அனைவருக்கும் வரலக்ஷ்மி நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகள்.
வருவாய் வருவாய் வரலக்ஷ்மி
தருவாய் தருவாய் வரம் லக்ஷ்மி
ஆழியில் அலைகளில் உதித்தவளே - எங்கள்
ஊழ்வினை அழித்து காப்பவளே
செல்வங்கள் அனைத்துக்கும் அரசியளே – உன்னை
சொல்கொண்டு பாடிட மகிழ்பவளே
எட்டென நின்று அருள் புரிவாய் - நீ
எட்டாப் பொருளையும் தந்திடுவாய்
உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
விட்டு விடாமல் காத்திடுவாய்!
--கவிநயா
//உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
ReplyDeleteவிட்டு விடாமல் காத்திடுவாய்!//
சேர்ந்து துதிக்கிறோம்.
//பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
ReplyDeleteவிட்டு விடாமல் காத்திடுவாய்!//
நல்லா இருக்கு-க்கா!
சரணம் என்று உண்மையாக நினைத்த மாத்திரத்தில்...வராத லட்சுமியும், வர லட்சுமியாய் வந்து விடுவாளே!
சரி, சரி, என்னென்ன பலகாரம் செஞ்சீங்க? எடுத்து டேபிள்-ல்ல வைங்க! :)
வந்தேன் வந்தேன் ராமலக்ஷ்மி:)!
ReplyDeleteபெற்றேன் பெற்றேன் வரலக்ஷ்மியின் அருளினை தங்கள் பாடலின் மூலமாக. நன்றி கவிநயா. நலமா?
Very nice picture and alagaana kutti kavithai,Iam also joining in your prayer.
ReplyDeleteNatarajan.
'rராவே மா இண்டிகி' என்பதை எளிமையாக, அழகாகச் சொல்லிவிட்டீர்கள் :)
ReplyDeleteகொஞ்ச நாட்களாக இப்பக்கம் வரல்லை, பேஜ் செட்டிங் எல்லாம் மாற்றிட்டீங்க போல?....:)
/எட்டென நின்று அருள் புரிவாய் - நீ
ReplyDeleteஎட்டாப் பொருளையும் தந்திடுவாய்
உன்பட்டுப் பாதங்கள் சரணடைந்தோம் – எம்மை
விட்டு விடாமல் காத்திடுவாய்!/
அருமை
படமும் துதியும் அருமை
ReplyDeleteவருகை தந்து ஸ்ரீலக்ஷ்மி தேவியின் ஆசிகள் பெற்ற ஜீவி ஐயா, கண்ணன், ராமலக்ஷ்மி, திரு.நடராஜன், மௌலி, திகழ், பூங்குழலி, அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநல்லா இருக்கு!!
ReplyDelete