Monday, December 15, 2008

சிறை



சுவாசம் கூட
சுதந்திரமாய் வெளியேற இயலாமல்
இதயத்தின் கேவலில்
சிக்கித் திணறுகிறது

திரும்பும் திசையெல்லாம்
நெருப்புக் கம்பிகள்
வெப்பம் விரவுகின்றன
இரக்கமின்றி

ஏறும் பாரத்தை
எதிர்க்கத் தெரியாமல்
வாயில்லாப் பிராணியாய்
வலியில் புதைகிறது மனசு

ஒரு அடி வைக்க முயன்றாலும்
காலடியினின்றும்
விரோதித்து நழுவுகிறது பூமி

இருளைத் தழுவிய கண்கள்
ஒளியின் இருப்பை மறந்து
மாயை உணரா மனிதன் போல்
மயங்கிக் கிடக்கின்றன

வெட்ட வெளிச் சிறையின்
கரிய வானத்தில்
போனால் போகிறதென்று
கண் சிமிட்டிச் சிரிக்கிறது
ஒரே ஒரு நட்சத்திரம்


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/lakshmanaraja/2270901460/

37 comments:

  1. வந்துட்டேன் ...

    நினைச்சேன் சொல்லிட்டேன்

    ReplyDelete
  2. \\சுவாசம் கூட
    சுதந்திரமாய் வெளியேற இயலாமல்
    இதயத்தின் கேவலில்
    சிக்கித் திணறுகிறது\\

    அட அருமைங்க ...

    ReplyDelete
  3. ஒவ்வொறு பத்தியும்

    மிக அழகுங்க

    மொத்ததில் கவிதையே அழகு

    அந்த கண் சிமிட்டலும்தான்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை கவிநயா. இதயத்தின் கேவலையும் மனதின் வலியையும் உணர்த்துகின்றன ஒவ்வொரு வரிகளும்.

    //வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்//

    நம்பிக்கை நட்சத்திரம்? நன்றாக முடித்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அப்பாடா கடேசிலே ஒரு நம்பிக்கையை கொடுத்துட்டீங்க.
    அப்புறம்
    //வெப்பம் விரவுகின்றன//
    விரவுகிறது இல்லையா?

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்ம்???? சரி, நம்பிக்கை நட்சத்திரம் ஒளி விட ஆரம்பிச்சிருக்கு இல்லை???

    ReplyDelete
  7. //ஏறும் பாரத்தை
    எதிர்க்கத் தெரியாமல்
    வாயில்லாப் பிராணியாய்
    வலியில் புதைகிறது மனசு//

    மனசுகென்று தனியாக வாய் தேவையில்லை என்றாலும்,
    இங்கு வந்து விழுந்திருக்கும்
    'எதிர்க்கத் தெரியாமல்' என்கிற
    வார்த்தை சொல்லும் அர்த்தம்,
    அனந்தம்.

    ReplyDelete
  8. //வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்//


    அதே மாதிரி, இங்கு 'போனால் போகிறதென்று' என்கிற வார்த்தை
    ஏகப்பட்ட அழகைத் தன்னுள் புதைத்துக் கொண்டிருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //சுவாசம் கூட
    சுதந்திரமாய் வெளியேற இயலாமல்
    இதயத்தின் கேவலில்
    சிக்கித் திணறுகிறது

    திரும்பும் திசையெல்லாம்
    நெருப்புக் கம்பிகள்
    வெப்பம் விரவுகின்றன
    இரக்கமின்றி

    ஏறும் பாரத்தை
    எதிர்க்கத் தெரியாமல்
    வாயில்லாப் பிராணியாய்
    வலியில் புதைகிறது மனசு

    ஒரு அடி வைக்க முயன்றாலும்
    காலடியினின்றும்
    விரோதித்து நழுவுகிறது பூமி//

    என் மனசில் இருப்பதை அப்படியே எழுதி இருக்கீங்க..

    ReplyDelete
  10. //வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்//

    மிக அருமை..

    ReplyDelete
  11. //வந்துட்டேன் ...
    நினைச்சேன் சொல்லிட்டேன்//

    வாங்க ஜமால் :) முதல் வருகைக்கு நன்றி.

    //ஒவ்வொறு பத்தியும்
    மிக அழகுங்க
    மொத்ததில் கவிதையே அழகு
    அந்த கண் சிமிட்டலும்தான்.//

    ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. //நம்பிக்கை நட்சத்திரம்?//

    அப்படித்தான் நினைச்சுக்கணும் :) வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  13. //அப்பாடா கடேசிலே ஒரு நம்பிக்கையை கொடுத்துட்டீங்க.//

    :))

    ////வெப்பம் விரவுகின்றன//
    விரவுகிறது இல்லையா?////

    'கம்பிகள்' னு சொன்னதால 'விரவுகின்றன' ன்னு சொன்னேன் :)

    வருகைக்கு மிக்க நன்றி திவா.

    ReplyDelete
  14. //சரி, நம்பிக்கை நட்சத்திரம் ஒளி விட ஆரம்பிச்சிருக்கு இல்லை???//

    அதுவா...? கண் சிமிட்டிச் சிமிட்டி கண்ணாமூச்சிதான் ஆடுது :)

    வருகைக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  15. //வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்//

    நம்பிக்கை நட்சத்திரத்தை அழகாக கோடிட்டு காட்டியிருக்கீங்க. அருமை.

    ReplyDelete
  16. //மனசுகென்று தனியாக வாய் தேவையில்லை என்றாலும்,
    இங்கு வந்து விழுந்திருக்கும்
    'எதிர்க்கத் தெரியாமல்' என்கிற
    வார்த்தை சொல்லும் அர்த்தம்,
    அனந்தம்.//

    சரியா சொன்னீங்க.

    //அதே மாதிரி, இங்கு 'போனால் போகிறதென்று' என்கிற வார்த்தை
    ஏகப்பட்ட அழகைத் தன்னுள் புதைத்துக் கொண்டிருக்கிறது.
    வாழ்த்துக்கள்.//

    புரிதலுக்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

    ReplyDelete
  17. //என் மனசில் இருப்பதை அப்படியே எழுதி இருக்கீங்க..//

    அப்படியா... ஹ்ம்... ஒரு பக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் வருத்தம் :) வலி தீர்ந்து விரைவில் வழி பிறக்கட்டும்.

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி சரவணகுமார்.

    ReplyDelete
  18. //நம்பிக்கை நட்சத்திரத்தை அழகாக கோடிட்டு காட்டியிருக்கீங்க. அருமை.//

    வாங்க சதங்கா. மிக்க நன்றி.

    ReplyDelete
  19. //ஏறும் பாரத்தை
    எதிர்க்கத் தெரியாமல்
    வாயில்லாப் பிராணியாய்
    வலியில் புதைகிறது மனசு//

    //வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்//

    அழகான வரிகள் கவிநயா..
    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)

    ReplyDelete
  20. //அழகான வரிகள் கவிநயா..//

    வருக ரிஷு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. //இருளைத் தழுவிய கண்கள்
    ஒளியின் இருப்பை மறந்து
    மாயை உணரா மனிதன் போல்
    மயங்கிக் கிடக்கின்றன//

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள். கவிதையை சில முறை படித்து உணர்ந்து ரசித்தேன், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. //எனக்கு மிகவும் பிடித்த வரிகள். கவிதையை சில முறை படித்து உணர்ந்து ரசித்தேன், பாராட்டுக்கள்.//

    வருக ரமேஷ். எனக்குமே பிடிச்ச வரிகள் :) வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. //வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்
    //

    கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. அதில் கடைசியில் முடித்திருக்கும் விதம் வெகு அருமை. படித்தேன் ரசித்தேன் பல முறை. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  24. //கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. அதில் கடைசியில் முடித்திருக்கும் விதம் வெகு அருமை. படித்தேன் ரசித்தேன் பல முறை. வாழ்த்துக்கள் :)//

    வருக பூர்ணிமா. ரசனைக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி உங்களுக்கு :)

    ReplyDelete
  25. சிறைக்குள்ளே எத்தனை நேரம் இருப்பது !
    இருட்டிலா அதுவும் ? எழுந்து நில்லுங்கள்.
    அடே ! ஒரு நட்சத்திரம் தெரிகிறதே !
    அந்த வேலனின் ஒளி மிளிர்கிறதே !!
    அங்கு செல்வோம் வாருங்கள் !!

    http://ceebrospark.blogspot.com
    http://uk.youtube.com/watch?v=JFgrktRoksY

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  26. வார்த்தையில் விளையாடியிருக்கிறீர்கள். நன்று. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. //அந்த வேலனின் ஒளி மிளிர்கிறதே !!//

    ஆஹா, இதோ வருகிறேன், சுப்பு தாத்தா...

    ReplyDelete
  28. //வார்த்தையில் விளையாடியிருக்கிறீர்கள். நன்று. பாராட்டுக்கள்.//

    நல்வரவு ஷக்திப்ரபா. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  29. //அந்த வேலனின் ஒளி மிளிர்கிறதே !!//

    பார்த்து, கேட்டு, மகிழ்ந்தேன். மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  30. அழகு

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. //வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்//

    அதுதானக்கா விடிவெள்ளி.....கிழக்கு வெளுக்கும் சூரியனும் வருவான், ஒளியை அள்ளித்தருவான்....சொல்ப வெயிட் மாடி :-)

    ReplyDelete
  33. //அழகு//

    வாங்க கார்த்திக் கிருஷ்ணா. முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    அழகு - உங்க மயிலிறகும்தான் :)

    ReplyDelete
  34. //அதுதானக்கா விடிவெள்ளி.....கிழக்கு வெளுக்கும் சூரியனும் வருவான், ஒளியை அள்ளித்தருவான்....சொல்ப வெயிட் மாடி :-)//

    ஆஹா, மௌலீ... நீங்க சொன்ன விதமும் விஷயமும் மனசுக்குக் குளிர்ச்சியா இருந்தது :) நன்றிப்பா.

    ReplyDelete
  35. வெட்ட வெளிச் சிறையின்
    கரிய வானத்தில்
    போனால் போகிறதென்று
    கண் சிமிட்டிச் சிரிக்கிறது
    ஒரே ஒரு நட்சத்திரம்

    <<<<<<<<<<<<<<<<<<<<<

    அதுதான் கடவுள்!

    நல்லகவிதை கவிநயா! சிந்த‌னை புதிது!

    ReplyDelete
  36. //அதுதான் கடவுள்! //

    வாங்க ஷையக்கா. ரொம்ப அழகா சொன்னீங்க! வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)