Monday, September 20, 2010

மனசு


வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்

கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்

வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்

மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்

அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்

காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: https://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_fotosource/

21 comments:

  1. அருமையான தாள நயத்துடன் மனதைப் படம் பிடித்த வரிகள்.

    ReplyDelete
  2. vanakkam..
    eppadi ithu pol ezhuthurkireergal..?

    ReplyDelete
  3. வரிகள் நல்லாயிருக்கு..

    ReplyDelete
  4. எல்லார் மனசும் இப்படி இருக்கனும் ஆண்டவா :-)

    ReplyDelete
  5. //அருமையான தாள நயத்துடன் மனதைப் படம் பிடித்த வரிகள்.//

    தவறாத வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  6. //vanakkam..
    eppadi ithu pol ezhuthurkireergal..?//

    :) உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு எடுத்துக்கறேன் :)

    முதல் வருகைக்கு நன்றி ஆனந்த்.

    ReplyDelete
  7. //வரிகள் நல்லாயிருக்கு..//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி அஹமது இர்ஷாத்.

    ReplyDelete
  8. //எல்லார் மனசும் இப்படி இருக்கனும் ஆண்டவா :-)//

    நீங்க இப்படிச் சொன்னதும் மறுபடியும் போய் கவிதையை படிச்சிட்டு வந்தேன் :) எல்லார் மனசும் அப்படித்தான்னு நினைச்சுதான் எழுதினேன். அப்படி இல்லையா?

    வருகைக்கு நன்றி உழவன் :)

    ReplyDelete
  9. அருமையான வரிகள் கவிநயா. :)தற்செயலா பெண் எழுத்தாளர்கள் பத்தி தேடுனப்போ என் தேடல் உங்கள்
    வலைபூவை அப்படியே உக்காந்து வச்சிக வச்சுடுச்சு . எப்படி இப்படிலாம் எழுதறீங்க.:)
    எனக்கும் நிறைய படிக்கறதும், தோணுறதை கொஞ்சம் எழுதறதும் பிடிச்ச விஷயம்.
    என்னுடைய படைப்புக்களை கவிதை தொகுப்பா வெளியிடனும்கிறது ரொம்ப நாளைய ஆசை.
    ஆனா எப்படின்னு தெரியல. பெட்டி தட்டற வேலைல இருக்கறதும் ஒரு காரணம். ;)
    என் வலைப்பூவின் முகவரி அனுப்பறேன். பார்த்துட்டு உங்க விமர்சனத்தை சொல்லுங்க. ரொம்ப
    ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன்.

    http://mithilathewriter.blogspot.com/

    நன்றி ,
    மிதிலா

    ReplyDelete
  10. வாசம் வீசும் பூவைப்போல
    நாலு வார்த்தை சொல்லி போகும்
    நண்பர் சொல்ல பூத்து பொங்கும்
    இன்னும் கொஞ்சம் வாசம் வீசும்!

    போச்!போச்! infected! இதுக்கு முந்தின பதிவோட தாக்கம்!

    ReplyDelete
  11. வாங்க மிதிலா :) உங்களோட வலைப்பக்கத்துக்கு போயிட்டு வந்தேன். உங்க வலைப்பூவும் உங்க எழுத்துகளும் உங்க பெயரும், எல்லாமே அழகு! உங்க கனவு விரைவிலேயே நனவாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். உங்க முதல் வருகையும் ரசனையும் மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //வாசம் வீசும் பூவைப்போல
    நாலு வார்த்தை சொல்லி போகும்
    நண்பர் சொல்ல பூத்து பொங்கும்
    இன்னும் கொஞ்சம் வாசம் வீசும்!//

    திவாஜி! நீங்களா!... கவிதையா! அசத்திட்டீங்க போங்க :)

    //போச்!போச்! infected! இதுக்கு முந்தின பதிவோட தாக்கம்!//

    நல்ல infection -தானே பொறிதுயில் ஆழ்த்துனரே! :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. நல்லதையே நாடும்போது
    நன்மையெல்லாம் கூட வரும்
    நல்ல மனசு கொண்டிருந்தா
    நானிலமும் புகழ் பாடும்.

    சுப்பு தாத்தா.

    பின் குறிப்பு: உங்க இந்த பாடலைக் கேளுங்கள் ஒரு பழைய இந்தி பாடல் மெட்டிலே youtube/வானம் போல விரிஞ்சிருக்கும்

    ReplyDelete
  14. //நல்லதையே நாடும்போது
    நன்மையெல்லாம் கூட வரும்
    நல்ல மனசு கொண்டிருந்தா
    நானிலமும் புகழ் பாடும். //

    நல்லாயிருக்கு தாத்தா :) உண்மையும் கூட.

    பாடலை இனிமேதான் கேட்கணும்.

    ReplyDelete
  15. கவிநயா.....

    அட்டகாசமான தாளம் போட வைத்த பாடலிது...

    இதை படித்ததும் என் மனசு ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆனது....

    ReplyDelete
  16. நல்லாயிருக்கு

    ReplyDelete
  17. //http://www.youtube.com/watch?v=wh76kuK8oWU&feature=email//

    பாட்டியின் குரலில் பாடல் அருமை தாத்தா. குறிப்பா உங்க படங்களின் தேர்வும் தொகுப்பும் எப்பவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் :) இந்த முறை மூக்கோட மூக்குரசும் தாத்தா பாட்டியின் பாடம் சூப்பர் :)

    பாட்டிக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  18. //இதை படித்ததும் என் மனசு ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆனது....//

    மிக்க மகிழ்ச்சி கோபி :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. //நல்லாயிருக்கு//

    வாங்க சிநேகிதி. ரசனைக்கு நன்றி :)

    ReplyDelete
  20. மனத்தை மயக்குது

    ReplyDelete
  21. //மனத்தை மயக்குது//

    மகிழ்ச்சி திகழ் :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)