :)

    ReplyDelete
  14. //இரத்த விழி திறந்து
    இருக்கும் இடம் மறந்து
    எரித்துப் பொசுக்கிவிட எண்ணும்

    கசப்பால் கைகலந்து
    வெறுப்பால் வழி மறித்து
    இடறித் தடுமாறச் செய்யும்..//

    -- தலைப்புக்குப் பொருந்துவது இந்த இரண்டும் தானே?..

    //கனவில் மனம் மூடி
    கவிதை மடி தேடி
    சுருண்டு கொள்ளவும் விழையும்..//

    --அதுவும் இது, வெள்ளையோ வெள்ளை இல்லையா?..

    ReplyDelete
  15. வாருங்கள் ஜீவி ஐயா.

    //--அதுவும் இது, வெள்ளையோ வெள்ளை இல்லையா?..//

    கறுப்புக்கு நடுவில் இருக்கும் வெள்ளையை கண்டு கொண்டதில் தங்கள் வெள்ளை உள்ளமும் தெரிகிறது :) மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  16. // www.bogy.in said...

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)