Wednesday, September 1, 2010

கண்ணனைக் கண்டீரா?

செல்லக் குட்டிக் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

அவனோட பிறந்த நாளுக்கு ஏதாச்சும் எழுதணும்னு ஆசை, ஆனால் நேரம் கிடைக்கலை :( அதனால முன்னாடி கண்ணன் பாட்டு வலைப்பூவில் இட்ட கவிதை இப்போ இங்கேயும்...




கண்ணன் - என் குழந்தை

புல்லாங் குழலை ஊதும் என்றன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
இரவு பகலாய்த் தேடுகிறேன்
இன்னமும் என்னிடம் சிக்கவில்லை!

நில்லாமல் சுற்றும் புவிபோலே – ஓய்
வில்லாமல் ஊரைச் சுற்றிடுவான்;
உறிமேல் பானை கண்டுவிட்டால்
பறிமுதல் உடனே செய்திடுவான்!

பத்தரை மாற்றுத் தங்கம் போல்
பாசாங்கு பலவும் புரிந்திடுவான்;
இத்தரை மீதில் இவனேதான்
இலக்கணம் போல நடந்து கொள்வான்!

கரிய விழிகளை விரித்து அதில்
கண்ணீரோடு நின்றிடுவான்;
பாவம் என்று விட்டு விட்டால்
மீதம் இன்றி தின்றிடுவான்!

உருட்டி மிரட்டி கட்டி வைத்தால்
உரலையும் இழுத்துச் சென்றிடுவான்!
தறிகெட் டலையும் கன்றினைப் போல்
திரியும் கண்ணனைக் கண்டீரா?

கன்னக் குழியில் குறும்பிருக்கும்
வன்னப் பீலி அசைந்தாடும்
தின்ன வெண்ணெய் எல்லாமே
திகட்டா இதழைச் சுவைத்திருக்கும்!

காதணி வதனம் கொஞ்சி நிற்கும்
மாமணி மார்பில் தவழ்ந்திருக்கும்
கிண்கிணி கொலுசு மணிகளெல்லாம் - அவன்
பாதங்கள் தொட்டு மகிழ்ந்திருக்கும்!

குழலில் குயிலும் மயங்கி நிற்கும்
குரலில் குழலே ஒலித்திருக்கும்
மடுவின் நடுவே மலர் போலே - அவன்
முகமே மனதில் மலர்ந்திருக்கும்

புல்லாங் குழலை ஊதும் என்றன்
பொல்லாத கண்ணனைக் கண்டீரா?
என்றன் ஏக்கம் அறிவீரா?
அவனைக் கண்டால் சொல்வீரா?

--கவிநயா

15 comments:

  1. கண்ணனை உங்கள் கவிதையில் நாங்கள் கண்டு விட்டோம். இந்நேரம் உங்களைப் பார்க்க வந்திருப்பான்:)! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கவிநயா.

    அருமையான கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  2. கண்ணன் பாட்டுக்குக் காப்புரிமை செலுத்தித் தானே இங்கே மீள் பதிவு செய்தீர்கள்? எங்கே என் காப்புரிமை? = அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல், அப்பம், திரட்டிப் பால், சோமாஸ், மைசூர்பா ....

    ReplyDelete
  3. /ராமலக்ஷ்மி said...
    கண்ணனை உங்கள் கவிதையில் நாங்கள் கண்டு விட்டோம். இந்நேரம் உங்களைப் பார்க்க வந்திருப்பான்:)! /

    :)))))))

    அதே

    ReplyDelete
  4. ஆம் ராமலக்ஷ்மி :) கண்ணன் என்கிட்டயும் வந்துட்டான் :)

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஆஹா, கண்ணனுக்கே காப்புரிமையா? :) ஆனாலும் நேரில் வந்தா எல்லாம் கிடைக்கலைன்னாலும், ஒண்ணு ரெண்டு கிடைக்க வாய்ப்பிருக்கு :)

    வருகைக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  6. //:)))))))

    அதே//

    வருகைக்கு நன்றி திகழ் :)

    ReplyDelete
  7. இப்படிப்பட்ட பண்டிகைகள் வந்தால் தான் கண்ணில் தட்டுபடுகிறீர்கள்; ஆக, எப்படியும் வந்துவிடுவீர்கள் என்று தெரியும்!.. :))))

    கண்ணன் புகழ்பாடக் கண்டும், கேட்டும்
    கண்களும், காதுகளும் பேறுபெற்றன.
    அதனால் மனசும் மகிழ்ந்தது.
    மிக்க நன்றி, கவிநயா!

    ReplyDelete
  8. கண்ணணை கண்டு வர ச்சொல்லுவாய்
    கவி உன் பாடலில் உள்ள கண்ணணை வர சொல்லுவாய் கவியே
    கண்ணணை தேடுது என் இல்லமே

    .கனிவுடன் அழைக்குது என் மனமே

    மழலை வடிவில் வந்து மகிழ்த்தி விடு
    என் இல்ல கனவை நிறைவேத்திவிடு

    கவியே .
    பாட தெரிந்தவர்கள் பாடி கொள்ளலாம் .... சித்ரம்//

    ReplyDelete
  9. வாருங்கள் ஜீவி ஐயா. உங்கள் வருகையும் ரசனையும் எப்போதும் மகிழ்வைத் தரும் விஷயம். வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. வாருங்கள் சித்ரம். உங்கள் கனவு நிறைவேற, கண்ணன் அருளட்டும் :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //Several tips said...

    மிகவும் அருமை//

    மிகவும் நன்றி :)

    ReplyDelete
  12. கண்ணன் பாட்டு மயக்க வைத்தது...

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  13. Excellent Post..

    நீங்க தேடும் போது கண்ணன் என்கிட்ட தான் இருந்தான் ;)

    ReplyDelete
  14. //கண்ணன் பாட்டு மயக்க வைத்தது...//

    கண்ணன்னாலே மயக்கமும் கூடவே வந்துடுது :) வருகைக்கு மிக்க நன்றி கோபி.

    ReplyDelete
  15. //Excellent Post..

    நீங்க தேடும் போது கண்ணன் என்கிட்ட தான் இருந்தான் ;)//

    அது சரி :) ராதையை கண்டா யசோதையை மறந்துடுவான் போல :)

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ராதை.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)