Thursday, August 13, 2009

குட்டிக் கவிதைப் பக்கம்

அவள் கண்களை மீன்கள் என்று
சொல்லாதவரே இல்லை.
அவை எப்போதும்
கண்ணீரில் மிதப்பதாலோ?

***

பட்டப் பகலில்
சுற்றுப்புறம் பார்க்காமல்
கட்டிக் கொள்ளத் துடிக்கும்
புது மணக் கணவன் போல்
விடாமல் என்னைத் துரத்துகிறது
என்னுடைய பகல் தூக்கம்!

***

இன்பம் என்ன துன்பம் என்ன
இதுதான் உலக வாழ்க்கையடி
கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு
பழகிப் போன பாஷையடி
எது வந்தாலும் எது போனாலும்
கலங்கா மனமே வேண்டுமடி
முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்
வாழ்க்கை உந்தன் கையிலடி!

***

வண்ணம்பல குழைத்து வைத்து
வரிசையாகக் கோர்த் தெடுத்து
வாகாய் இழுத்து விட்டானோ?
வான வில்லாய் நட்டானோ?

***

நான் உன்னை அர்ச்சிக்கும் பூக்களை எல்லாம்
அவை உன் பாதம் தொடும் முன்னேயே
காற்று தட்டிச் சென்று விடுவதைப்
பார்க்கும் போதுதான் தோன்றியது –
என் வேண்டுதல்களும் இப்படித்தான்
உன்னை வந்து
சேராமலே போய்விடுகின்றனவோ என்று…

***

அறிவாயா என் ஆதங்கம்?
பரிவாயா உன் அன்பாலே?
வருவாயா என் கனவிலேனும்?
தருவாயா உன் தரிசனத்தை?

***

நடக்கும் நன்மை நம்பி விடு!
இறக்கும் துயரம் இயம்பி விடு!
கனக்கும் சுமையை இறக்கி விடு!
விடியல் காண விரைந்து விடு!

***

பேசும் உலகம் உன் பெயரை...
பாடும் என்றும் உன் புகழை...
நாடி வரும் நல் வாய்ப்புகளை
நழுவ விடாமல் நீ முடித்தால்!

***

மனம்…

மனம் கணமும் நில்லாது
நலம் எதுவும் சொல்லாது
மதுவைப் போல மயங்க வைக்கும்
தெளிவைத் தூரத் தள்ளி வைக்கும்
குரங்கைப் போலக் குதித்திருக்கும்
குழம்ப வைத்து மீன் பிடிக்கும்!

***

நட்சத்திரங்கள்

கோலமிடச் சென்ற பெண்
கோபம் கொண்டு சென்றதால்
அரைகுறையாய் நின்று போன
அழகான புள்ளிகள்!


--கவிநயா

(குட்டிக் கவிதைகளை இனி நீங்கள் வலைப்பூவின் வலது பக்கத்தில் வாசித்து மகிழலாம்)

24 comments:

 1. பட்டப் பகலில்
  சுற்றுப்புறம் பார்க்காமல்
  கட்டிக் கொள்ளத் துடிக்கும்
  புது மணக் கணவன் போல்
  விடாமல் என்னைத் துரத்துகிறது
  என்னுடைய பகல் தூக்கம்!]]


  அற்புதமான வெளிப்பாடு

  ReplyDelete
 2. அவள் கண்களை மீன்கள் என்று
  சொல்லாதவரே இல்லை.
  அவை எப்போதும்
  கண்ணீரில் மிதப்பதாலோ?]]


  வரிகள் அழகு என்றாலும்

  வலிகள் ...

  ReplyDelete
 3. மூன்றும் அருமை. இரண்டாவது சட்டென சிரிக்க வைத்தது:)!

  பதிவை தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கவில்லை போலிருக்கிறதே?

  ReplyDelete
 4. //அற்புதமான வெளிப்பாடு//

  மிக்க நன்றி ஜமால் :)

  //வரிகள் அழகு என்றாலும்

  வலிகள் ...//

  ஆமாம் :(

  ReplyDelete
 5. //மூன்றும் அருமை. இரண்டாவது சட்டென சிரிக்க வைத்தது:)!//

  ஆமால்ல, அபூர்வமாதான் இப்படி எழுத வருது :)

  //பதிவை தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கவில்லை போலிருக்கிறதே?//

  குட்டிக் கவிதைகளை வலது பக்கத்தில் ஒவ்வொண்ணா போடலாம்னு நினைச்சுதான் இந்த பதிவை இட்டேன்... அதனால இணைக்காம இருந்தேன். இப்போ நீங்க சொன்ன பிறகு, இருக்கட்டும்னு இணைச்சாச்!

  நன்றி ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 6. இரண்டாவது கவிதை ரசனைக்குரியது.

  இரண்டாவது கவிதையும், மூன்றாவது கவிதையும் வேறெங்கோ படித்திருக்கிறேன்.

  இரண்டாவது கவிதை சமீபத்தில் தான் ஏதோ பதிவில் படித்ததாக ஞாபகம்.

  ReplyDelete
 7. \\பட்டப் பகலில்
  சுற்றுப்புறம் பார்க்காமல்
  கட்டிக் கொள்ளத் துடிக்கும்
  புது மணக் கணவன் போல்
  விடாமல் என்னைத் துரத்துகிறது
  என்னுடைய பகல் தூக்கம்\\

  எனக்கே எழுதியது மாதிரி இருக்கு...அந்த அளவுக்கு தூக்கம் வருது ;))

  ReplyDelete
 8. எது வந்தாலும் எது போனாலும்
  கலங்கா மனமே வேண்டுமடிகவிநயா அக்கா இது எனக்காகத்தானே எழுதியது! குட்டிகவிதைகள் வர வர ஆழ்மனதில் தைக்கும் அம்பு போல் இருக்கிறது.அது சரி ஒரு 4 அல்லது 5 மணி நேரம் காரிலே போனாலும் பேசாமல் இருக்கும் அற்புதத்தை எனக்கு கொஞ்சம் கற்றுகொடுக்க முடியுமா?

  ReplyDelete
 9. பட்டப் பகலில்
  சுற்றுப்புறம் பார்க்காமல்
  கட்டிக் கொள்ளத் துடிக்கும்
  புது மணக் கணவன் போல்
  விடாமல் என்னைத் துரத்துகிறது
  என்னுடைய பகல் தூக்கம்!]]

  ஆஹா என்ன ஒரு உபமானம் ! யாருமே மறுத்துப் பேசமுடியாது எப்படி இதெல்லாம் வருது! பேசாமே இருந்தா தானே வரும் போல !நமக்கு வெட்டி பேச்சுதான் வரும்.

  ReplyDelete
 10. //அவள் கண்களை மீன்கள் என்று
  சொல்லாதவரே இல்லை.
  அவை எப்போதும்
  கண்ணீரில் மிதப்பதாலோ?//

  இல்லை முட்களாய் இருப்பதால்.....

  இரண்டாவது கவிதை மிகவும் உணர்ச்சி மிகுதி

  ReplyDelete
 11. //இரண்டாவது கவிதையும், மூன்றாவது கவிதையும் வேறெங்கோ படித்திருக்கிறேன்.//

  ஆம் ரமேஷ். கொஞ்ச நாளா வலது பக்கம் ஓடிக்கிட்டிருந்தது :) அதை படிச்சிருப்பீங்க.

  ரசனைக்கு நன்றி.

  ReplyDelete
 12. //எனக்கே எழுதியது மாதிரி இருக்கு...அந்த அளவுக்கு தூக்கம் வருது ;))//

  அது சரி :)

  வருகைக்கு நன்றி கோபி.

  ReplyDelete
 13. //இது எனக்காகத்தானே எழுதியது!//

  உங்களுக்காகவும், எனக்காகவும்தான் தி.ரா.ச. ஐயா :)

  //அது சரி ஒரு 4 அல்லது 5 மணி நேரம் காரிலே போனாலும் பேசாமல் இருக்கும் அற்புதத்தை எனக்கு கொஞ்சம் கற்றுகொடுக்க முடியுமா?//

  4,5 மணி நேரம் எங்கே போனோம்? அப்படியே போன போதும் பேசிக்கிட்டுதானே வந்தேன் :) மௌலியை கேட்டு பாருங்க!

  ReplyDelete
 14. //பேசாமே இருந்தா தானே வரும் போல !நமக்கு வெட்டி பேச்சுதான் வரும்.//

  :))) ஒண்ணும் சொல்லறதுக்கில்லை!

  ReplyDelete
 15. //மூன்றும் அருமை//

  மிக்க நன்றி திகழ்மிளிர் :)

  ReplyDelete
 16. //இல்லை முட்களாய் இருப்பதால்.....//

  அச்சோ, உங்க அனுபவம் அப்படியா வசந்த்?

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 17. ம்ம்ம் இருக்கலாம். படிச்சதுமே இது புதுசு இல்லையேனு தோணிச்சு. ஓகே

  ReplyDelete
 18. //அவள் கண்களை மீன்கள் என்று
  சொல்லாதவரே இல்லை.
  அவை எப்போதும்
  கண்ணீரில் மிதப்பதாலோ?//

  வாவ்.... சோக‌த்தை கூட‌ இவ்வ‌ள‌வு ர‌சிக்கும் வித‌த்தில் சொல்ல‌ முடியுமா என்ன‌??

  //பட்டப் பகலில்
  சுற்றுப்புறம் பார்க்காமல்
  கட்டிக் கொள்ளத் துடிக்கும்
  புது மணக் கணவன் போல்
  விடாமல் என்னைத் துரத்துகிறது
  என்னுடைய பகல் தூக்கம்!//

  சிறிது வெட்க‌த்தை விட்டு, சீக்கிர‌ம் தூங்கி விடுங்க‌ள்...உவ‌மை ந‌ல்லா கீதுங்கோ..

  //இன்பம் என்ன துன்பம் என்ன
  இதுதான் உலக வாழ்க்கையடி
  கண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு
  பழகிப் போன பாஷையடி
  எது வந்தாலும் எது போனாலும்
  கலங்கா மனமே வேண்டுமடி
  முயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்
  வாழ்க்கை உந்தன் கையிலடி!//

  இதுதான் க‌விதாயினியின் நெத்திய‌டி(டி).... ந‌ல்லா இருக்கு க‌வி....

  //வண்ணம்பல குழைத்து வைத்து
  வரிசையாகக் கோர்த் தெடுத்து
  வாகாய் இழுத்து விட்டானோ?
  வான வில்லாய் நட்டானோ?//

  வான‌வில்லுக்கு அதன் ஏழு வ‌ர்ண‌ம் அழ‌கு... அத‌ற்கே அழ‌கு சேர்த்து விட்ட‌து உங்க‌ளின் த‌மிழ் வ‌ர்ண‌னை....

  //(குட்டிக் கவிதைகளை இனி நீங்கள் வலைப்பூவின் வலது பக்கத்தில் வாசித்து மகிழலாம்)//

  ப‌டிக்கிறோம்.... ந‌ன்றி... நிறைய‌ எழுதுங்க‌ள்... வாழ்த்துக்க‌ள் க‌வி...

  ReplyDelete
 19. //ப‌டிக்கிறோம்.... ந‌ன்றி... நிறைய‌ எழுதுங்க‌ள்... வாழ்த்துக்க‌ள் க‌வி...//

  உங்கள் வருகையும் ரசனையும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கோபி. அடிக்கடி வாங்க!

  ReplyDelete
 20. ஆகா குட்டிக் கவிதைகள் இங்கே தொகுப்பாய் தொடர்கிறதா?

  'மனம்' அருமை. மற்றதும் அப்படியே.

  ReplyDelete
 21. //ஆகா குட்டிக் கவிதைகள் இங்கே தொகுப்பாய் தொடர்கிறதா?//

  ஆம் ராமலக்ஷ்மி!

  //'மனம்' அருமை. மற்றதும் அப்படியே.//

  மிக்க நன்றி :)

  ReplyDelete
 22. மனம் பற்றிய குட்டிக் கவிதை மிக அருமை. :)

  ReplyDelete
 23. //மனம் பற்றிய குட்டிக் கவிதை மிக அருமை. :)//

  வாங்க மௌலி. மிக்க நன்றி :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)