
மலரைத் தொலைத்த இதழாக
வானைத் தொலைத்த நிலவாக
வேரைத் தொலைத்த விழுதாக
என்னைத் தொலைத்தது என்மனது
காற்றில் அலையும் இலையாக
கரை சேராத அலையாக
கனவில் சிக்கிய நினைவாக
கனலில் சிக்கிய தென்மனது
மனிதர்கள் இல்லை; மனங்கள் இல்லை;
உயிர்கள் இல்லை; உணர்வும் இல்லை;
எதுவும் இல்லா ஓரிடத்தில்
தனியாய்த் தீவாய் என்மனது
மனதின் மயக்கம் கலைந்திடுமோ?
மூடிய பனிஇனி விலகிடுமோ?
கண்கள் ஒளியைய்க் கண்டிடுமோ?
கண்ணீர்தான் கடல் சேர்ந்திடுமோ?
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/_f1guy68_/1643679095/sizes/m/
wooooooow, suuuper kavithai akka. Each and every line is cristal clear.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Jh-7eGsa4QY
ReplyDeleteoru soham oonjalaadukirathE !!!
subbu rathinam
//காற்றில் அலையும் இலையாக
ReplyDeleteகரை சேராத அலையாக
கனவில் சிக்கிய நினைவாக//
மிக நன்று கவிநயா.
//wooooooow, suuuper kavithai akka. Each and every line is cristal clear.//
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி தக்குடு :)
//oru soham oonjalaadukirathE !!!//
ReplyDeleteபார்த்துட்டு மறுபடி வரேன் தாத்தா :)
//மிக நன்று கவிநயா.//
ReplyDeleteமிக நன்றி ராமலக்ஷ்மி :)
//http://www.youtube.com/watch?v=Jh-7eGsa4QY//
ReplyDeleteமிக இனிமை தாத்தா! மிகவும் நன்றி.
//மலரைத் தொலைத்த இதழாக
ReplyDeleteவானைத் தொலைத்த நிலவாக
வேரைத் தொலைத்த விழுதாக
என்னைத் தொலைத்தது என்மனது//
அழகான வரிகள்..தொடரட்டும் உங்கள்
பணி.......
//அழகான வரிகள்..தொடரட்டும் உங்கள்
ReplyDeleteபணி.......//
முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள் பல, கோவை குமரன்.