ஆடி வெள்ளி சிறப்பு பதிவு
சின்ன மணி சிலம்பொலிக்க
வெள்ளி மணி பரல்சிரிக்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் – வந்து
கட்டி முத்தம் ஒன் றெனக்கு தர வேணும்
நீண்ட பின்னல் தானசைய
நீள் நிலமும் சேர்ந்தசைய
நித்திலமே நீ ஓடி வர வேணும் – வந்து
நித்தம் கொள்ளை அன் பெனக்கு தர வேணும்
முத்து மணி நகையாட
முத்து நகை இதழாட
சித்திரமே நீ ஓடி வர வேணும் – வந்து
சித்த மெல்லாம் நிறைந் தருளைத் தர வேணும்
கா தணிகள் தான்குலுங்க
கை வளைக ளும்சிணுங்க
கண்மணியே நீ ஓடி வர வேணும் - வந்து
கன்னல் மொழி இன் னமுதம் தர வேணும்
பன்னிப் பன்னி நான் பாட
பண்ணில் உன்னைத் தினம் பாட
பொன்மணியே கொலு சொலிக்க வர வேணும் – வந்து
பண் ணமர்ந்து இன் னருளைத் தர வேணும்
--கவிநயா
படம் சூப்பர்!
ReplyDeleteபாடல் சூப்பர்!
ஆடி முதல் வெள்ளிக்கு மொதல்ல ஓடியாந்தேன்-க்கா! அதுனால அம்மாவை என்னை மொதல்ல கவனிக்கச் சொல்லுங்க! :)
அம்மன் பாட்டுல இன்னிக்கி 199ஆம் இடுகையாக்கும்!
அதுனால எல்லாரும்...அங்கே...இந்தப் பதிவின் தலைப்பைப் பாருங்க!
உங்களுக்கு ரொம்ப ஆசைதான்!
ReplyDeleteசின்ன மணி,வெள்ளி மணி,முத்துமணி,
காதணி, கைவளை, கொலுசு -- என்று எப்படியெல்லாம் அழகுப் படுத்திப் பார்த்திருக்கிறீர்கள்! இத்தனையுடன் இயல்பாய் இருக்கின்ற நீண்ட பின்னலும், முத்து நகையும் எடுப்பாய்த் திகழ, அமர்க்களம் தான்! கொஞ்சு தமிழில் 'வரவேணும், வரவேணும்' என்கிற அழைப்பில் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்! வந்து அருள் புரிய வேணும்!
வந்தோம்
ReplyDeleteதமிழைப் பருகினோம்
நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பாளா பாலை?....கண்டிப்பாக வருவாள். அருமையும், எளிமையும் ஒருங்கே இருக்கிறது பதிவில். பகிர்ந்தமைக்கு நன்றிக்கா.
ReplyDeleteஆடி வெள்ளியன்று
ReplyDeleteநாடி உன்னை நானும் வந்தேன்.
வாடி வாடி நின்ற என்னைப்
பாடிப் பாடி மகிழவைத்தாய்.
ஓடி ஓடி வந்தெனக்குக்
கோடி கோடி அருள் புரிவாய்.
சுப்பு ரத்தினம்.
கானமது கேட்க எனது வலைப்பதிவுக்கு வரவும்.
http://menakasury.blogspot.com
paadal inge olikkirathu.
ReplyDeletehttp://menakasury.blogspsot.com
subburathinam
//அம்மாவை என்னை மொதல்ல கவனிக்கச் சொல்லுங்க! :)//
ReplyDeleteசொல்லியாச்! :)
//அம்மன் பாட்டுல இன்னிக்கி 199ஆம் இடுகையாக்கும்!
அதுனால எல்லாரும்...அங்கே...இந்தப் பதிவின் தலைப்பைப் பாருங்க!//
இங்கே தலைப்பை பாத்துட்டு அங்கே வந்தாச்! :)
வருகைக்கு நன்றி கண்ணா.
//உங்களுக்கு ரொம்ப ஆசைதான்!//
ReplyDeleteஉண்மை ஜீவி ஐயா. கொள்ளை ஆசை :)
//'வரவேணும், வரவேணும்' என்கிற அழைப்பில் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்! வந்து அருள் புரிய வேணும்!//
வருவாள்; அருள் புரிவாள் :)
வருகைக்கு மிக நன்றி ஐயா.
//வந்தோம்
ReplyDeleteதமிழைப் பருகினோம்//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் திகழ் :)
//நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பாளா பாலை?....கண்டிப்பாக வருவாள்.//
ReplyDeleteநீங்க சொன்னதுக்காகவேனும் வருவாள் :)
நன்றி மௌலி.
//ஆடி வெள்ளியன்று
ReplyDeleteநாடி உன்னை நானும் வந்தேன்.
வாடி வாடி நின்ற என்னைப்
பாடிப் பாடி மகிழவைத்தாய்.
ஓடி ஓடி வந்தெனக்குக்
கோடி கோடி அருள் புரிவாய்.//
குட்டிக் கவிதை நல்லாருக்கு தாத்தா.
பாடலும் கேட்டேன், என் மனதில் இருந்த மெட்டிலேயே அமைச்சிருக்கீங்க :) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தாத்தா.
Enna Alagaana Varthaigal!
ReplyDeleteNatarajan.
படமும் பாட்டும் ரெம்ப நல்லா இருக்குங்க
ReplyDelete//Enna Alagaana Varthaigal!//
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு.நடராஜன் :)
//படமும் பாட்டும் ரெம்ப நல்லா இருக்குங்க//
ReplyDeleteரசனைக்கு மிக்க நன்றி, அ.தங்கமணி :)
நம்பாத்து பட்டுக் குஞ்சலத்தை எப்படி பாக்காம விட்டேன்?? இன்னிக்கிதான் பாக்யம் கிடைச்சது, அதுவும் நயமான கவி பாடும் கவினயாவின் கவிதை வரிகளுடன்.
ReplyDelete//கண்மணியே நீ ஓடி வர வேணும் – வந்து
கட்டி முத்தம் ஒன் றெனக்கு தர வேணும்//
அந்த முக்கண்ணனை பித்தன் ஆக்கியவள் நிச்சயம் உங்கள் சித்தம் மயங்கும் அளவுக்கு நித்தம் நித்தம் வந்து முத்தம் தருவாள்....:)
கவிவானில் மின்னும் கவித்தாரகைக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteவாழவேண்டும் பல்லாண்டு !உம்மை தமிழாலே
ReplyDeleteவாழ்த்தவேண்டும் சொல்கொண்டு !அம்மன் அருளாலே
கூடவேண்டும் அத்தனையும் !உந்தன் கவியாலே
பாடவேண்டும் தாய்த்தமிழை நன்று !
அழகிய தமிழ் வாழ்த்துக்கு மிகவும் நன்றி திகழ் :)
ReplyDeleteமிகவும் தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.
//நம்பாத்து பட்டுக் குஞ்சலத்தை எப்படி பாக்காம விட்டேன்??//
ReplyDelete:) ச்வீட். தக்குடுவை வர வைச்ச குட்டி பொண்ணுக்கு நன்றி :)
/அழகிய தமிழ் வாழ்த்துக்கு மிகவும் நன்றி திகழ் :)
ReplyDelete/
எங்கே பிறந்த நாள் விருந்திற்கு அழைக்காமல் இருந்து விடுவீர்கள் என்று நினைத்தேன் :))))))))
நன்றிங்க